சினிமா நகைச்சுவை நடிகரும், அதிமுகவில்கொள்கை பரப்பு செயலாளருமான எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் காலமானார். திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மன்னார்குடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தார்.
அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
69 வயதாகும் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் 1986ம் ஆண்டு பாலைவன ரோஜாக்கள் படத்தில் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.
இவர் பாட்டி சொல்லைத் தட்டாதே, மாப்பிள்ளை, உழைப்பாளி, ஆத்தா உன் கோவிலிலே, சின்னப்பதாஸ், காக்கை சிறகினிலே, கதாநாயகன், நாடோடி பாட்டுக்காரன், தங்கைக்கோர் கீதம், வண்டிச்சோலை சின்னராசு, தங்கமான புருஷன், உனக்காக எல்லாம் உனக்காக, உயிருள்ளவரை உஷா, காதல் ரோஜாவே, ஒன்ஸ்மோர், புதிய மன்னர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக