பக்கங்கள்

30 அக்டோபர் 2010

விமானம் தாமதம்,கடுப்பான லட்சுமி ராய்.

தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் பயணமான லட்சுமிராய், தனியார் விமான சேவை குளறுபடியால் தன் லக்கேஜைத் தொலைத்து, விமானத்தையும் தவறவிட்டார்.
இதனால் சொந்த ஊருக்குப் போகாமல் மும்பையில் சகோதரி வீட்டிலேயே தங்கிவிட்டார்.
இதுகுறித்து லட்சுமிராய் கூறுகையில், "தீபாவளி பண்டிகை கொண்டாட எனது சொந்த ஊருக்கு செல்ல ஆசைப்பட்டேன். பெல்காம் செல்ல நேரடி விமானம் கிடையாது. சென்னையில் இருந்து பெங்களூர் சென்று, அங்கிருந்து மும்பை போய் காரில் பெல்காம் செல்லத் திட்டமிட்டேன்.
சென்னையில் தனியார் விமான நிலையத்தில் காலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், 7.30 மணிக்குதான் கிளம்பியது. தாமதம் காரணமாக நான் பெங்களூரில் இருந்து மும்பை செல்லும் விமானத்தை தவறவிட்டு விடுவேனே என்று அதிகாரிகளிடம் முறையிட்டேன். அவர்களோ சென்னை விமானம் பெங்களூர் போய் சேர்ந்த பிறகு தான் மும்பைக்கு செல்லும் விமானம் புறப்படும் என்றனர்.
ஆனால் பெங்களூர் சென்று இறங்கியபோது மும்பை விமானம் முன் கூட்டியே கிளம்பி போய் இருந்தது. நான் அதிர்ந்து போனேன். விமான நிலைய அதிகாரிகள் நாளை இதே நேரத்தில் கிளம்பும் விமானத்தில் உங்களை மும்பை அனுப்பி வைக்கிறோம் என்றனர். பெங்களூரிலிருந்து மும்பை போக ஒரு நாள் பெங்களூரில் காத்திருக்க முடியுமா?
எனக்கு ஆத்திரமாக வந்தது. தயாரிப்பு நிறுவனமொன்றில் சொல்லி மும்பைக்கு வேறு டிக்கெட் எடுத்து பயணமானேன். விமான நிலையத்தில் இறங்கியபோது எனது லக்கேஜ் மாயமாகி இருந்தது. வாழ்க்கையே வெறுத்துப் போனது.
இதனால் என் தீபாவளி ட்ரிப்பையே ரத்து செய்துவிட்டேன். மும்பையில் உள்ள எனது சகோதரி வீட்டில்தான் இந்த ஆண்டு தீபாவளி...", என்றார் கோபத்துடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக