பக்கங்கள்

28 ஜூன் 2010

ராஜபக்ஷவின் அரவணைப்பில் அசின் இலங்கையில்.



இந்தியில் சல்மான்கான் நடிக்கும் 'ரெடி' படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடக்கிறது. இப்படத்தில் சல்மான் ஜோடியாக அசின் நடிக்கிறார். எண்ணற்ற ஈழத்தமிழர்களின் மண்டையோடுகளின் மேல் பந்தலிட்டு இலங்கை படவிழாவை நடத்தினார் ராஜபக்சே. இவ்விழாவில் கலந்துகொண்ட இந்தி நட்சத்திரங்களுக்கு தென்னிந்திய திரையுலகம் ரெட் போட்டுள்ளது அவர்கள் நடிக்கும் படங்களுக்கு ஆதரவோ படத்தை வெளியிடவோ கூடாது என்று முடுவெடுத்துள்ளது. எவன் குடி எக்கேடு கெட்டா என்ன? நம்ம வேலை நல்லா நடக்கனும் என்ற 'பரந்த' எண்ணம் கொண்டவர்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ள அசின் ராஜபக்சேவின் பாதுகாப்பு வளையத்தில் இலங்கையில் வட்டமடித்து வருகிறார். இதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் விவேக் ஓபராய் ராஜபக்சேவின் ஒன்றுவிட்ட தம்பிபோல இலங்கையிலேயே தங்கி ராஜபக்சே இடும் கட்டளையை செவ்வனே செய்துவருகிறார். இதற்கிடையே சல்மான்கானும் ராஜபக்சே காட்டிய பணத்தாசையில் பைத்தியமாகிவிட்டாராம். இலங்கையில் படப்பிடிப்பை நடத்தினால் அரசாங்கமே எல்லா ஏற்பாடுகளையும் செய்வதுடன் கணிசமான தொகையும் தருவதாக கூறவே மொரிஷியஸில் நடக்கவிருந்த படப்பிடிப்பை இலங்கைக்கு மாற்றினார் சல்மான்கான். படப்பிடிப்பிற்காக கடந்த புதன் கிழமை இலங்கை சென்ற சல்மானுடன் அசினும் ஒட்டிக்கொண்டுள்ளார். அவர்களுக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அசினும் சல்மானும் பல ஆயிர உயிர்களின் பலிபீடமாகவுள்ள இலங்கை பூமியில் நெஞ்சில் எவ்வித நெருடலும் இன்றி ஜாலியாக சுற்றிவருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

24 ஜூன் 2010

கொல கொலயா முந்திரிக்கா,பட நாயகி ஷிகாவுடன் ஒரு சந்திப்பு.








"கொல கொலயா முந்திரிக்கா' படத்தில் மடிசார் கட்டிக்கிட்டு, ஐய்யங்கார் பாஷையில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி நடித்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்த வர் ஷிகா. அண்மையில் ஒரு மாலை பொழுதில் அவரை சந்தித்தபோது படத்தில் பார்த்த அதே சுறுசுறுப்போடும், குறும்புத்தனங்களோடும் நம்மிடம் பேசினார்.
உங்கள் பூர்வீகம்?
நான் பெங்களூரைச் சேர்ந்த பெண். என் அப்பா ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அம்மா இல்லத்தரசி. ஒரு அண்ணன் இருக்கிறார். நான் பி.காம் படித்திருக்கேன். எனக்கு வெஸ்டர்ன் டான்ஸýம், பரதநாட்டியமும் தெரியும். என் குடும்பத்தில் இருந்து சினிமாவில் நடிக்க வந்த முதல் ஆள் நான்தான்.
அதனால் முதலில் எங்கள் வீட்டில் யாரும் எனக்கு சப்போர்ட் பண்ணவில்லை. ஆனால் இப்போது நான் நடித்த படங்களை பார்த்து நிறைய பேர் பாராட்டுவதால் அதை பார்த்து என் குடும்பத்தினருக்கு என் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஷிகா என்பது உங்கள் நிஜப் பெயரா?
என் நிஜப் பெயர் பாவ்னா. இங்கே ஏற்கனவே ஒரு பாவனா இருப்பதால் குழப்பம் வரவேண்டாம் என்பதால் "ஷிகா'ன்னு வைத்திருக்கிறேன். ஷிகா என்றால் பிக், மிக உயரத்தில் என்று அர்த்தம்.
"கொல கொலையா முந்திரிக்கா' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
கல்லூரியில் படிக்கும்போது சின்ன சின்ன ஓவியங்கள் வரைந்து கொண்டிருப்பேன். அதன் மூலம் ஒரு கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் என் முதல் படம். சென்னைக்கு ஒரு உறவினரின் திருமண வைபவத்திற்கு வந்திருந்தேன்.
அப்போது என்னை பார்த்த இயக்குனர் மதுமிதா மேடம், எனக்கு ஃபோன் பண்ணி நடிக்க விருப்பமா என்று கேட்டு, ஃபோட்டோ ஷூட்டுக்கு வரச் சொன்னார். சரின்னு அவரை போய் பார்த்தேன். ஒரு வாரம் கழித்து நான் செலக்ட் ஆகியிருப்பதாக அவர் சொன்னார். அப்போது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே கிடையாது.
தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். காரணம் மற்ற மொழிகளில் நடிக்கும் நடிகைகள் கூட தமிழில் நடிக்க ஆசைப்படுவார்கள். அந்தளவுக்கு இன்று தமிழ் திரையுலகம் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. எனக்கு தமிழ் தெரியாது என்பதால் முதலில் இரண்டு வாரக் காலம் தமிழை கற்றுக்கொண்டேன்.
அதன் பிறகுதான் சென்னைக்கு வந்தேன். ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னாடி மதுமிதா மேடம் எனக்கு நிறைய பயிற்சி கொடுத்தார். தமிழில் என்னோட முதல் படமே ஒரு பெண் இயக்குனரது படமாக அமைந்ததில் எனக்கு பெருமைதான்.
மடிசார் கட்டி மாமியாக நடித்தது குறித்து?
இப்படத்தில் எனக்கு கிடைத்த வேடம் ரொம்பவும் வித்தியாசமாது. ஒரு திருட்டு பெண்ணாக, துறு துறுன்னு இருக்கிற மாதிரியான அந்த வேடத்தில் நடிக்கும்போது ஜாலியாக இருந்தது. மதுமிதா மேடம்தான் எனக்கு மடிசார் கட்டி விட்டார்.
பொதுவாக எனக்கு சேலை கட்டுவது ரொம்பப் பிடிக்கும். ஆனால் மடிசார் கட்டிவிட்டு ஐய்யங்கார் பாஷையில் வசனங்கள் பேசி நடித்தபோதுதான் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். எனக்கு அப்போது தமிழ் அவ்வளவு தெரியாது.
அதுவும் ஐய்யர் பாஷையில் பேசுவது ரொம்ப கஷ்டம். அப்போது படத்தின் ஹீரோ கார்த்திக் குமார் எனக்கு நிறைய உதவி பண்ணினார். அவர் ரொம்பவும் ஹ்யூமர்சென்ஸ் உள்ளவர். அது எனக்குப் பிடித்திருந்தது.
இப்போது வேறு என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
"வாரேவா' என்ற கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படம் ஒரு மராட்டிய படத்தைத் தழுவியது. விஜயலட்சுமி என்ற பெண் இயக்குனர்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். "கொல கொலையா முந்திரிக்கா' படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. எல்லாம் பேச்சு வார்த்தையில் இருக்கிறது. முடிவானதும் சொல்கிறேன்.
எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க ஆசை?
இப்போதுதான் சினிமாத் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். இப்பப் போய் நான் அப்படிதான் நடிப்பேன், இப்படிதான் செய்வேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதனால் வருகிற வாய்ப்புகளில் இருந்து நல்ல வேடங்களை தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என்றிருக்கிறேன்.
கிளாமர் வேடங்களில் நடிப்பீர்களா?
கண்டிப்பாக நடிப்பேன். ஆனால் அந்த கிளாமர் அந்த கேரக்டருக்கு தேவையாக இருக்க வேண்டும். தமிழ்த் திரையுலகிலுள்ள நிறைய பேர் இந்த கேள்வியைத்தான் கேட்கிறார்கள். கதைக்கும், கேரக்டருக்கும் கவர்ச்சி தேவை என்றால் நடித்துதானே ஆகவேண்டும்? இப்போதுள்ள சூழ்நிலையில் கிளாமராக நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. காரணம் கிளாமருக்கு முக்கியத்துவம் உள்ள ஹீரோயின் பாத்திரங்களைத்தான் உருவாக்குகிறார்கள்.
தமிழில் உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை யார்?
என் ஆல் டைம் ஃபேவரிட் நடிகர்கள் கமல், விக்ரம், சூர்யா ஆகியோர்கள். நடிகைகளில் சுஹாசினி, ரேவதி, ஸ்ரேயா, தமன்னா ஆகியோரை ரொம்பப் பிடிக்கும்.
இவ்வளவு ஸ்லிம்மா இருக்கிறீர்களே, எப்படி?
அது இயற்கையானது. ஸ்லிம்மா இருப்பதற்காக சாப்பாடு விஷயத்திலெல்லாம் கட்டுப்பாடு கிடையாது. சைவம், அசைவம் என்று எனக்குப் பிடித்ததையெல்லாம் விரும்பி சாப்பிடுவேன். ஒருபோதும் வயிற்றுக்கு வஞ்சனை செய்ய மாட்டேன் (சிரிக்கிறார்).
உங்கள் பொழுதுபோக்கு?
நிறைய படங்கள் பார்ப்பேன். நேரம் கிடைக்கும்போது டான்ஸ் பிராக்டீஸ் செய்வேன்.

16 ஜூன் 2010

அம்மா வேடத்தில் நடிக்கவில்லை என்கிறார் சினேகா!


மலையாளப் படத்தில் அம்மா வேடத்தில் நடிப்பதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று நடிகை சினேகா கூறினார்.
மம்முட்டியுடன் மலையாளத்தில் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்துவிட்டார் சினேகா. ஆனால் மலையாள திரையுலகின் இன்னொரு முன்னணி நடிகரான மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அமையாமல் இருந்தது. இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது அவருக்கு.
ஷிகார் என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுக்கு முதல்முறையாக ஜோடியாக நடிக்கிறார் சினேகா.
ஆனால் அதற்குள், இந்தப் படத்தில் நடிக்கும் அனன்யாவுக்கு அம்மாவாக சினேகா நடிப்பதாக செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து இந்த செய்திக்கு சினேகா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:
நான் இந்தப் படத்தில் லாரி டிரைவராக வரும் மோகன்லாலை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் பெண் வேடத்தில் நடிக்கிறேன். மிகுந்த பொறுப்பான பாத்திரம் என்னுடையது. ஆனால் இந்த பாத்திரம் ஒரு கட்டத்தில் இறந்து விட, மோகன்லால் ஒரு பெண் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். அது பெரியவளாவது போல கதை அமைந்துள்ளது.
ஆனால் அதற்குள் நான் அம்மா வேடத்தில் நடிப்பதாக செய்தி பரப்பிவிட்டார்கள். படத்தில் எனது பாத்திரமே இல்லாத காட்சியிலிருந்துதான் அந்தக் குழந்தை கேரக்டர் வருகிறது. அந்தக் குழந்தை பெரியவளானதும் அனன்யா கேரக்டர் வருகிறது. இதில் எந்த இடத்திலும் நானும் அனன்யாவும் அம்மா பெண்ணாக வரும் காட்சிகள் ஒன்றுகூட கிடையாது என்பதை படத்தின் இயக்குநர் விளக்கிய பிறகே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
எனவே நான் அம்மா வேடத்தில் நடிப்பதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை" என்றார்.
சினேகா இப்போது தமிழில் விடியல், பவானி ஐபிஎஸ், முரட்டுக் காளை, அறுவடை, நூற்றுக்கு நூறு, வெங்கட் ராம் ஜோடியாக ஒரு படம் என 6 படங்களிலும், தெலுங்கில் இரு படங்களிலும், மலையாளத்தில் இரு படங்களிலும் நடித்து வருகிறார்.

15 ஜூன் 2010

பொரலஸ்கமுவவில் நான்கு அழகிகள் கைது.


பொரலஸ்கமுவையில் இயங்கிவந்த பாரிய விபச்சார விடுதியொன்றை பொலிஸார் இன்று முற்றுகையிட்டதுடன் அங்கிருந்த பெண்கள் நால்வரைக் கைது செய்ததாக தெரிவித்தனர்.நியுட்டன் குணவர்தன மாவத்தையில் இயங்கிவந்த இந்த விடுதி தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாந்தோட்டை, நாரஹென்பிட்ட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இப்பெண்கள் நீண்டகாலமாக விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

11 ஜூன் 2010

என்னைப் பார்த்தாலே எல்லோரும் பயப்படும் மாதிரியா இருப்பேன்.-விக்ரம்.


இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள ராவணன் படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பிற்கிடையே வரும் ஜூன் 18ந் தேதி வெளியாகவுள்ளது. இப்படம், ஹிந்தியில் ராவண், தெலுங்கில் வில்லன் என்ற பெயர்களில் வெளியாகிறது. தமிழ் ராவணனில் விக்ரம், ஐஸ்வர்யாராய், பிரபு,கார்த்திக், பிருத்விராஜ், பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். விக்கிரமின் கதாப்பாத்திரத்தை ஹிந்தியில் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார். படம் வெளியாகவிருக்கும் இந்நேரத்தில் ராவணன் குறித்து நடிகர் விக்ரம் பேட்டியளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது: தமிழ் ராவணனைப் பொருத்தவரைக்கும் எனக்கு ஒரு பயமும் இல்லை. நிச்சயம் அது ஹிட் ஆகும். ஆனால்,ஹிந்தி ’ராவண்’ பொருத்த வரைக்கும் கொஞ்சம் பயம் இருக்கு.ஏனென்றால், நான் முதன் முதலா ஹிந்தியில் நடித்துள்ளதால், எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு இருக்கு. மேலும், நானே ’டப்பிங்’கும் பேசியுள்ளேன். ஹிந்தி ரசிகர்கள் என்னை எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்ற அச்சம் கொஞ்சமிருக்கு. காட்டுக்குள் நடித்ததைப் பற்றி நிச்சயம் நான் சொல்லியாகனும். நடித்ததுன்னு சொல்றத விட வாழ்ந்ததுன்னே சொல்லலாம். தங்கக்கூட உருப்படியா ஒரு இடம் இல்லாம சூட்டிங் நடத்தியிருக்கோம். சில நேரங்களில், எப்படா சூட்டிங் முடியும் என்று நினைக்கத்தோணும். அந்த அளவிற்கு எல்லோருக்குமே டென்ஷனா இருக்கும்.படத்துல நடித்துக் கொண்டிருக்கும் போது, கிட்டத்தட்ட ஒரு ’காளை’ யப் போல நடிச்சேன். பத்து பேரக் கூட அடிச்சுப் போட்டிட முடியும் என்கிற மாதிரியான ஒரு உணர்வு இருந்தது. என்னையப் பார்த்தாலே எல்லோரும் பயப்படுற மாதிரி இருப்பேன். ஆனால்,ஹிந்தி ராவண்ல அப்படியே நேர் எதிர்.அழகான, மென்மையான ஒரு கதாப்பாத்திரம். இரண்டுக்கும், கொஞ்சம் கூட சம்பந்தமே இல்ல. இரண்டு கதாப்பாத்திரங்களிலும் ஒரே நேரத்திலும் நடிக்க வேண்டி இருந்தது. அப்ப என்னோட மனநிலைய இரண்டுக்கும் ஏற்றற்போல பக்குவமாக மாற்றிக்கொண்டேன்.‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில், தமிழ் ராவணனும், ஹிந்தி ராவணும் வெளியிடப்பட்டப் பொழுது,அனைவரும் வியந்து பார்ர்த்து பாராட்டினார்கள்.
ஐஸ்வர்யாராயுடன் நடித்தது மகிழ்ச்சியா இருந்தது. அபிஷேக் பச்சன் நல்ல நண்பர். அவர், என்னோட படங்கள் நிறையா பார்த்திருக்கிறார். பிரியாமணியும் கூட என்னோடு சிறப்பா நடிச்சிருக்காங்க. ஹிந்தியில், நானும் பிரியாமணியும் நடித்துள்ள காட்சிகள் நிச்சயம் பாராட்டப்படும். காட்டுக்குள் வாழ்ந்த போது, வீரப்பன் எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார் என்று யோசிக்கத் தோணுச்சு. வீரப்பனப் பத்தி மணிரத்தினம் சார் சொல்லக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்.போலீஸ் என்னைத் துரத்தும் காட்சிகளில், வீரப்பன் எப்படி எல்லாம், போலீஸிடம் இருந்து தப்பித்திருப்பார் என்ற உணர்வு தான் எனக்குள் எழும். அவர மனசுல வச்சுத்தான் நடிச்சேன் என்றே கூட சொல்லலாம்.நான்,அன்னியன் படத்துல நடித்தப் போது, தெரிந்த நடிகர்கள் சில பேரு சொன்னாங்க. ஏன் இப்படி 2,3 வருசமுன்னு, வருசக் கணக்கில் நடிச்சு காலத்த விரயமாக்குறீங்க, இந்தக் கால இடை வெளியில் 4,5 படங்களில் நடித்தால் உங்களுக்கும் பேரும், புகழும் கிடைத்திருக்குமே என்றார்கள். ஆனால், அந்த அன்னியன் படம் தான் ஹிந்தியிலும் வெளியாகி எனக்குப் புகழத் தந்தது. அதே மாதிரிதான், இந்த ராவணன் படமும், தமிழ், ஹிந்தி,தெலுங்கில் மட்டுமன்றி உலகெங்கும் எனக்கு புகழைத் தேடித்தரும் என்ற நம்பிக்கையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு, விக்ரம் ஆனந்தப் பூரிப்புடன் பேட்டியளித்தார்.

போதைக்கு அடிமையான மூன்று வயது சிறுமி!


சீனாவில் பூஜியான் மாநிலத்தில் உள்ள ஹூய்ஸ்கோ நகரை சேர்ந்தவள் யா வென். 3 வயதான சிறுமி அவள். அவளது பெற்றோர் குப்பை காகிதங்களை பொறுக்கி விற்று வாழ்பவர்கள். யாவென் சமீபத்தில் ஒரு சாலை விபத்தில் சிக்கிக்கொண்டாள். அது முதல் அவளுக்கு புகை பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவள் குளியல்அறையில் உட்கார்ந்தபடி புகை பிடிப்பதை அவளது தாயார் காவோ பார்த்து திடுக்கிட்டாள். அதற்கு முன்னால் பல முறை குளியல் அறையில் சிகரெட்டு துண்டுகளை பார்த்து இருக்கிறேன். அதெல்லாம் என் கணவர் பிடித்து போட்டவையாக இருக்கும் என்று நான் நினைத்தேன் என்று கூறுகிறார் காவோ. அவளது புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்காக குடும்பத்தினர் என்னென்னவோ நடவடிக்கைகள் எடுத்துப் பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை. அவள் தந்தையின் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டுகளை திருட தொடங்கினாள். இதனால் அவர் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டார். ஆனால் மகளது பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. பக்கத்து கடைக்கு சென்று கடனுக்கு சிகரெட்டு பாக்கெட்டுகளை வாங்கி புகை பிடிக்கிறாள். புகை பிடிப்பதோடு, பீர் குடிப்பதையும் அவள் வாடிக்கையாக வைத்து இருக்கிறாள். ஒரே சமயத்தில் 3 பாட்டில் பீர் குடிப்பாள் என்று தாயார் காவோ சொல்கிறார்.

10 ஜூன் 2010

த்ரிஷாவுக்கு எப்போ திருமணம்?தாயார் பதிலளிக்கிறார்.


பள்ளியில் படிக்கும்போதே விளம்பரப் படங்கள் மூலம் நடிப்புத் துறைக்குள் நுழைந்த த்ரிஷா, மிஸ் சென்னை பட்டத்தை வென்றதும் மவுனம் பேசியதே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதலில் ஒப்பந்தமானது லேசா லேசா படம் என்றாலும் அந்த படம் நான்காவது படமாகத்தான் ரீலிஸ் ஆனது. தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருக்கும் த்ரிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், இப்போதைக்கு திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எனக்கு கணவராக வருகிறவருக்கு நான் விரும்பும் லட்சணங்கள் இருக்க வேண்டும். அப்படி ஒருவரை பார்க்கும்போது கண்டிப்பாக சொல்கிறேன், என்றார்.
தனது பெற்றோர் தன் மீது வைத்திருக்கும் பாசம் குறித்து கூறிய த்ரிஷா, எனக்கு அப்பா அம்மா என்றால் உயிர். எனக்கு சாக்லெட் பிடிக்கும். சிறுவயதில் என் அம்மா சாக்லெட் தந்தால்தான் உணவு சாப்பிடுவேன். பள்ளிக்கு மதிய உணவோடு சேர்த்து ஒரு சாக்லெட்டையும் வைத்து என் அம்மா தந்து அனுப்புவார். எது கேட்டாலும் மறுப்பு சொல்லமாட்டார்கள். சினிமாவுக்கு அனுப்புவதற்கு முதலில் யோசித்தனர். நான் பிடிவாதமாக இருந்ததால் என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் சம்மதித்தனர்.
எனக்கு தைரியம், தன்னம்பிக்கை நிறைய உண்டு. அவை என் அம்மாவிடம் இருந்து வந்தவை. வீட்டில் என் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வேன். மற்ற அறைகள் அசுத்தமாக இருந்தாலும் கண்டுக்கமாட்டேன். இதனாலேயே அம்மா என் மேல் கோபப்படுவது உண்டு. எனக்கு சமையல் தெரியாது. வீட்டில் இருந்தால் தியேட்டருக்கு குடும்பத்தோடு போய் படம் பார்க்க பிடிக்கும். நான் நடித்த படங்களை நிறைய தடவை திரும்ப திரும்ப பார்த்து இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
த்ரிஷாவின் அம்மா உமா கூறுகையில், என் மகளை செல்லமாக வளர்த்து வருகிறோம். அவருக்கு பிடித்தவரை அவர் மணந்து கொள்ளலாம். த்ரிஷாவை கண்ணின் இமை போல பாதுகாக்கிறோம்.

08 ஜூன் 2010

மகனே மருமகனே,ஆதரவற்ற நிலையில்.


நடிகர் விவேக் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள(வந்த) படம் ’மகனே மருமகனே’. இந்தப்படம் திரையிட்ட முதல் நாளிலேயே அரங்கம் நிறையவில்லையாம்.
வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் இந்தப் படம் நான்கு காட்சிகளாகத் திரையிடப்பட்டது. படம் வெளியான நான்காவது நாள், தியேட்டரில் மேட்னி ஷோவுக்கு கூடியது வெறும் மூன்று பேர்தானாம்.
ஒரு ஷோவை ஓட்ட குறைந்தபட்சம் 7 பேராவது இருக்க வேண்டுமாம்.
மூன்று பேர் மட்டுமே வந்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்த திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் எடுத்து வந்திருந்த மூன்று பேரிடமும் நிலைமையை விளக்கிச்சொல்லி டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுத்துவிட்டு அந்த காட்சியை ரத்து செய்திருக்கிறார்கள்.
அடுத்தடுத்த ஷோக்களுக்கு 10,15 பேர் வந்ததால் மறுநாளே அந்தப்படத்தை தூக்கிவிட்டார்கள். விசயத்தை நடிகர் விவேக்கிடமே சொல்லியிருக்கிறார்கள்.
அவர் அதிர்ந்து போகவில்லையாம். பல இடங்களில் இருந்து இப்படி ரிசல்ட் வந்ததாலோ என்னவோ தெரியவில்லை அவர் அதிராமால் இருந்திருக்கிறார்.

06 ஜூன் 2010

மாலை மாற்றிக்கொண்ட பிரபுதேவா&நயன்தாரா.


பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். கணவன்-மனைவி போல் ஒரே அறையில் தங்குகிறார்கள். ஜோடியாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.
நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா-பிரபுதேவா காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். என் கணவருடன் உள்ள உறவை துண்டித்துக்கொள்ளாவிட்டால், நயன்தாராவை பார்க்கிற இடத்தில் அடிப்பேன் என்று ரமலத் எச்சரிக்கை விடுத்தார்.
என்றாலும் நயன்தாராவும்-பிரபுதேவாவும் தங்கள் காதலை கைவிடவில்லை. இவர்களின் காதலுக்கு, பிரபுதேவாவின் தந்தை டான்ஸ்மாஸ்டர் சுந்தரம், தாயார் மகாதேவம்மா ஆகிய இருவரும் ஆதரவாக இருக்கிறார்கள்.
இவர்களின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில், நாரதகான சபாவுக்கு எதிரில் உள்ளது. அந்த வீட்டில் டான்ஸ்மாஸ்டர் சுந்தரம், அவருடைய மனைவி மகாதேவம்மா, கடைசி மகன் நாகேந்திரபாபு ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
அந்த வீட்டில், ஒரு விசேஷ பூஜை நடந்தது. 4 புரோகிதர்கள் சேர்ந்து யாகம் வளர்த்து, பூஜை நடத்தினார்கள். காலை 10-30 மணிக்கு தொடங்கிய பூஜை, பிற்பகல் 2 மணிவரை நடைபெற்றது.
அதில் நயன்தாராவும், பிரபுதேவாவும் கலந்துகொண்டார்கள். இருவரும் மணமக்களைப்போல் கழுத்தில் மாலை அணிந்திருந்தார்கள். புரொகிதர்கள் மந்திரம் சொன்னதும், இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள். அப்போது இரண்டு பேர் தலையிலும் புரோகிதர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், டான்ஸ்மாஸ்டர் சுந்தரத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள்.

05 ஜூன் 2010

தமிழனாவது,சங்கமாவது கொக்கரிக்கும் ஜெனிலியா.


தமிழனாவது, சங்கமாவது, வேண்டுகோளாவது என்று கொழும்புக்கு போன ஜெனிலியாவை கொழுப்புக்கு பேர் போன ஜெனிலியான்னு கரிச்சு கொட்டுது கோடம்பாக்கம். தமிழ்ல உத்தம புத்திரன் என்றொரு படத்தில் தனுசுக்கு ஜோடியா நடிக்கிற ஜெனி, 'நமக்கெல்லாம் எப்படி தடை போட முடியும்'னு கொக்கரிக்கிறாராம். அப்படி போட்டாலும் உத்தம புத்திரனுக்கு ஒரு கோளாறும் வரப்போறதில்ல என்கிறாராம் திடமாக. அதுக்கு பிறகாவது மும்பையிலயே நிரந்தரமா தங்குற அளவுக்கு தண்டனை கொடுக்குமா தமிழுலகம்? யாரு கை விட்டாலும் இந்து மக்கள் கட்சி கிண்டி கெழங்கெடுக்கும்னு நம்புது பொதுசனம்!

கே.எஸ்.ரவிக்குமார் வார்த்தையில் குளிர்ச்சி பெற்ற த்ரிஷா.


இன்னும் பத்து வருஷத்துக்கு த்ரிஷாதான் கனவு தேவதை என்று கே.எஸ்.ரவிகுமார் பாராட்டியதை கேட்டு உருகிப் போயிருக்கிறார் த்ரிஷ்! அதுக்குப்பிறகு நீலாம்பரியாக நடிச்சாலும் நடிப்பாங்க என்று அவர் சொன்ன அடுத்த ஐடியாவுக்கும் சேர்த்து சந்தோஷப்பட்டாராம்!

காதலாகி,திரை நோக்கு.


ஜெயில் பயணமா முடிஞ்சிருக்க வேண்டிய ஒரு ரயில் பயணம்தான் காதலாகி. தடக் தடக் ரயில் சவுண்டின் பின்னணியில் ஒரு திடுக் திடுக் கதையை தந்திருக்கிறார் டைரக்டர் கே.ஆர்.விஷ்வா. அண்ணன்காரனை வில்லனாக்கும் வழக்கமான லவ் ஸ்டோரிதான். அதில் கொஞ்சம் த்ரில்லரையும் து£வியிருப்பதால் இரண்டரை மணி நேரம் பொசுக்!
நெற்றியில் ஏற்றி தடவிய நாமம். இந்த காலத்து பசங்க இருக்காங்களே...ங்கிற அலுப்பு. நீங்கள்ளாம் எங்கடா வீட்டுக்கு அடங்க போறீங்க என்ற அங்கலாய்ப்பு. இப்படி எதிர் சீட் பசங்களை வெறுப்பேற்றும் சாட்சாத் பெரிசுகளின் கேரக்டரில் பிரகாஷ்ராஜ். எங்களுக்கு ஒரு பிரண்ட் இருந்தான்னு ஆரம்பிச்சு அவனோட பிளாஷ்பேக்கை விவரிக்கிற பசங்க, ஒரு கொலையை விவரிக்க... இனிமையாக முடிகிறது ரயில் பயணம். ஆனால் அந்த பிரகாஷ்ராஜ் முடித்து வைக்கிற க்ளைமாக்ஸ் நிஜமாகவே ஒரு ஷாக் திருப்பம்!
பசங்களை தேர்வு செய்திருக்கிற முதல் விஷயத்திலேயே அப்ளாஸ் வாங்கிக் கொள்கிறார் விஷ்வா. அத்தனை பேரும் கற்பூரமாக பற்றிக் கொள்கிறார்கள். அதிலும் நடுவில் வந்து சேர்ந்து கொள்ளும் அந்த மேஜிக் நண்பன் ரசிகர்களை கட்டிப் போடுகிறார் தன் மேஜிக் மூலம். தண்ணீரின் மீது அவர் நடக்கும் அழகு, கண்கொள்ளாக் காட்சி. இன்ஸ்பெக்டர் மனதில் என்ன நினைக்கிறார்? அவர் எங்கிருந்து வருகிறார்? எங்கே போகிறார்? என்றெல்லாம் யூகிக்கும் மேஜிக் நண்பன், தன் காதலியை அடைய அவ்வளவு போராட வேண்டியதில்லையே என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
பசங்களில் அத்தனை பேருக்கும் பாஸ் மார்க் கொடுத்தாலும், பொண்ணுங்க வரிசையில் மார்க் வாங்குவது சிருஸ்டி மட்டுமே. கன்னத்தில் விழுகிற அந்த குழிக்குள் கோடம்பாக்கமே விழுந்தாலும் ஆச்சர்யமில்லை! காதலனுடன் தனி தீவில் ஒதுங்கும் இவர்களின் டூயட் ஒரு அழகான காதல் திருவிழா. டிவி ஷோ ஒன்றில் தமிழ் கொலை செய்யும் இன்னொரு பெண்ணை செம்மொழி மாநாட்டில் நிற்க வைத்து கசையடியே கொடுக்கலாம். தேறுகிற மற்றொரு நாயகி கசிஷ் கபூர். கம்பீரமான போலீஸ் அதிகாரி.
இத்தனை கலவரம் எதற்காக? யார் இந்த ராஜா? சாதி வெறிக்காக ஊரையே கொளுத்தும் இவரை போலீஸ் ஒன்றும் செய்யாதா? ஏகப்பட்ட எரிச்சலை து£ண்டி விடுகிறார் அந்த வில்லன். ஆனால் ஹீரோவுக்குரிய அத்தனை லட்சணங்களும் பொருந்தியிருக்கிற முகம் அவருக்கு. இவரை பார்க்க வரும் மந்திரி ஒருவர் இவரை சந்திக்கும் முன்பாக தனது முறுக்கு மீசையை இறக்கிக் கொள்கிற காட்சி ஹைக்கூ சிரிப்பு.
சினிமாவில் லாஜிக் பார்க்க கூடாதுதான். ஆனால் வினாடி நேரத்தில் கச்சிதமாக காதலியை போலவே ஒரு உருவத்தை படைக்கிற அளவுக்கு சர்ஜரி செம்மல்கள் இருந்தால், இந்தியா எப்போதோ வல்லரசாகியிருக்கும் போங்க.
ஒளிப்பதிவு, இசை, நடன அமைப்பு என்று எல்லா ஏரியாவிலும் வழிந்தோடுகிறது இளமை. குறிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹைனாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
உட்கார்ந்த இடத்திலேயே அதுவும் ஒரு நாள் கால்ஷீட்டிலேயே படம் முழுக்க வந்தது போல உணர வைத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். அந்த சாமர்த்தியத்துக்காக திரைக்கதைக்கும், பிரகாஷ்ராஜுக்கும் ஒரு சேர ஒரு மெடல்!
காதலாகி- கசிந்துருகியிருக்கலாம்.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால்!

லோரன்ஸ், லட்சுமி ராய் காதலா?



நடன இயக்குநர் நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் ஆன்மிகம், அனாதை சிறுவர்கள், முதியோர்களுக்கான ஆசிரமம் ஆகிய விஷயங்களில் மட்டுமல்லாமல் காதல் விவகாரத்திலும் படு கில்லாடி போலிருக்கிரது.
சமீபமாக நடிகை லட்சுமி ராயுடன் மிக நெருக்கமாக இருக்கிறாராம் இவர்.
இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் மூன்று நாயகியரில் ஒருவராக நடித்த லட்சுமி ராயை, கருணாநிதியின் கதை வசனத்தில் தான் ஒத்தப் பாட்டுக்கு ஆடியுள்ள பெண் சிங்கம் படத்தில் தனக்கு ஜோடியாக ஆட வலிய வந்து சிபாரிசு செய்திருக்கிறாராம். இருவரும் 'பெண் சிங்கம்’ படத்தில் போட்டுள்ள குத்து டான்ஸில் செம நெருக்கம் காட்டி ரசிகர்களை கிறக்கம் அடையச் செய்திருக்கிறார்களாம்.

03 ஜூன் 2010

மொழிகள் மாறினாலும் உணர்வுகள் ஒன்றுதான்-ஸ்ரேயா.


தெலுங்கில் சிறிய இடைவெளிக்கு பிறகு "டான் சீனு' என்ற படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா, மலையாளத்தில் "போக்கிரி ராஜா' என்ற படத்தில் மம்முட்டி, பிருத்திவிராஜுடன் நடித்துள்ளார். பல மொழிகளில் நடித்து வரும் ஸ்ரேயா அது பற்றி கூறுகையில்,
""வெவ்வேறு மொழி படங்களில் நடிப்பது எனக்கு பிரச்சினையாக இல்லை. மொழிகள் மாறினாலும் உணர்வுகள் ஒன்றுதான்! நடிக்கும்போது அந்தந்த மாநில பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவாறு என்னை மாற்றிக் கொள்வேன்.
என்னிடம், ""திருமணம் எப்போது?'' என்று எல்லோரும் கேட்கிறார்கள். இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை. கல்யாணம் என்பது வாழ்க்கையில் முக்கிய கட்டம்தான். அதை நான் தவறவிடமாட்டேன். என் திருமணம் ரகசியமாக நடக்காது. நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரையும் அழைத்து, அவர்களோட வாழ்த்துக்களோடுதான் செய்து கொள்வேன். அதேபோல நான் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருப்பேன் என்றெல்லாம் சிந்திப்பது கிடையாது. ஐந்து நிமிடம் கிடைத்தாலும் அதை ஆக்கப்பூர்வமாக செலவிட விரும்புபவள் நான்'' என்றார்.

ஹிந்தியில் கலக்கும் ஜெனிலியா.


தமிழில் "பாய்ஸ்' படத்தில் அறிமுகமாகி, விஜய்யுடன் "சச்சின்', "ஜெயம்' ரவியுடன் "சந்தோஷ் சுப்ரமணியம்' ஆகிய படங்களில் நடித்தவர் ஜெனீலியா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கும் இவர் இப்போது ஹிந்தியிலும் படு பிஸியாக நடித்து வருகிறார்.
""என்ன கேரக்டர் கொடுத்தாலும் அதில் என்னால் சிறப்பாக நடிக்க முடியும். முந்தைய படங்களில் இதை நிரூபித்துள்ளேன். "சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் நடித்த ஹாசினி வேடத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது. பிற மொழிகளில் அந்த படத்தை ரீ-மேக் செய்தபோதுகூட என்னைத்தான் நடிக்க வைத்தார்கள்.
வேறு யாராலும் அந்த கேரக்டரில் அவ்வளவு கச்சிதமாக நடிக்க முடியாது என இயக்குனர்கள் கருதியதால் எனக்கு வாய்ப்பு வந்தது. நிஜத்தில் என் கேரக்டர் ஹாசினி மாதிரிதான்! எனவேதான் பெயர் வாங்க முடிந்தது என்று நினைக்கிறேன்.
நான் எனக்கு போட்டியாக யாரையும் நினைக்கவில்லை. எனக்கு நானேதான் போட்டி. ஹிந்தி திரையுலகிலும் எனக்கு பெயர், புகழ் நிறைய கிடைத்துவிட்டது. தென்னிந்தியாவில் இருந்து ஹிந்திக்கு போன ஸ்ரீதேவி, ஜெயப்ரதா இருவரும் அங்கு வெற்றிக் கொடி நாட்டினார்கள். அவர்களுக்கு பிறகு நான்தான் ஹிந்தியில் செல்வாக்கு உள்ள நடிகையாக இருக்கிறேன்.
ஸ்ரீதேவி, ஜெயப்ரதா இடத்தை இப்போது நான் பிடித்து விட்டேன். இதை ஆணவத்தோடுதான் சொல்கிறேன்.
நான் எல்லாப் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன். கால்ஷீட் கொடுத்த பிறகு கேரக்டருக்கு உயிர் கொடுக்க வேண்டியது நமது கடமை'' என்கிறார் ஜெனீலியா.

கமல்,த்ரிஷா ஜோடி சேரும் மன்மதன் அம்பு!


கமல், திரிஷா முதல் தடவையாக ஜோடி சேரும் படத்துக்கு மன்மதன் அம்பு என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே யாவரும் கேளிர் என்ற பெயரை தேர்வு செய்து வைத்திருந்தனர். தற்போது அதை ஒதுக்கி விட்டு மன்மதன் அம்பு என்ற பெயரை வைத்துள்ளனர். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்துக்காக அதிகாரபூர்வ அறிவிப்பை கமல், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் சேர்ந்து இன்று (ஜூன் 3) பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவித்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதமே துவங்குகிறது. கமல் உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்த பிறகு நடிக்க உள்ள படம் இதுவாகும்.
இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க நயன்தாரா, திரிஷா இருவருக்கும் பலத்த போட்டியே நடந்தது. இருவரும் தூதுகள் அனுப்பியும் சிபாரிசுகள் பிடித்தும் வாய்ப்பை தட்டிப்பறிக்க முயற்சித்தனர். இறுதியாக திரிஷாவுக்கு யோகம் அடித்தது. மருதநாயகம் படத்தில் திரிஷாவை கமல் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து இருந்தார். அப்பட வேலைகள் முடங்கியுள்ளதால் திரிஷாவுக்கு வேறுவழியில் ஏதாவது உதவவேண்டும் என்ற எண்ணம் கமலுக்கு இருந்தது. அதுவே இந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது.

02 ஜூன் 2010

கணவனை மரத்தில் கட்டி அடித்த மனைவி!


குடிபோதையில் தினமும் அடித்து உதைத்த கணவனை மரத்தில் கட்டி வைத்து மனைவி தர்ம அடி கொடுத்தார். ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர்கள் விவேக் (42), ரமா (40) தம்பதி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஆகிறது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான விவேக் தினமும் மாலையில் வீட்டுக்கு வரும் போது முழுபோதையில் இருப்பாராம். ரமாவை அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளார். போதை தெளிந்ததும், இனிமேல் குடிக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்வது விவேக்கின் வழக்கம். ஆனால், இரவு ஆனதும் மீண்டும் போதையில் இறங்கிவிடுவார். கல்லானாலும் கணவன், புல் போதையில் இருந்தாலும் புருஷன் என்று இருந்த ரமா, நேற்று முன்தினம் திடீரென கொதித்தெழுந்தார். போதையில் தன்னை அடித்த விவேக்கை பதிலுக்கு ரமாவும் தாக்கத் தொடங்கினார். அவரை தரதரவென இழுத்துச் சென்று வீடு அருகே உள்ள மரத்தில் கட்டி வைத்தார். பின்னர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் இருந்து வந்து விவேக்கை சரமாரியாக தாக்கினார். கை வலித்தால், சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் அடித்தார். பின்னர் போலீசிடம் விவேக் ஒப்படைக்கப்பட்டார்.

01 ஜூன் 2010

கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்-நடிகை விந்தியா.


நடிகை விந்தியாவுக்கும், நடிகை பானுபிரியாவின் தம்பியும், சினிமா தயாரிப்பாளருமான கோபிக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இப்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து கணவர் கோபி, விந்தியாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக நடிகை விந்தியா குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த 2 வழக்கிலும் நடிகை விந்தியாவும், அவரது கணவர் கோபியும் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து
இன்று காலை 11 மணிக்கு விந்தியாவும், அவரது கணவரும் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். இருவரையும் சமரச மையத்துக்கு வரவழைத்து ஓய்வு பெற்ற நீதிபதியும், ஆலோசனை மைய அதிகாரியும் கலந்தாய்வு நடத்தினர்.
அப்போது நடிகை விந்தியா, கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் என் மீது பல்வேறு பழிகளை போட்டார்கள். என்னை களங்கப்படுத்தும் வகையில் செயல்பட்டார்கள். என் கணவர் நல்லவர்தான். அவர் என்னை நன்றாக கவனித்து கொண்டார்.
அவரை பிரிவதற்கு எனக்கு விருப்பமில்லை. சேர்ந்து வாழவே நினைக்கிறேன்’’ என்று கூறினார். அவரது கணவர், ‘’எனக்கு இனி சேர்ந்து வாழ விருப்பமில்லை. என்னை சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோரை என்னிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார். நான் ஒருபோதும் எனது பெற்றோரையும், உடன் பிறந்தோரையும் பிரிந்து வரமாட்டேன்’’ என்றார். வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 7-ந்தேதிக்கு நீதிபதி ராமலிங்கம் ஒத்தி வைத்தார்.