ஜெனிலியாவுக்கு பல் வரிசை பெரிசா இருந்தாலும், ஆள் பிரமாதமான அழகுடன் இருக்கிறார் என்று ஜெனிலியாவின் பல்லை வைத்து உத்தமபுத்திரன் ஆடியோ ரிலீஸ் விழாவில் ஜொள்ளினார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
வழக்கமாக பார்த்திபன்தான் இப்படி அக்கு வேறு ஆணி வேறாக ஹீரோயின்களின் அழகை விமர்சித்து புளகாங்கிதப்படுவார். அந்த பெருமைக்குரிய வரிசையில் நேற்று தன்னையும் நுழைத்துக் கொண்டார் கே.எஸ்.ரவிக்குமார்.
ரெடி என்ற பெயரில் தெலுங்கில் எடுத்த படத்தை ரீமேக் செய்துள்ளனர் உத்தமபுத்திரன் என்ற பெயரில். தனுஷ்தான் நாயகன், ஜெனிலியாதான் நாயகி. மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீடு நேற்று நடந்தது. புன்னகை இளவரசி சினேகா குத்துவிளக்கை ஏற்றி வைத்து மங்களகரமாக விழாவைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ரவிக்குமார் ஜெனிலியாவின் அழகைப் புகழ்ந்து அகமகிழ்ந்தார். அவர் பேசுகையில்,
படத்தின் கதாநாயகி ஜெனிலியா, அழகான நடிகை. முத்து பல் வரிசை என்று சொல்வார்கள். அவருக்கு பல்லுதான் கொஞ்சம் பெரிசு. என்றாலும், அழகாகத்தான் இருக்கிறார் என்றார் ரவிக்குமார்.
இவராவது பரவாயில்லை, ஜெனிலியாவைப் போல ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை என்று ஒட்டுமொத்தமாக ஜொள்ளி குதூலகலித்தார் விவேக்.
அவர் பேசும்போது, ஜெனிலியாவை பார்த்தால், பக்கத்து வீட்டு பெண் போல் தெரிகிறார் என்று சொன்னார்கள். பக்கத்து வீட்டில், இப்படி ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை. ஜெனிலியா, இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மற்ற கதாநாயகிகள் மாநில அழகிகள் என்றால், இவர் இந்திய அழகி என்றார் விவேக்.
சென்னையில், மழையால் ஈரம் என்றால், இவர்கள் பேசியதால் அந்த மேடையே ஓவர் ஈரமாகிப் போச்சு போங்கோ…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக