பக்கங்கள்

24 நவம்பர் 2012

ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நகை திருடியது ஏன்?

நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நகை திருடியது ஏன் என, கைது செய்யப்பட்டுள்ள வேலைக்கார பெண் ஜோதி, பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். சென்னை ஈச்சம்பாக்கத்தில் வசிக்கும், சினிமா நடிகை ரம்யா கிருஷ்ணனின் தாய் நித்யா, 64. படுக்கை அறை அலமாறியில் வைக்கப்பட்டு இருந்த, வைர வளையல் உள்பட, 35 சவரன் திருடு போயிருப்பதாக கொடுத்த புகாரின் பேரில், நீலாங்கரை போலீசார் , வேலைக்கார பெண் ஜோதி, 22.யை நேற்று கைது செய்துள்ளனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:ஆந்திர மாநிலம் குண்டூரில் பெற்றோர் வசிக்கின்றனர். எனக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது.வரதட்சணையாக, 50 சவரன் கேட்டனர். ஏழ்மை நிலையில் இருக்கும், என் தந்தையால் அவ்வளவு நகை போட முடியாது என்பதால், என்ன செய்வதென்று தவித்தேன்.வேலைக்கார பெண்ணாக இருந்த போதிலும், சினிமா நடிகை ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தாரின் நம்பிக்கையை பெற்று இருந்தேன்.அந்த வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் எனக்கு அத்துபடி. படுக்கை அறை அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த வைர வளையல், தங்க வளையல், சிவப்பு, பச்சை கல் பதித்த நெக்லஸ், தங்க நாணயங்கள் என, சிறுக சிறுக திருடினேன். 35 சவரன் மட்டும் திருடியிருந்ததால், மீதிதேவைப்பட்ட, 15 சவரனையும் திருடும் வேலையை துவங்கினேன்.பச்சை கல் பதித்த வைர வளையலை, நடிகை ரம்யா கிருஷ்ணன், விரும்பி அணிவார். அந்த நகையை, நான் திருடிவிட்டதால், காணாமல், வீடு முழுக்க தேடினர். மாட்டிக் கொள்வோம் என, பயந்து, ஆந்திராவுக்கு தப்ப முயன்ற போது போலீசில் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு ஜோதி, போலீசில் தெரிவித்து உள்ளார்.

11 நவம்பர் 2012

ஸ்ரீரம்யா தமிழுக்கு வருகிறார்!

தெலுங்குப் படம் ஒன்றுக்காக, காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக நிஜமாகவே மொட்டை போட்டுக் கலக்கிய நடிகை ஸ்ரீரம்யா தற்போது தமிழுக்கு வந்துள்ளார். யமுனா படத்தின் நாயகிதான் இந்த ஸ்ரீரம்யா.மணிரத்தினத்தின் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கணேஷ்பாபு. இவர் இப்போது இயக்குநராகியுள்ளார். இவரது முதல் படம்தான் யமுனா. இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ள தெலுங்கு நடிகை ஸ்ரீரம்யா குறித்து மிகப் பெருமையாக பேசுகிறார் கணேஷ் குமார். ஏன் கணேஷ் என்று கேட்டால் அவர் சொன்ன பதிலைப் பாருங்கள். பல முன்னணி நாயகிகளை நான் இப்படத்திற்காக அணுகினேன். ஆனால் அவர்கள் நடிக்க மறுத்து விட்டார்கள்.சிலர் நடிக்க முன்வந்தபோதும் அவர்கள் பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்தவில்லை.இந்த நிலையில்தான் ஸ்ரீரம்யாவை நான் அணுகினேன். ஸ்ரீரம்யா 1940 ல ஒக கிராமம் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றவர். மிகச் சிறப்பான நடிகை.அந்தப் படத்தில் நிஜமாகவே மொட்டை போட்டு அதிர வைத்தவர்.அவ்வளவு சிறிய வயதில் தலையை மொட்டை அடிக்க ஒரு பெண்ணுக்கு மனசே வராது. ஆனால் பாத்திரம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக மொட்டை போட்டுக் கொண்டு நடித்தவர் ரம்யா. இதனால்தான் அவரையே எனது படத்தின் நாயகியாக்கினேன் என்றார் கணேஷ் குமார்.யமுனா படத்தின் கதையைச் சொன்னதுமே டக்கென்று நான் இதில் நடிக்கிறேன் என்று சொல்லி விட்டாராம் ஸ்ரீரம்யாவும். எனவே இதனால் தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தெரிய வருவது என்னவெனில் தெலுங்குத் திரையுலகிலிருந்து மேலும் ஒரு நல்ல நடிகை வருகிறார் என்பதே....

04 நவம்பர் 2012

சர்ச்சையை ஏற்படுத்திய பிரேசில் அழகி.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கவர்ச்சி மாடல் அழகியான நானா கோவியா, சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட நியூயோர்க் நகரில், சேதத்திற்கு மத்தியில் நின்று புகைப்படமெடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அமெரிக்கா சோகத்தில் மூழ்கிக் கிடக்கும்போது இப்படியா அதை வைத்து விளம்பரம் தேடிக்கொள்வது என்று பலரும் அவரை கிண்டலடிக்கிறார்களாம். விழுந்து கிடக்கும் மரம், சேதாரங்களுக்கு மத்தியில் நின்றபடி விதம் விதமாக போஸ் கொடுத்துள்ளார் நானா. இந்த நிலையில் நானாவை விமர்சிக்கும் வகையிலும், அவரைத் திட்டுவதற்காகவும் ஏராளமானோர் பேஸ்புக் கணக்குகளைத் தொடங்கி அவரை சரமாரியாக திட்டி வருகின்றனராம். 30 வயதான நானா, பிளேபாய் பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் கொடுத்து முன்பு கலக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாண்டி புயல் சோகத்தை ஏற்படுத்திச் சென்ற ஒன்று. ஆனால் அதைக் கொண்டாடும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார் நானா. இது கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல், மலிவான செயலுமாகும் என்று பலரும் நானாவைத் திட்டி வருகின்றனர். அவரைக் கேலி செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்களில் கடலில் மூழ்கும் டைட்டானிக் கப்பல் அருகே நானா நிற்பது போலவும், உலகின் பல்வேறு அசம்பாவித சம்பவங்களைப் பார்த்து நானா இரசிப்பது போலவும் அவரது படத்தைப் போட்டுள்ளனராம்.