பக்கங்கள்

29 அக்டோபர் 2010

எல்லோரும் பாராட்டுறாங்க!-ரீமா சென்.

ரீமா சென்னுக்கு இன்று பிறந்தநாள். முன்னெப்போதையும் விட சந்தோஷமாக இந்த பிறந்தநாளைக் கொண்டாடுவதாக அவர் தெரிவித்தார்.
அப்படியென்ன விசேஷம் இந்த ஆண்டு மட்டும்?
"காரணம் இருக்கே... இந்த ஆண்டு நான் நடித்த ஆக்ரோஷ் இந்திப் படம் வெளியாகியுள்ளது. இதில் எனக்குத்தான் அதிக முக்கியத்துவம். படம் வெளியானதும் பாலிவுட்டின் பெரிய டைரக்டர்கள் எல்லாம் என்னை கூப்பிட்டுப் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
இதுவரை என்ன போன் நம்பரே தெரியாமலிருந்த டைரக்டர்கள் கூட, தெரிந்தவர்களிடம் நம்பர் வாங்கி என்னை கூப்பிட்டாங்கன்னா பாத்துக்கங்க..." என்கிறார் ரீமா குஷியாக.
அப்போ கோலிவுட் அவ்வளவுதானா... இனி இங்குள்ள ரசிகர்களை மறந்துவிடுவாரா?
"இல்லையில்லை... விரைவில் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கப் போகிறேன்...," என்றார்.
பிறந்த நாள் கொண்டாட்டமெல்லாம் எப்படி?
"என் தங்கை திஷா ஒரு பெரிய பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்கா. இந்த இரவு விருந்துக்கு 50பேரை மட்டும் கூப்பிட்டிருக்கேன்...", என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக