பக்கங்கள்

16 செப்டம்பர் 2010

கவர்ச்சி வலம் வரும் பிரியாமணி!

தெலுங்குப் படங்களில் படு கவர்ச்சியாக நடித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் நடிகை பிரியாமணி. பிகினி உடைகள் என்றாலும் அவர் கவலைப்படுவதில்லை. படு கவர்ச்சி உடைகளை அணிந்து நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
தற்போது அடுத்த கட்டமாக ஹீரோவுக்கு இங்கிலீஷ் கிஸ் தரும் காட்சியில் நடித்துள்ளார். விஜி சிபிவிஸ்தா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பிரியாமணி நடிக்கிறார். இதில் சுமந்த் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடியும் கட்டத¢தை நெருங்கியுள்ளது.
இதுவரை தயாரான காட்சிகளை பட யூனிட் திரையில் பார்த்திருக்கிறது.
சுமந்த்-பிரியாமணி ஜோடியின் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கிறது என அனைவரும் பாராட்டினார்களாம். இதையடுத்து இயக்குனர் விஜிக்கு ஒரு யோசனை தோன்றியது.
இதில் இருவரையும் முத்தக் காட்சியில் நடிக்க வைத்தால் என்ன என்பதுதான் அது. தயங்கியபடியே பிரியாமணியிடம் கேட்க, உடனே ஓகே சொல்லிவிட்டாராம் பிரியா. கூச்ச சுபாவம் காரணமாக ஹீரோ சுமந்த் தயங்கினாராம். பின் ஒரு வழியாக அவரையும் சம்மதிக்க வைத்துவிட்டார் விஜி.
இதையடுத்து ஸ்டுடியோவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர் மட்டுமே இருக்க சுமந்த்-பிரியாமணி நடித்த ஆங்கில முத்தக் காட்சி படமாகியுள்ளது. படத்தில் இக்காட்சி ஹைலைட்டாக இருக்கும் என்கிறது யூனிட்.
தெலுங்கு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஆனாலும் என்ன அந்தப் படத்தை தமிழில் டப் செய்யமாட்டார்களா என்ன....அப்போது தமிழ் ரசிகர்களும் அந்தப் படத்தைப் பார்த்து ஆனந்தமடைவார்கள் என்கிறது படத் தயாரிப்பு குழு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக