பக்கங்கள்

27 மார்ச் 2011

நடுநிசி நாய்களை கண்டு ஓட்டம்.

சமீபத்தில் இண்டோ-சைனா கொலாப்ரேஷனில் படங்கள் எடுக்கலாம் என்ற முடிவோடு சென்னைக்கு வந்திருந்தது ஒரு திரைப்பட ஆர்வக்குழு. இங்குள்ள மிக முக்கியமான தமிழ்ப்பட இயக்குனர்களை அழைத்து அவர்களுக்கு முதல் பிரதி அடிப்படையில் பணத்தை கொடுத்து படம் தயாரிப்பது தான் அந்த குழுவின் நோக்கம். இதற்காக சேரன், வசந்தபாலன், மிஷ்கின், கவுதம்மேனன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட முக்கியமான இயக்குனர்களின் லிஸ்ட்டை தயார் செய்து கொடுத்தார்கள் இங்குள்ள சிலர். இவர்கள் இயக்கிய படங்களை பார்க்க வேண்டுமே என்று கேட்டது மேற்படி குழு. அதற்கென்ன? ஏற்பாடு பண்ணிட்டாப் போச்சு என்று கூறிய மீடியேட்டர்கள் முதல் படமாக அவர்களுக்கு காண்பித்தது எதை தெரியுமா? கவுதம் மேனன் இயக்கிய நடுநிசி நாய்களை. இந்தியாவின் கலாச்சாரத்தை சொல்கிற இயக்குனர்களை தேடி தான் நாங்கள் இங்கு வந்தோம். ஆனால் இப்படி ஒரு படத்தை போட்டு எங்களை தடுமாற வச்சிட்டீங்களே என்று முகம் சுளித்த டீம், அடுத்தடுத்த படங்களை கூட பார்க்காமல் எஸ்கேப்... சாதுவா இருக்கேன்னு அவுத்துவிட்டாலும் தப்பு, சண்டித்தனம் பண்ணுதேன்னு கட்டிப் போட்டாலும் தப்பு. என்னடா இப்படி ஆயிருச்சேன்னு கவலையோடு நகம் கடிக்குது மீடியேட்டர் வட்டாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக