தெலுங்குப் படம் ஒன்றின் க்ளைமாக்ஸ் காட்சியில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்பதில் ப்ரியாமணிக்கும் விமலா ராமனுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
விஜய் என்ற புதிய இயக்குநர் இயக்கும் தெலுங்குப் படம் ஒன்றில் ப்ரியாமணியும் விமலா ராமனும் நடிக்கிறார்கள்.
சுமந்த் நடிக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் ஆரம்பத்தில் ப்ரியாமணியை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அதுவரை குழப்பமின்றி போய்க்கொண்டிருந்த ஷூட்டிங்கில், விமலா ராமன் வந்ததும் பிரச்சினை செய்ய ஆரம்பித்தாராம் ப்ரியாமணி. .
எனக்கு என்ன ரோல், விமலா ராமனுக்கு என்ன ரோல்? என்று கேட்க ஆரம்பித்துவிட்டாராம்.
க்ளைமாக்ஸில் தன்னை விட விமலா ராமனுக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் என்பதால் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டாராம் ப்ரியாமணி.
"நான் ஒரு தேசிய விருது பெற்ற நடிகை ... நானும் அவளும் ஒண்ணா... நான் ஷூட்டிங்குக்கு வரலேன்னா என்ன பண்ணுவீங்க?", என்று ப்ரியாமணி எகிற, "உங்களுக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தைத்தான் ராவணன்ல பார்த்தோமே... அதுக்கு இது ஒண்ணும் குறைஞ்சிடலை... போங்க", என்று பதிலுக்கு எகிறியிருக்கிறார் இயக்குநர்.
விஷயம் கேள்விப்பட்ட விமலா ராமன், "பருத்தி வீரன்ல யார் நடிச்சிருந்தாலும் இந்த தேசிய விருது கிடைச்சிருக்கும். ஏன்னா அது எந்த நடிகையோட, நடிகரோட படமும் இல்லை. அமீர் சார் படம்...!" என தன் பங்குக்கு குத்த ஆரம்பித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக