பக்கங்கள்

27 டிசம்பர் 2012

பாரம் தாங்காமல் விழுந்த ஜோடிகள்!

உனக்கு 20 எனக்கு 40
தடதடவென்று ஓடிவந்த ஹீரோயின், ஹீரோ இடுப்பின் மீது டக்கென்று ஏறினார். ஆனால் நடிகையின் பாரம் தாங்காமல் நிலை குலைந்த ஹீரோ பொத்தென்று விழுந்தார்.அவர் மீ்து ஹீரோயினும் விழுந்தார். ரெண்டு பேருக்கும் லேசான காயமாம். உனக்கு 20 எனக்கு 40 என்ற படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் இந்தக் கூத்து நடந்ததாம். கொடைக்கானலில் வைத்து இந்த விபத்து நேர்ந்துள்ளது. இடுப்பு ஒடிந்து விழுந்த ஹீரோவின் பெயர் அக்ஷய். அவர் மீது ஏறிய நடிகையின் பெயர் ஷாலினி.இப்படத்தின் கதை ஏடாகூடமானது. அதாவது கிட்டத்தட்ட அபூர்வ ராகங்கள் கதை போலத்தான். ஹீரோயினின் தந்தை மீது ஹீரோயினின் தோழிக்கு காதல் வருகிறதாம். அது என்னாகிறது, எங்கு போய் முடிகிறது என்பதுதான் படத்தின் கதையாம்.படத்தின் ஹீரோயின்களாக ஷாலினியும், அம்ருதாவும் நடிக்கிறார்கள்.இதில் ஷாலினியின் தந்தை மீதுதான் அம்ருதா காதல் கொள்கிறார்.இப்படத்தின் ஒரு பாடல் காட்சியை சமீபத்தில் கொடைக்கானலில் படமாக்கினர். அப்போதுதான் ஹீரோ அக்ஷயின் இடுப்பின் மீது ஷாலினி ஓடி வந்து ஏறுவது போன்ற காட்சியைச் சுட்டனர்.ரிஹர்சல் பார்த்த பின்னரே காட்சிக்குப் போனார்கள். ஷாலினி வேகமாக ஓடி வந்து அக்ஷய்இடுப்பின் மீது தவ்வி உட்கார்ந்தார். ஆனால் அப்போது பாரம் தாங்க முடியாமல் அக்ஷய் கீழே விழ, அவர் மீது ஷாலினியும் விழுந்தார்.விழுந்த வேகத்தில்இரண்டு பேருக்குமே அடிபட்டு விட்டது. படக்குழுவினர் ஓடி வந்து இருவரையும் தூக்கி விட்டனர். காலை உதறச் செய்தனர். பின்னர் முதலுதவிக்குப் பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.ஹீரோ கூட லேசான காயத்துடன் தப்பி விட்டார். ஆனால் ஹீரோயின் ஷாலினிக்குத்தான் இடுப்பில் பலத்த அடிபட்டு காயமாகி விட்டதாம்.

26 டிசம்பர் 2012

தமன்னாவின் சம்பளம் 1.5கோடி!

விஷ்ணுவர்த்தன் திரைப்படத்தை தொடர்ந்து அஜீத் அடுத்ததாக சிறுத்தை இயக்குனர் சிவா படத்தில் நடிக்கிறார். இப்படத்தை விஜய வாஹினி நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முதன் முறையாக இந்தப் படத்தின் மூலம் அஜீத்துடன் ஜோடி சேருகிறார் நடிகை தமன்னா. இதற்காக அவர் ரூ. 1.5 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. வேங்கை படத்துக்குப் பிறகு தெலுங்கு திரையுலகிற்கு முக்கியம் கொடுத்து வரும் தமன்னா தற்போது அஜீத்துடன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

20 டிசம்பர் 2012

கூவத்தில் குதித்து நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை!

 Nithyasri Mahadevan S Husband Commits Suicide பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயற்சித்ததால் கர்நாடக இசையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். கர்நாடக இசைப் பாடகியான இவர் பெரும்பாலான திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். இவரது கணவர் மகாதேவன் இன்று காலையில் சென்னை கோட்டூர் பாலத்தில் காரில் வந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்.. இன்று காலை மகாதேவன் ஒரு சொகுசுக் காரில் கோட்டூர்புரம் வந்ததாகவும். அங்கு பாலத்தில் வண்டியைநிறுத்தி விட்டு கூவம் ஆற்றில் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சாலையில் சென்றோர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்தனர். நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் இறந்த உடலே சிக்கியது. அவரது உடலை சோதனை செய்ததில் அவர் பின்னணிப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் என்று தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி இதனிடைய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேள்விப்பட்ட உடன் நித்யஸ்ரீயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து அவரை உறவினர்கள் காப்பாற்றி உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 டிசம்பர் 2012

கவர்ச்சியில் பைரவி கோஸ்வாமி..!

ஏற்கனவே கவர்ச்சி லட்டுகளின் திணிப்பாலும், குவிப்பாலும் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் மேலும் ஒரு கவர்ச்சி கொடிமுந்திரியைக் கோர்த்து விட்டுள்ளனர். அவர்தான் பைரவி கோஸ்வாமி. இசை என் வாழ்க்கை, அதுதான் என் மூச்சு என்று கூறி வருபவர் பைரவி கோஸ்வாமி, போல்டு அன்டு ப்யூட்டிபுல் என்று கவர்ச்சிக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் கோஸ்வாமி ஏற்கனவே மாடலாக இருந்தபோதும், இந்திப் படங்களில் நடித்த போதும் கவர்ச்சியை கலந்து கட்டி அடித்தவர். ஏற்கனவே பீஜா, மை ஃப்ரண்ட் கணேசா படத்தில் கவர்ச்சியில் கலக்கியவர்தான் பைரவி. பட்டி ஆன் சுட்டி படத்திலும் கலக்கியவர். இப்போது சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.தமிழ் சினிமாவில் எப்படி பாபு கணேஷ் அந்த சாதனை, இந்த சாதனை என்று பயமுறுத்தி கலக்குகிறாரோ அதேபோலத்தான் இந்த சதீஷ் ரெட்டியும். இவரது படம்தான் த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ். வீணா மாலிக் முக்கிய ரோலில் நடிக்கிறார்.இப்படத்தில் கவர்ச்சிக்கே முக்கியப் பாத்திரம் தரப்படுவதாக தெரிகிறது. காரணம், வீணா மாலிக் உள்பட பல கவர்ச்சி நடிகைகளை அடுத்தடுத்து புக் செய்து கொண்டிருக்கிறார் தயாரிப்பாளரான ரெட்டியும், இயக்குநரான ஹாரூன் ரஷீத்தும்.அந்த வரிசையில் லேட்டஸ்டாக வந்துள்ளார் பைரவி கோஸ்வாமி. இவரது பெயரைச் சொன்னாலே புல்லரித்துப் போகும். அப்படி ஒரு கவர்ச்சிக்குச் சொந்தக்காரப் பெண்ணாம் இவர்.த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் இப்போது பைரவியையும் சேர்த்து விட்டனர். இப்படத்தில் அவர் செக்ஸியான போஸ்கள், பிகினி உடை நடனங்கள் என தனது அழகை அள்ளிக் கொட்டப் போகிறாராம்.பைரவி கவர்ச்சியில் மட்டுமல்லாமல் பேச்சிலும் கூட செம தில்லாகத்தான் இருக்கிறார். அவர் கூறுகையில், நான் ரொம்ப போல்டானா ஆள். எனவே போல்டான சீன்களில் நடிக்க நான் தயங்கியதே கிடையாது. ரசிகர்களை மகிழ்விப்பது மட்டுமே எனது ஒரே வேலை. எதைக் காட்டினால் ரசிகர்கள் மகிழ்வார்களோ அதைக் காட்ட நான் தயங்கவே மாட்டேன்.எனக்கு இசை என்றால் கொள்ளைப் பிரியம். இசைக்கு அடிமை நான். இசை இல்லாமல் இருக்க முடியாது. அதுதான் எனது வாழ்க்கையும் கூட என்றார் பைரவி.பைரவிக்கு கவர்ச்சி புதிய விஷயமே இல்லை. மிஸ்டர் பட்டி ஆன் சுட்டி என்ற படத்தில் கவர்ச்சியில் ரசிகர்களை நனைய விட்டிருந்தார் பைரவி. அப்படத்தில் அனுபம் கெரும், அமிதாப் பச்சனும் நடித்திருந்தனர். என்னென்ன பண்ணத் திட்டமிட்டிருக்கிறாரோ பைரவி...!

09 டிசம்பர் 2012

மனம் கோணாதபடி கவனித்துக் கொள்ளுங்கள்!

அடிதடி, மிரட்டிப் பறித்தல், அச்சுறுத்தல் என கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி, “எனக்கு எதிராக பெரிய சதியே நடைபெறுகிறது. அதனால்தான் என் மீது அடுத்தடுத்து வழக்குகள் போடப்படுகின்றன. அதை சட்டப்படி சந்திப்பேன்” என்று கூறியுள்ளார். தற்போது, 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் புவனேஸ்வரி. அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாயவுள்ளதாக கூறப்படுகிறது. சைதாப்பேட்டை கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்துள்ளனர். புவனேஸ்வரி தொடர்பாக, சிறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய ஒரு உயர் போலீஸ் அதிகாரி, “அவரை சிறையில் மனம் கோணாதபடி கவனித்துக் கொள்ளுங்கள்” என கேட்டுக் கொண்டதாக, ஒரு தகவல் அடிபடுகிறது. தமக்கு எதிரான சதித்திட்டத்தை போட்டிருப்பது யார் என்பதை புவனேஸ்வரி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

03 டிசம்பர் 2012

ஆறுதல் தருகிறது நீர்ப்பறவை!

ராமேஸ்வரம் பகுதி மீனவ மக்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறது நீர்ப்பறவை. கிளிநொச்சிப் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் கரைக்கு வந்த சிறுவன், அவன் வாழ்வு, காதல், கண்ணீர், மதம், குடும்பம் கடைசியாக எப்படி சாகடிக்கப்படுகிறான் என்பதை நீர்ப்பறவை காட்சிபடுத்துகிறது. ஆழமான கதாபாத்திரங்கள், அசரவைக்கும் நடிப்பு, அற்புதமான லொகேஷன், நெகிழவைக்கும் காட்சியமைப்புகள் என அனைத்து விதத்திலும் நீர்ப்பறவை பிரமிக்கவைக்கிறது. 80களில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு மீனவனின் கதை. ராமேஸ்வரக் கடலில் தத்தளிக்கும் ஒரு படகு, தன் குடும்பம் சுடப்பட்ட நிலையில் கிடக்க, அந்த பிணங்களைப் பார்த்தபடி ஒரு சிறுவன் அழுதுகொண்டே இருக்கிறான். அந்த படகு தமிழகத்தின் கரைவந்து சேர தமிழகத்தின் கிறிஸ்தவ மீனவர் குடும்பத்தில் மகனாய் வாழ்கிறான் அந்த சிறுவன். அம்மா அதிக செல்லம் கொடுத்து வளர்க்க, குடிபோதைக்கு அடிமையாகிறான். கைநடுக்கம் எடுத்தால் சாராயம் குடிக்க ஓடிவிடுவான். இப்படி மீன்பிடி தொழிலுக்குப் போகாமல் சாராயம் குடித்து ஊருக்குள் கெட்ட பேரை சம்பாதித்து வைத்தபடியே சுற்றித்திருகிறான் அருளப்பசாமி (விஷ்ணு). இந்த குடிகார அருளப்பசாமியின் வாழ்க்கையில் அதிசயமாய் வந்து சேர்கிறாள் எஸ்தர் (சுனைனா). குடிப்பதற்கு எஸ்தரிடம் அருளப்பசாமி போய் சொல்லி காசு கேட்க, அவன் சொன்னது பொய் என்பது எஸ்தருக்கு பின்னர் தான் தெரியவருகிறது. ஊரே திட்டித்தீர்க்கும் அருளப்பசாமியின் தலையில் கைவைத்து ‘ஆண்டவரே இவரை மன்னியும், இவரை மாற்றும், இந்த மகனை உம்மிடம் ஒப்படைக்கிறோம்’ என்று ஜெபம் பண்ணுகிறாள், அந்த நொடி ஏதோ ஒரு மாற்றத்தை தனக்குள் உண்ர்கிறான் அருளப்பசாமி. அவன் திருந்தி வாழவும், சொந்தமாக ஒரு படகு வாங்கி தொழில் செய்யவும் காரணமாய் இருக்கிறாள் எஸ்தர். சிறுவயதிலிருந்தே தேவாலயத்தில் வளர்ந்த எஸ்தருக்கும், அருளப்பசாமிக்கும் காதல் மலர்கிறது. உருகி உருகி காதலித்தவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மகனும் பிறக்கிறான். ஒரு நாள் அதிகாலையில் தன் மனைவியிடம் இன்னொரு குழந்தைக்கு அனுமதி கேட்க, அதெல்லாம் இப்ப முடியாது முதல்ல கடலுக்கு போங்க என்று வம்படியாக மீன்பிடிக்க கடலுக்கு அனுப்பிவைக்கிறாள். சிரித்துக்கொண்டே கடலுக்குள் சென்ற அருளப்பசாமி திரும்ப கரைக்கு வரவே இல்லை! அடுத்து என்ன நடக்கும் என்பதை நாம் ஊகிக்க முடிந்தாலும், அந்த காட்சிகள் பார்க்கும் போது இதயம் கனக்கிறது. தன் கணவருக்கு நடந்த இந்த சோகத்தை பிளாஷ் பேக்-காக சொல்கிறார் நிகழ்கால எஸ்தர் நந்திதாதாஸ். தன் கணவரை தானே கொன்று தன் வீட்டில் புதைத்துவிட்டார் என்று நந்திதாதாஸ் குற்றம் சாட்டப்படுவதிலிருந்து துவங்குகிறது திரைக்கதை. இலங்கை கடற்படையினறால் தமிழக மீனவர் சுட்டு கொலை என்ற செய்தி நமக்கு பழக்கப்பட்டுப் போய்யிருக்கலாம். ஒரு மீனவன் சுட்டுக்கொல்லப்பட்டான் என்ற செய்திக்குள் இவ்வளவு உணர்வுபூர்வமான ஒரு வாழ்க்கை இருப்பதை இயக்குனர் சீனுராமசாமி நமக்கு உணர்த்துகிறார். தமிழன் என்கிற ஒரே காரணத்திற்காக சுட்டுக்கொல்லப்படும் அந்த ஜீவன்களுக்கு நாம் ஒரு துளி கண்ணீர் விட நீர்ப்பறவை ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை. படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களுமே அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. நல்ல நடிகர்களை தேர்வு செய்த இயக்குனருக்கு இன்னொரு சபாஷ். சரண்யா, தம்பி ராமைய்யா, நந்திதா தாஸ், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, அழகம்பெருமாள், ப்ளாக் பாண்டி, ’பூ’ராம் என அனைவரும் நடிப்பில் வெளுத்துவாங்குகிறார்கள். இந்தக் கதாபாத்திரத்தை விஷ்ணுவை தவிர வேறு யாராவது இவ்வளவு நேர்த்தியாக நடித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். சுனைனா அமைதியான கிறிஸ்துவப் பெண்ணாக அசத்துகிறார். கரைக்கு கொண்டுவரப்பட்ட சிறுவனிடம் நீ எந்த ஊருப்பா என்று கேட்க, அவன் கிளிநொச்சி என்று பதில் சொன்னதும் ‘யார் வீட்டு மகனோ மகனோ, தாய்வீடு வந்தது பிள்ளை...’ என்று வைரமுத்துவின் வரிகள் இசையாய் வந்து விழும் நேரம் இதயத்தில் மழையடிக்கிறது. மதம் வெவ்வேறாக இருந்தாலும் மனிதர்கள் ஒற்றுமையாய் இருக்கிறார்கள் என்பதை மிகவும் நேர்த்தியாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். இஸ்லாமியராக இருக்கும் சமுத்திரக்கனியிடம் ‘நான் கும்பிடுகிற ஏசய்யாவா உங்கள நெனைகிறேன்’ என்று விஷ்ணுவின் அப்பா உதவி கேட்பதும், விஷ்ணுவுக்கு படகு செய்துகொடுக்கும் சமுத்திரக்கனி அதில் ‘தேவனுக்கே மகிமை’ என்று எழுதி வைப்பதும் எதார்த்தங்களாக இருந்தாலும் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. விஷ்ணுவின் குடிபழக்கத்தை குணமாக்கும் மருத்துவர் நெற்றியில் விபூதி வைத்திருப்பதையும், அந்த மருத்துவமனையில் காஞ்சி சங்கராச்சாரியாரின் போட்டோ இருப்பதையும் நாம் கவனிக்கமுடிகிறது. அவருக்கு விஷ்ணுவின் அப்பா ஒரு பெரிய மீனை பரிசாக கொடுக்கும் காட்சி நெகிழவைக்கிறது. ஜெயமோகனின் வசனங்கள் பல இடங்களில் பளிச்சிடுகிறது. மீனவன சுட்டுக் கொன்னுடா, பத்திரிக்கையில கூட இந்திய மீனவன்னு போடாம தமிழக மீனவன்னு தலைப்பப் போட்டு மேட்டரை முடிச்சுடறாங்க என்பதும், என் கணவர் உடம்பு மட்டும் தான் கரைக்கு வந்தது, உயிர் கடலுக்குள்ள தான் இருக்கு என்று நந்திதாதாஸ் சொல்வதும் நச் வசனங்கள். குடிப்பழக்கத்தை ஒருத்தன் நிறுத்திட்டான்னா, ஒன்னு அவனுக்கு அல்சர் வந்திருக்கும் இல்ல, காதல் வந்திருக்கும் என்று ஜோசப் பாரதி என்ற கதாபாத்திரத்தில் வரும் தம்பி ராமைய்யா அடிக்கடி காமெடி வெடி போடுகிறார். நிறம் மாறும் கடலை நிஜம் மாறாமல் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். எத்தனையோ மசாலா படங்களை தயாரித்திருந்தாலும் ‘நீர்ப்பறவை’ படத்தை தயாரித்ததால் உதயநிதியின் மேல் மரியாதை அதிகரிக்கிறது. எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் தமிழன் என்ற காரணத்திற்காக சுடப்படும் மீனவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை அரசாங்கமே எடுக்க முடியாத நிலையில், நீர்ப்பறவை திரைப்படத்தில் என்ன சொல்லிவிட முடியும். இருந்தாலும் தமிழ் சினிமாவின் பார்வை இதன் மீது திரும்பி இருப்பது பாராட்டுக்குறியது. எவ்வளவோ ரத்தம் பார்த்துவிட்ட தமிழனுக்கு ஒரு துளி கண்ணீராய் ஆறுதல் தருகிறது நீர்ப்பறவை!