பக்கங்கள்

27 அக்டோபர் 2010

விக்ரம் - அனுஷ்கா ஜோடி சேரும் தெய்வ மகன்!

மதராஸபட்டினம் புகழ் விஜய் இயக்க, விக்ரம் - அனுஷ்கா முதல்முறையாக ஜோடி சேரும் தெய்வ மகன் படப்பிடிப்பு துவஙகியது.
அனுஷ்காவின் உயரமும், வாளிப்பான உடலமைப்பும்தான் அவரது ப்ளஸ் என்பதால் தெலுங்கில் வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் தமிழிலோ அவரது உயரமே எதிரியாகிவிட்டது.
உயரம் குறைந்த நாயகர்கள், அரையடி ஸ்டூல் அளவுக்கு ஷூ போட்டுக் கொண்டு அவருடன் நடிக்கவேண்டிய நிலை உள்ளதால், 'அனுஷ்காவா, வேண்டாம்... பக்கத்தில் நின்று பேசக் கூட முடியாது (?!)' என்று ஓரங்கட்டுகிறார்களாம். இப்படி அனுஷ்கா இழந்த வாய்ப்புகள் நான்கைந்து இருக்கும் என்கிறார்கள்.
ஆனால் இயக்குநர் விஜய்க்கு அந்த கஷ்டமில்லை தெய்வமகன் படத்தில். இந்தப் பட நாயகன் விக்ரமுக்கு சரியான ஜோடி எனும் அளவு படுபாந்தமாக அமைந்துள்ளதாம் இருவரின் பொருத்தமும்.
இந்தப் படத்தில் 7 வயது மகளை மீட்கப் போராடும் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் விக்ரம். அவருக்கு உதவும் நேர்மையான வக்கீலாக வருகிறாராம் அனுஷ்கா. 2001-ல் வெளியான 'ஐயாம் ஸாம்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் இது என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக