கமல், திரிஷா முதல் தடவையாக ஜோடி சேரும் படத்துக்கு மன்மதன் அம்பு என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே யாவரும் கேளிர் என்ற பெயரை தேர்வு செய்து வைத்திருந்தனர். தற்போது அதை ஒதுக்கி விட்டு மன்மதன் அம்பு என்ற பெயரை வைத்துள்ளனர். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்துக்காக அதிகாரபூர்வ அறிவிப்பை கமல், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் சேர்ந்து இன்று (ஜூன் 3) பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவித்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதமே துவங்குகிறது. கமல் உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்த பிறகு நடிக்க உள்ள படம் இதுவாகும்.
இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க நயன்தாரா, திரிஷா இருவருக்கும் பலத்த போட்டியே நடந்தது. இருவரும் தூதுகள் அனுப்பியும் சிபாரிசுகள் பிடித்தும் வாய்ப்பை தட்டிப்பறிக்க முயற்சித்தனர். இறுதியாக திரிஷாவுக்கு யோகம் அடித்தது. மருதநாயகம் படத்தில் திரிஷாவை கமல் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து இருந்தார். அப்பட வேலைகள் முடங்கியுள்ளதால் திரிஷாவுக்கு வேறுவழியில் ஏதாவது உதவவேண்டும் என்ற எண்ணம் கமலுக்கு இருந்தது. அதுவே இந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக