பக்கங்கள்

07 அக்டோபர் 2010

நயன், பிரபுதேவா ஜோடியாக சுற்றுவதை தடை செய்க-ரமலத் அதிரடி.

தனது கணவரை நடிகை நயனதாராவின் பிடியிலிருந்து மீட்டுத் தரக் கோரி சென்னை குடும்ப கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள பிரபுதேவாவின் மனைவி ரமலத், இன்று புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், வழக்கில் நயனதாராவையும் சேர்க்க வேண்டும். பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக சென்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கும் பேட்டி அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தனது கணவருடன் நடிகை நயனதாரா கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். அவரிடமிருந்து பிரபுதேவாவை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் நான் விவாகரத்துக்கு உடன்பட மாட்டேன் என்று கூறி குடும்ப நல கோர்ட்டை அணுகியுள்ளார் ரமலத்.
ரமலத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் பிரபுதேவா அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்து என்ன செய்வது என்பது குறித்து வக்கீல்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் இன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார் ரமலத். இதற்காக இன்று குடும்பநல கோர்ட்டுக்கு வந்த ரமலத்துடன் அவரது குழந்தைகளும் வந்திருந்தனர்.
வழக்கறிஞர் ஆனந்தன், ரமலத் சார்பில் தாக்கல் செய்த மனுவில்,
நானும் பிரபுதேவாவும் கடந்த 9.8.1995ல் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணம் இந்து முறைப்படி நடந்தது. எங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது.
பிரபுதேவா-நயனதாரா கள்ளக்காதல்
ஆனால் நயன்தாரா வருகைக்கு பிறகு பிரபுதேவா நடவடிக்கைகள் மாறின. அவரை வைத்து எனது கணவர் வில்லு என்ற படத்தை இயக்கினார். அப்போது நெருக்கமாக பழகினர். அவர்களுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. தற்போது பிரபுதேவா வீட்டுக்கு வருவதில்லை. நயன்தாராவுடனேயே இருக்கிறார்.நயன்தாராவை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேட்டி அளித்துள்ளார். நயன்தாராவும் என்னை தொடர்பு கொண்டு இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்குமாறு நிர்ப்பந்தப்படுத்தி வருகிறார்.
நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்து கொள்வது அநீதி, நானும் என் குழந்தைகளும் பிரபுதேவாவை சார்ந்து வாழ்கிறோம்.
கல்யாணத்திற்கு தடை விதிக்க வேண்டும்
எனவே பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்வதற்கு இக்கோர்ட்டு இடைக்கால தடை விதிக்க வேண்டும். நயன்தாராவும், பிரபுதேவாவும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக சென்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கும் பேட்டி அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்.
தங்களை கணவன், மனைவியாக பாவித்து பேட்டி அளிப்பதை தடை செய்ய வேண்டும். நயன்தாராவை இவ்வழக்கில் பிரதிவாதியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார் ரமலத்.
சற்றும் மனம் தளராத பிரபுதேவா-டிசம்பரில் கல்யாணமாம்!
ரமலத் இப்படி சட்ட ரீதியான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளபோதிலும் நயனதாரா மீதான மோகத்தை பிரபுதேவா சற்றும் குறைத்துக் கொள்வது போலத் தெரியவில்லை.
டிசம்பரில் வைத்து நயனதாராவை கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நானும், நயனதாராவும், இரண்டு மாதங்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்.
இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதா? அல்லது எளிமையாக நடத்துவதா? என்றும் இன்னும் திட்டமிடவில்லை. பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார் பிரபுதேவா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக