பக்கங்கள்

21 அக்டோபர் 2010

மீனாட்சியின் கவர்ச்சி உடையும்; பார்த்திபனின் ஏடாகூட கமெண்ட்டும்!

பொது விழாக்களுக்கு கவர்ச்சி உடையணிந்து வருவதையே எழுதப்படாத பாலிஸியாக வைத்துக் கொண்டு செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர் மீனாட்சி.

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை தாவணியில் தோன்றி அசத்திய மீனாட்சியா இது? என்று முகம் சுழித்து கேட்கும் அளவுக்கு திரையில் தோன்றும் மீனாட்சி, அதைவிட மோசமான ஆடைகளையே பொது விழாக்களுக்கும் அணிந்து வருவார். அப்படி வரும் நடிகைகள் கண்ணை திறக்க முடியாத அளவுக்கு பிளாஷ் மழை பொழியும்.
அப்படியொரு பிளாஷ் மழை நடிகை மீனாட்சியின் மீது பொழிந்தது. அவர் நாயகியாக நடித்திருக்கும் மந்திர புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அத்த‌னை ‌பேரையுமே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சிக்கென்ற ஆடையுடன் வந்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன் தனக்கே உரிய நையாண்டியுடன் மீனாட்சியைப் பற்றி ஏ‌டாகூடமான கமெண்ட் அடித்தார். பார்த்திபன் பேசுகையில், போட்டோகிராபர்களுக்கு மீனாட்சியின் கால் ஷீட் கிடைச்சிருச்சு, என்ற கமெண்ட் அடித்தபோது ஒட்டுமொத்த கூட்டமும் சிரிக்க, அவர்கள் சிரிப்பது தன்னைப் பார்த்துதான் என்பதுகூட புரியாமல் கன்னத்தில் கை வைத்திருந்தார் மீனாட்சி.
மீனாட்‌சியின் உடை பற்றி படத்தின் டைரக்டரும் ஹீரோவுமான கரு.பழனிப்பன் பேசுகையில், மீனாட்சி அணிந்து வந்திருக்கும் உடை எல்லோரையும் கவர்ந்து இழுக்கிறது. இந்த பங்ஷனுக்‌கு எப்படி வரணும்னு நான் மீனாட்சிக்கு போன் பண்ணி சொல்ல சொன்னேன். அசிஸ்டென்ட் டைரக்டர்கள் போன் பண்ணி நல்லா டிரஸ் பண்ணிட்டு வாங்கன்னு சொல்லியிருந்தாங்க. அப்புறமும் இப்படி… என்ன செய்ய?, என்றார். அதோடு படத்தில் இடம்பெறும் ஒரு வசனத்தை குறிப்பிட்டு பேசினார். “பையன் ஒழுங்கா படிக்காம மக்கா இருந்தான்னா போவட்டும். அவனை சினிமா ஹீரோவாக்கிட்டு போறேன்” என்பதுதான் அந்த டயலாக்காம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக