பக்கங்கள்

17 அக்டோபர் 2010

நான் அதிக சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள் – தமன்னா!

நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள். நான் ஒருபோதும் அவ்வளவு சம்பளம் கேட்கவில்லை என்கிறார் தமன்னா.
தமிழ் சினிமாவின் ஹாட் ஸ்டாராக திகழ்பவர் தமன்னா. கை நிறையப் படங்களுடன் தமிழ், தெலுங்கில் பிசியாக ஓடிக் கொண்டிருக்கும் முன்னணிக் குதிரை. இந்த நிலையில் தமன்னா 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இதை மறுக்கிறார் தமன்னா. இதுகுறித்து அவர் கூறுகையில்,
தமிழில் கார்த்தியுடன் சிறுத்தை, தெலுங்கில் அல்லு அர்ஜுன், நாக சைதன்யா படங்கள் என 3படங்களில் நடித்து வருகிறேன்.
அடுத்து தமிழில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர், ராம் ஆகியோருடன் 2 படங்கள் உள்ளன. இவற்றின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை கால்ஷீட் இல்லை. ஆனால் சிலர் என்னிடம் வந்து கால்ஷீட் கேட்டனர். எனது நிலையைச் சொல்லி மறுத்து விட்டேன். இதனால் கோபமாகி நான் 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.
கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு நான் வந்துள்ளேன். அதைப் புரிந்து கொள்ளாமல் இப்படி வதந்தி பரப்புவது நியாயமா என்று விசனப்படுகிறார் தமன்னா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக