பக்கங்கள்

03 மார்ச் 2011

இந்தியில் மாதவனுக்கு ஜோடியாகிறார் அனன்யா!

ஜெனிலியா, அனுஷ்கா வரிசையில் இப்போது இந்தியி்ல அடியெடுத்து வைக்கிறார் நடிகை அனன்யா.
மலையாள நடிகையான இவர், சசிக்குமாரின் நாடோடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். சமீபத்தில் தனுஷூடன் இவர் நடித்த சீடன் வெளியாகியுள்ளது.
மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் கைநிறையப் படங்கள் வைத்துள்ள அனன்யா, இப்போது இந்தி திரையுலகிலும் கால்பதிக்கிறார். இந்தியில் மாதவனுடன் சேர்ந்து ஒரு படம் நடிக்கிறார். இதற்காக அவர் இந்தியும் கற்று வருகிறார்.
பாலிவுட்டுக்குப் போவது குறித்து அனன்யா கூறுகையில், "இந்தியில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. அதுவும் மாதவனுடன் இணைந்து நடிப்பது கூடுதல் சந்தோஷத்தை கொடுக்கிறது. இந்தியில் நடிப்பதற்காக அந்த மொழியைக் கற்று வருகிறேன்.
ஏற்கனவே இந்தி கொஞ்சம், கொஞ்சம் தெரியும், இப்போது அதனை முழுமையாக கற்று வருகிறேன். இந்தியில் நடித்தாலும் தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நடிப்பேன்", என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக