பக்கங்கள்

27 ஏப்ரல் 2013

பேசிக்கொண்டேயிருக்கும் அபிநயா!

அபினயா 
‘விழித்திரு’ படத்தில் ரேடியோ ஜாக்கியாக அபிநயா நடிக்கிறார். கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரபு, எரிகா பெர்னாண்டஸ், தன்ஷிகா, சாரா உட்பட பலர் நடிக்கும் படம், ‘விழித்திரு’. விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை இயக்கும் மீரா கதிரவன் கூறியதாவது: படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் நடந்துவருகிறது. இது திரில்லர் படம். இரவில் நடக்கும் கதை என்பதால் சென்னை சாலைகளில் இரவில் படம்பிடித்து வருகிறோம். படத்தில் அபிநயா, தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் ரேடியா ஜாக்கியாக வருகிறார். படத்தில் எஃப்.எம்மும் முக்கிய கேரக்டராக வருகிறது. படம் முழுவதும் பயணிக்கும் கேரக்டர் என்பதால் சில ரேடியோ ஜாக்கிகளைச் சந்தித்த அபிநயா, பயிற்சி பெற்றார். படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் இவரது கேரக்டரும் ஒன்றாக இருக்கும். டெக்னிக்கலாகவும் படம் புதுமையாக இருக்கும். குறிப்பாக ஒளிப்பதிவு மிரட்டும். இதற்காக விஜய் மில்டன் அதிகம் மெனக்கெடுகிறார். இவ்வாறு மீரா கதிரவன் கூறினார்.

26 ஏப்ரல் 2013

ஷ்ரேயாவால் கலங்கும் நடிகர்!

ஸ்ரேயா 
நடிகை, ஷ்ரேயாவை, இப்போதெல்லாம், தமிழில், அதிகமாக பார்க்க முடியவில்லை. ஆனால், தெலுங்கில் அம்மணி, ரவுண்டு கட்டி அடிக்கிறார். அதுவும், சாதா ரவுண்டுஅல்ல, அதிரடியான கவர்ச்சி ரவுண்டு. விரைவில் வெளியாகவுள்ள, "பவித்ரா என்ற படத்தில், கிளாமர் ராஜாங்கமே நடத்தியுள்ளாராம். ஷ்ரேயாவின் இந்த அதிரடி ராஜ்யம், தெலுங்கின் இளம் நடிகரான, ஆதிக்கு, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம். ஏற்கனவே, தெலுங்கில், இவர் நடித்த இரண்டு படங்களும், அவுட். இதனால், தற்போது நடித்துள்ள, "சுகுமாருடு என்ற படத்தை, பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இதில், பெரிய சோகம் என்னவென்றால், "பவித்ரா வெளியாகும் அதேநாளில் தான்,"சுகுமாருடு படமும் வெளியாகிறது. ஸ்ரேயாவின் கிளாமர் சுனாமியில், "சுகுமாருடு சுக்கு நூறாகி விடுமோ, என, பீதி அடைந்துள்ளாராம், அந்த இளம் நடிகர்.

23 ஏப்ரல் 2013

திமிர் பிடித்த அழகி நித்யாமேனன்!

நித்தியா மேனன் 
‘‘நான் டைரக்டு செய்த நடிகைகளில், நித்யாமேனன் திமிர் பிடித்த அழகி’’ என்று டைரக்டர் சேரன் கூறினார். ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் போன்ற தரமான கதையம்சம் உள்ள படங்களை இயக்கிய சேரன் இப்போது, ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார். சர்வானந்த் கதாநாயகனாகவும், நித்யாமேனன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இந்த படம் தொடர்பாக டைரக்டர் சேரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ‘‘மாயக்கண்ணாடி, பொக்கிஷம் ஆகிய படங்களின் இழப்பில் இருந்து வெளியே வருவதற்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதன்பிறகு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். என்றாலும், டைரக்டு செய்யவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்து கொண்டிருந்தது. எதையோ வைத்து சுமந்து கொண்டிருந்தது போல் உணர்ந்தேன். கிராமத்து படம் எடுத்தால், ஏளனமாக பார்க்கிறார்கள். சேரனுக்கு இதுதான் வரும் என்று நினைக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகிற மாதிரி ஒரு படம் டைரக்டு செய்ய ஆசைப்பட்டேன். இந்த படம், வேறு ஒரு சேரனை அடையாளப்படுத்துகிற படம். தொடர்ந்து வெற்றி படம் கொடுத்தால், ஒரு மரியாதை கிடைக்கும். தோல்வி படம் கொடுத்தால், திரும்பி பார்க்க மாட்டார்கள். இது இயல்பான விஷயம். இந்த படத்துக்காக சில கதாநாயகர்களை அணுகியபோது, நிராகரித்தார்கள். நான் கோபத்தை வெளிப்படுத்தவில்லை. ஆங்கிலத்தில் கதை சொன்னால்தான் சில கதாநாயகர்கள் ‘கால்ஷீட்’ கொடுக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் என்னை நான் நிரூபித்துக் காட்ட விரும்பினேன். நல்லவர்களை ஆண்டவன் கைவிட மாட்டான். திரும்ப திரும்ப தூக்கிவிட்டுக் கொண்டிருப்பான். ஐதராபாத் போய் சர்வானந்த், நித்யாமேனன் ஆகிய இருவரையும் பார்த்தேன். இரண்டு பேருமே நிறைய கதை கேட்டவர்கள், எளிதில் படங்களை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். இந்த படத்தின் கதையை கேட்டதும், இரண்டு பேரும் உடனே நடிக்க சம்மதித்தார்கள். சந்தானம் எனக்கு கொடுத்த மரியாதையைப் பார்த்து வியந்து போனேன். சாதித்து விட்டோம் என்ற கர்வம் அவரிடம் இல்லை. எங்க அம்மாவுக்கு உங்க படங்களை ரொம்ப பிடிக்கும். அவங்க, உங்க படத்தில் என்னை நடிக்கும்படி சொன்னார்கள் என்றார். நான் டைரக்டு செய்த நடிகைகளில் நித்யாமேனன், திமிர் பிடித்த அழகி. கதாபாத்திரமாக மாறக்கூடிய நடிகை. உணர்வுகளை அற்புதமாக முகத்துக்கு கொண்டு வருகிறவர்.’’ இவ்வாறு சேரன் கூறினார். பேட்டியின்போது நடிகர்கள் சர்வானந்த், கிட்டி, ஜெயப்பிரகாஷ், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக்குமார், யுகபாரதி, ஒளிப்பதிவாளர் சித்தார்த் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

21 ஏப்ரல் 2013

உள்ளூர் மாப்பிளைதான் வேணும்-த்ரிஷா

திரிஷா 
த்ரிஷா தனது அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளுக்கு நோ சொல்லிவிட்டாராம். திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் த்ரிஷா. ஆனால் இன்னமும் பட வாய்ப்புகள் குறைவில்லை. இந்நிலையில் த்ரிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் அவரது அம்மா உமா. மகளுக்காக மும்முரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார். இந்நிலையில் அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளை நிராகரித்துவிட்டாராம் த்ரிஷா. ஏன் த்ரிஷா, என்னாச்சு என்று கேட்டால், அவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர். வெளிநாடு என்பதால் தான் முடியாது என்று கூறிவிட்டேன். எனக்கு உள்ளூர் மாப்பிள்ளை தான் வேண்டும் என்றார். த்ரிஷாவுக்கு இந்த ஆண்டே திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. அவர் படங்களில் பிசியாக இருப்பதால் இந்த ஆண்டு திருமணம் நடப்பது கஷ்டம் என்று கூறப்படுகிறது. த்ரிஷா கல்யாணம் செய்யப்போகும் அந்த சென்னைக்காரர் யாரோ?

14 ஏப்ரல் 2013

என் வாழ்க்கை என் கையில்-அஞ்சலி

‘‘இனி என் வாழ்க்கை என் கையில் தான். திங்கட்கிழமை முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்’’ என்று நடிகை அஞ்சலி கூறினார்.

பரபரப்பு:
சென்னை வளசரவாக்கத்தில் சித்தி பாரதிதேவி குடும்பத்தினருடன் வசித்து வந்த நடிகை அஞ்சலி, கடந்த 8–ந்தேதி திடீரென்று வீட்டைவிட்டு வெளியேறினார். ஐதராபாத்தில் இருந்தபடி போன் மூலம் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ‘நான் இதுவரை அம்மா என்று அழைத்து வந்த பாரதிதேவி, என்னை பெற்ற அம்மா அல்ல. என் அம்மாவின் தங்கை. அவரும், டைரக்டர் களஞ்சியமும் சேர்ந்து, என்னை கொடுமைப்படுத்தினார்கள். அவர்களால், என் உயிருக்கு ஆபத்து இருந்ததால், வீட்டைவிட்டு வெளியேறினேன்’ என்று அவர் கூறினார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் சித்தாப்பாவுடன் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அஞ்சலி அங்கிருந்தும் திடீரென்று மாயமானார். அவர் எங்கே இருக்கிறார், என்ன ஆனார்? என்பதும் மர்மமாக இருந்தது. காணாமல் போன அஞ்சலியை கண்டுபிடித்து தரும்படி அவருடைய சித்தி பாரதிதேவி, போலீசில் புகார் செய்தார். ஐகோர்ட்டிலும் ஒரு மனுதாக்கல் செய்தார்.

படப்பிடிப்பு:
அஞ்சலி ஏற்கனவே நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு, அவர் வராததால் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக படஅதிபர் சுரேஷ் ஐதராபாத் போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில், 2 நாட்களில் நான் போலீசார் முன்பு ஆஜராவேன் என்று அஞ்சலி கூறியிருந்தார். அதன்படி அவர், நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.

வாக்குமூலம்:
போலீஸ் கமிஷனரிடம், அஞ்சலி, ‘நான் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. மன அழுத்தத்தை குறைப்பதற்காகத்தான் வீட்டை விட்டு வெளியேறினேன். ஐதராபாத் அருகில் உள்ள என் தோழியின் சொந்த ஊரில் சில நாட்கள் தங்கியிருந்தேன்’ என்று அவர் வாக்குமூலம் அளித்தார். இந்த சூழ்நிலையில், நடிகை அஞ்சலிக்கு, படஅதிபர் சுரேஷ் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார். ‘இந்த படம் முடியும் வரை குடும்ப பிரச்சினைகளையும், சண்டைகளையும் தள்ளி வைத்துவிடு. படத்தை முடித்துக்கொடுக்கும் வரை எங்கள் அனுமதியில்லாமல் வெளியூர் செல்லக்கூடாது’ என்று நிபந்தனைகள் விதித்ததை தொடர்ந்து, அஞ்சலி ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார். அந்த ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. நாளை (திங்கட்கிழமை) அவர் சென்னை வந்து கோர்ட்டில் ஆஜராவார் என்று தெரிகிறது. இந்த நிலையில், தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில் நடிகை அஞ்சலி நேற்று தெலுங்கு டெலிவிஷன் சேனல்களுக்கு வீடியோ கேசட் அனுப்பி வைத்தார். டெலிவிஷனில் ஒளிபரப்பான அந்த வீடியோ கேசட்டில் அவர் கூறி இருப்பதாவது:–

மன்னிப்பு:
கடந்த சில நாட்களாக என் வாழ்க்கையில் எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்து விட்டன. அவை இப்போது முடிந்து விட்டன. அந்த சம்பவங்களால் என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்–நடிகைகள் ஆகியோர் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிரமத்தை கொடுத்ததற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் எழுந்த சர்ச்சைகளுக்காக மன்னிப்பு கோருகிறேன். என்னால் இனி யாருக்கும் எந்த கஷ்டமும் வராது. இக்கட்டான சமயத்தில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஊடகங்களுக்கும், ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய ஒத்துழைப்பும், ஆதரவும் எனக்கு எப்போதும் தேவை. என்னால் எனது குடும்பத்தினரும் வேதனைப்பட்டு உள்ளனர். அதற்காக வருந்துகிறேன்.

என் வாழ்க்கை என் கையில்:
இனி நான் சினிமா தொழிலில் முழு கவனம் செலுத்துவேன். இனி என் சினிமா வாழ்க்கையும், சொந்த வாழ்க்கையும் என் கையில்தான். அவற்றை நானே கவனித்துக் கொள்வேன். ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஓய்வு எடுத்துக்கொண்டு, திங்கட்கிழமை (நாளை) முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். புனேயில் திங்கட்கிழமை நடைபெறும் ‘போல் பச்சன் போல்’ இந்தி படத்தின் தெலுங்கு ‘ரீமேக்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். ‘பலுப்பு’ தெலுங்கு படத்தையும் விரைவில் முடித்துக்கொடுத்து விடுவேன். இவ்வாறு நடிகை அஞ்சலி கூறினார்.

10 ஏப்ரல் 2013

நான் பத்திரமாக இருக்கேன்-அஞ்சலி

ஹைதராபாத் ஹோட்டலில் இருந்து மாயமான நடிகை அஞ்சலி தனது தாய் பார்வதி தேவிக்கு போன் செய்து தான் பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அஞ்சலி தனது சித்தி பாரதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் மீது மோசடி புகார் தெரிவித்தார். இதையடுத்து சென்னையில் இருந்து வெளியேறிய அவர் போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஹைதராபாத் சென்று அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி ஷூட்டிங் சென்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் அவரைக் காணவில்லை. அவர் மாயனது குறித்து அவரது அண்ணன் ரவிசங்கர் மீது சந்தேகமாக உள்ளதாக அவரது சித்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஞ்சலி இன்று தனது அம்மா பார்வதிக்கு போன் செய்து தான் பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தான் இருக்கும் இடத்தை தெரிவிக்காத அவர் தற்போதைய பிரச்சனைகளால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதனால் தான் ஹோட்டலில் இருந்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

08 ஏப்ரல் 2013

'என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும்...!

என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும் அதற்கு என் சித்தியும் அவருக்கு நெருக்கமாக உள்ள டைரக்டர் களஞ்சியமும்தான் பொறுப்பு என்று நடிகை அஞ்சலி தெரிவித்தார். நடிகை அஞ்சலிக்கும், இத்தனை நாளாய் அவரது அம்மா என்று திரையுலகம் நினைத்துக் கொண்டிருந்த பாரதி என்ற பெண்மணிக்கும் கடும் சண்டை மூண்டுள்ளது. பாரதி உண்மையில் தனது தாய் இல்லை என்றும், சித்தி முறை உறவினர் என்றும் அஞ்சலி கூறியுள்ளார். மேலும் தான் சம்பாதித்த பணம் முழுவதையும் சித்தி பாரதியும் அவருக்கு நெருக்கமாக உள்ள இயக்குநர் களஞ்சியமும் அபகரித்துக் கொண்டதாகவும், தன் உயிருக்கு அவர்களால் ஆபத்து நேரக் கூடும் என்றும் அஞ்சலி அச்சம் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரின் அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்கவே ஹைதராபாதில் குடியேறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "என் குடும்பத்தினருக்கு செய்யாத பல விஷயங்களை என் சித்தி குடும்பத்தினருக்கு செய்தேன். என் உடன்பிறந்தவர்களைக் கூட நான் பார்ப்பதில்லை. எல்லாமே சித்திக்குத்தான் கொடுத்தேன். ஆனால் அவர் நன்றியில்லாமல் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். நான் இத்தனை காலமும் நடித்து சம்பாதித்த பணம் முழுவதையும் அவர் சுருட்டிக் கொண்டார். இதற்கு இயக்குநர் களஞ்சியமும் உடந்தை. இனி என் மீது அபாண்டமாக எப்படி வேண்டுமானாலும் பழி போடுவார்கள். என் உயிருக்கே கூட ஆபத்து வரும் வாய்ப்புள்ளது. எனவேதான் சென்னையிலிருந்து ஹைதராபாத் வந்து விட்டேன். என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும் கூட அதற்கு முழு பொறுப்பு என் சித்தியும் இயக்குநர் மு களஞ்சியமும்தான். இன்னும் சில தினங்களில் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து முழு உண்மைகளையும் சொல்லப் போகிறேன்," என்றார்.