பக்கங்கள்

20 அக்டோபர் 2010

கவர்ச்சியுடையார் இகழ்ச்சியடையார்! நாயகிகளின் புது பாலிஸி!!

தமிழ் சினிமா நாயகிகளில் பலரும் சமீப காலமாக கவர்ச்சியை நம்பித்தான் காலத்தை ஓட்டுகிறார்கள் என்பதில் இருவேறு மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. முன்பெல்லாம் சினிமாக்களில் கவர்ச்சிக்கு என்று தனி நாயகி இருப்பார்.
அவர் காமெடி நடிகருக்கு ஜோடியாகவோ, விலைமாது கேரக்டரிலேயோ அல்லது ஏதாவது தள்ளுவண்டி, இட்லிக்கடைக்காரியாகவோ நடிப்பார். அதற்கு பிறகு வந்த சினிமாக்களில் ஒரு பாடல் குத்துப்பாட்டாகவும், அந்த குத்துப்பாட்டில் கவர்ச்சி நடிகையின் குத்தாட்டமும் இடம்பெற்றன.
ஆனால் சமீப காலமாக கவர்ச்சிக்கு தனி நடிகை தேவையில்லை என்று சொல்கிற அளவுக்கு படத்தின் நாயகிகளே கவர்ச்சி உடையில் கலக்க ஆரம்பித்துள்ளனர்.
சினிமாவில் நுழைந்தபோது பாவாடை தாவணியணிந்து பக்கத்து வீட்டுப் பெண் போல இருந்த நயன்தாரா பில்லா படத்தில் நீச்சல் உடையணிந்து ரசிகர்களை கிறங்கடித்தார். அதேபோல புதுமுக நடிகைகள் பலரும் எதற்கும் ரெடி என்கிற பாலிஸியுடன்தான் சினிமாவில் நுழைகிறார்கள். இதனால் கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.
எத்தனை புதுமுகங்கள் வந்தாலும், எவ்வளவு கவர்ச்சி காட்டினாலும் கவர்ச்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற பாலிஸியுடன் இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரீமா சென். பட வாய்ப்புகளுடன் தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் பல கண்டிஷன்களை போடும் ரீமா கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு வந்த வாய்ப்புகளையெல்லாம் பல காரணங்களுக்காக தட்டிக்கழித்த அவர், ஆக்ரோஷ் என்ற இந்திப்படத்தில் நடித்தார்.
அந்த படம் எதிர்பார்த்ததை விட பெரிய ஹிட் ஆகி விட்டதால் இனி மும்பையை விட்டு வெளியேறுவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக