நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள் நல்லுள்ளங்களாக இருப்பின், துன்பங்களில் கூட இன்பங்களை காணலாம்.
29 மார்ச் 2011
அம்மாவாகிறார் சினேகா!
தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு போகும் நடிகைகளின் வரிசை அதிகரித்து கொண்டே போகிறது. த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா, ப்ரியாமணி, ஆகியோரை தொடர்ந்து இப்போது நடிகை சினேகாவும் இவர்கள் வரிசையில் சேர்ந்துள்ளார். தமிழில் ஆனந்தம், புன்னகை தேசம், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, பவானி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சினேகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழியிலும் நடித்துள்ள சினேகா இப்போது இந்தியிலும் நடிக்க போகிறார். டைரக்டர் ரேவதி வர்மா இயக்கப்போகும் “மேட் டாட்” என்ற படத்தில் நஸ்ருதீன் ஷாவின் மனைவியாகவும், ஆயிஷா தாகியாவின் அம்மாவும் நடிக்கிறார். படம்குறித்து டைரக்டர் ரேவதி வர்மா கூறுகையில் இந்தபடத்தில் சினேகாவின் கேரக்டர் 1980களில் வாழ்ந்தது போன்று உருவாக்கப்பட இருக்கிறது. இந்தகேரக்டருக்கு சினேகாதான் பொறுத்தமானவர் என்பதால் அவரை தேர்வு செய்தேன். முன்னதாக ராமாயணம் படத்தில் சீதாவாக சினேகாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றார். படத்தில் நடிப்பதுகுறித்து சினேகா கூறியதாவது, ரேவதி வர்மா சொல்வது உண்மைதான். ராமாயணம் படத்திலே நான் இந்தியில் நடிப்பதாக இருந்தது. இதுதொடர்பாக ராஜ்குமார் சந்தோஷி என்னிடம் அனுகினார். ஆனால் சில பல காரணங்களால் நடிக்க முடியவில்லை. இப்போது “மேட் டாட்” படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாக இருக்கிறேன். எந்த மொழியில் நடித்தாலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். அதுபோல இந்தபடம் எனக்கு இந்தியில் ஒரு நல்ல இடத்தை பெற்று தரும் என்கிறார். இதுவரை தென்இந்திய மொழி படங்களில் ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்த சினேகா, இப்போது முதன்முறையாக இந்தியில் அம்மா கேரக்டரில் நடிக்கபோகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக