பக்கங்கள்

05 ஜூன் 2010

காதலாகி,திரை நோக்கு.


ஜெயில் பயணமா முடிஞ்சிருக்க வேண்டிய ஒரு ரயில் பயணம்தான் காதலாகி. தடக் தடக் ரயில் சவுண்டின் பின்னணியில் ஒரு திடுக் திடுக் கதையை தந்திருக்கிறார் டைரக்டர் கே.ஆர்.விஷ்வா. அண்ணன்காரனை வில்லனாக்கும் வழக்கமான லவ் ஸ்டோரிதான். அதில் கொஞ்சம் த்ரில்லரையும் து£வியிருப்பதால் இரண்டரை மணி நேரம் பொசுக்!
நெற்றியில் ஏற்றி தடவிய நாமம். இந்த காலத்து பசங்க இருக்காங்களே...ங்கிற அலுப்பு. நீங்கள்ளாம் எங்கடா வீட்டுக்கு அடங்க போறீங்க என்ற அங்கலாய்ப்பு. இப்படி எதிர் சீட் பசங்களை வெறுப்பேற்றும் சாட்சாத் பெரிசுகளின் கேரக்டரில் பிரகாஷ்ராஜ். எங்களுக்கு ஒரு பிரண்ட் இருந்தான்னு ஆரம்பிச்சு அவனோட பிளாஷ்பேக்கை விவரிக்கிற பசங்க, ஒரு கொலையை விவரிக்க... இனிமையாக முடிகிறது ரயில் பயணம். ஆனால் அந்த பிரகாஷ்ராஜ் முடித்து வைக்கிற க்ளைமாக்ஸ் நிஜமாகவே ஒரு ஷாக் திருப்பம்!
பசங்களை தேர்வு செய்திருக்கிற முதல் விஷயத்திலேயே அப்ளாஸ் வாங்கிக் கொள்கிறார் விஷ்வா. அத்தனை பேரும் கற்பூரமாக பற்றிக் கொள்கிறார்கள். அதிலும் நடுவில் வந்து சேர்ந்து கொள்ளும் அந்த மேஜிக் நண்பன் ரசிகர்களை கட்டிப் போடுகிறார் தன் மேஜிக் மூலம். தண்ணீரின் மீது அவர் நடக்கும் அழகு, கண்கொள்ளாக் காட்சி. இன்ஸ்பெக்டர் மனதில் என்ன நினைக்கிறார்? அவர் எங்கிருந்து வருகிறார்? எங்கே போகிறார்? என்றெல்லாம் யூகிக்கும் மேஜிக் நண்பன், தன் காதலியை அடைய அவ்வளவு போராட வேண்டியதில்லையே என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
பசங்களில் அத்தனை பேருக்கும் பாஸ் மார்க் கொடுத்தாலும், பொண்ணுங்க வரிசையில் மார்க் வாங்குவது சிருஸ்டி மட்டுமே. கன்னத்தில் விழுகிற அந்த குழிக்குள் கோடம்பாக்கமே விழுந்தாலும் ஆச்சர்யமில்லை! காதலனுடன் தனி தீவில் ஒதுங்கும் இவர்களின் டூயட் ஒரு அழகான காதல் திருவிழா. டிவி ஷோ ஒன்றில் தமிழ் கொலை செய்யும் இன்னொரு பெண்ணை செம்மொழி மாநாட்டில் நிற்க வைத்து கசையடியே கொடுக்கலாம். தேறுகிற மற்றொரு நாயகி கசிஷ் கபூர். கம்பீரமான போலீஸ் அதிகாரி.
இத்தனை கலவரம் எதற்காக? யார் இந்த ராஜா? சாதி வெறிக்காக ஊரையே கொளுத்தும் இவரை போலீஸ் ஒன்றும் செய்யாதா? ஏகப்பட்ட எரிச்சலை து£ண்டி விடுகிறார் அந்த வில்லன். ஆனால் ஹீரோவுக்குரிய அத்தனை லட்சணங்களும் பொருந்தியிருக்கிற முகம் அவருக்கு. இவரை பார்க்க வரும் மந்திரி ஒருவர் இவரை சந்திக்கும் முன்பாக தனது முறுக்கு மீசையை இறக்கிக் கொள்கிற காட்சி ஹைக்கூ சிரிப்பு.
சினிமாவில் லாஜிக் பார்க்க கூடாதுதான். ஆனால் வினாடி நேரத்தில் கச்சிதமாக காதலியை போலவே ஒரு உருவத்தை படைக்கிற அளவுக்கு சர்ஜரி செம்மல்கள் இருந்தால், இந்தியா எப்போதோ வல்லரசாகியிருக்கும் போங்க.
ஒளிப்பதிவு, இசை, நடன அமைப்பு என்று எல்லா ஏரியாவிலும் வழிந்தோடுகிறது இளமை. குறிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹைனாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
உட்கார்ந்த இடத்திலேயே அதுவும் ஒரு நாள் கால்ஷீட்டிலேயே படம் முழுக்க வந்தது போல உணர வைத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். அந்த சாமர்த்தியத்துக்காக திரைக்கதைக்கும், பிரகாஷ்ராஜுக்கும் ஒரு சேர ஒரு மெடல்!
காதலாகி- கசிந்துருகியிருக்கலாம்.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக