பக்கங்கள்

04 அக்டோபர் 2010

குத்தாட்ட நடிகைகளை மிஞ்சினர்: கவர்ச்சிக்கு மாறிய கதாநாயகிகள்!

முந்தைய கால கட்டத்தில் கவர்ச்சிக்கென சி.ஐ.டி. சகுந்தலா, ஜெயமாலினி, ஜோதிலட்சுமி இருந்தனர். அவர்களை தொடர்ந்து டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா, அனுராதா வந்தார்கள். அவர்கள் அரைகுறை ஆடையுடன் ரசிகர்களுக்கு கிளு கிளுப்பூட்ட பயன்படுத்தப்பட்டனர்.
இப்போது அது போன்ற நடிகை வகையறாக்கள் மங்கிப்போய் விட்டார்கள். கதாநாயகிகளே அவர்கள் பணியை கையிலெடுத்து கொண்டனர். புதிதாக வரும் கதாநாயகிகள் கவர்ச்சியின் எல்லை வரை தொடுகிறார்கள்.
சீ சீ என பத்மினி, சரோஜாதேவி காலத்தில் முகம் சுழிக்கப்பட்ட நீச்சல் உடை காட்சிகளிலும் கலக்குகிறார்கள். இதனால் சமீப காலங்களில் தலை தூக்கிய சில குத்தாட்ட நடிகைகளும் ஓரிரு படங்களோடு காணாமல் போயினர்.
நமீதாதான் அதிகபட்ச கவர்ச்சிக்கு அச்சாரம் போட்டார். தமிழில் நம்பர் ஒன் கதாநாயகி அந்தஸ்தில் இருந்த நயன்தாரா “பில்லா” படத்தில் நீச்சல் உடைக்கு இறங்கினார். அதன் பிறகு அனைத்து கதாநாயகிகளுக்கும் துணிச்சல் வந்தது. ஆடை கட்டுப்பாடுகளை அவிழ்த்து போட்டனர்.
குடும்ப பாங்காகத்தான் நடிப்பேன் என அடம் பிடித்த சினேகா தெலுங்கு படங்களில் கவர்ச்சி மழை பொழிகிறாராம். முத்தக்காட்சிகளிலும் வரிந்து கட்டுகின்றனர்.
சிம்பு- நயன்தாரா முத்தக்காட்சி போஸ்டர்கள் சில வருடங்களுக்கு முன் நகரமெங்கும் சூடேற்றின. திரிஷாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் உதட்டோடு உதடு பதித்தார். அருந்ததிக்கு பின் தமிழ் மார்க்கெட்டில் வலுவாக காலூன்றியுள்ள அனுஷ்காவும் கவர்ச்சியை அள்ளி தெளிக்கிறார்.
புதுவரவு நாயகிகளான தபஸ்ரீ, ஹன்சிகா மோட்வாணி போன்றோரும் கவர்ச்சியை வாரி இறைக்கின்றனர். பாவாடை தாவணியில் பார்த்த உருவமா….? என பாடவைத்த நாயகிகள் ஆடை அவிழ்ப்பு செய்து ஹாலிவுட் தோற்றத்துக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக