பக்கங்கள்

27 செப்டம்பர் 2010

சென்னையை மறக்கமாட்டேன்: அசின்.

சென்னையை எப்போதும் மறக்கமாட்டேன் என்று நடிகை அசின் கூறினார்.
சென்னையில் ஷூட்டிங்கில் பங்கேற்றபோது அசின் கூறியதாவது: டைரக்டர் சித்திக்கின் தீவிர ரசிகை நான்.
தமிழில் அவர் இயக்கிய பிரண்ட்ஸ் மற்றும் சில மலையாள படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். மலையாளத்தில் வெளிவந்த பாடிகார்ட் படத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது. அப்போது ஹிந்திப் படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போய்வவிட்டது.
இப்போது அதே பாடிகார்ட் படம்தான் தமிழில் காவலனாக ரீமேக்காகிறது. சித்திக்தான் இயக்குகிறார். இந்த படத்தில் நான் நடிப்பதில் மகிழ்ச்சி. ஹிந்தியில் நடிப்பதால் தமிழை மறந்துவிடவில்லை. என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது தமிழ் திரையுலகம்தான். சென்னையை எப்போதும் மறக்கமாட்டேன். இனி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக