பக்கங்கள்

01 அக்டோபர் 2010

தமிழ்ப் படமும் வேண்டாம்… தமிழ் ஹீரோக்களும் வேண்டாம்! – அனுஷ்கா.

சிங்கம் படம் ரிலீஸுக்குத் தயாரான நேரம்… அனுஷ்காவைப் பற்றி சில செய்திகள் இப்படி கசிந்தன.
“அனுஷ்கா மகா உயரமான நடிகையாச்சே…அவரை ஹீரோயினாக்குவதில் எக்கச்சக்க பிரச்சினைகள்”, “ஒத்துழைப்பு சரியில்லை” என்றெல்லாம் சிங்கம் படத்தின் முக்கியப் புள்ளி ஒருவர் சொன்னதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் கடுப்பான அனுஷ்கா, இனி தமிழில், அதுவும் உயரம் குறைந்த ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற முடிவோடு தெலுங்குக்கே திரும்பினார்.
தமிழில் பல பெரிய தயாரிப்பாளர்கள் அழைத்தும் நடிக்க மறுத்துவிட்ட அவரை, சமாதானப்படுத்தி அழைத்து வந்தது சிம்புவும் ‘வானம்’ பட இயக்குநர் கிரிஷ்ஷும்தானாம்.
இப்போது மேலும் நான்கு புதிய தமிழ்ப் படங்களில் நடிக்குமாறு பெரும் தொகையுடன் அனுஷ்காவை அணுகியுள்ளனர் தயாரிப்பாளர்கள்.
அவர்களிடம், “வேண்டவே வேண்டாம். உங்கள் பட நாயகர்கள் உயரம் குறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் பழியை என்மீது போடுவார்கள். எதற்கு வம்பு… எனக்கு தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் உள்ளன” என்று பெரிய கும்பிடு போட்டாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக