நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள் நல்லுள்ளங்களாக இருப்பின், துன்பங்களில் கூட இன்பங்களை காணலாம்.
12 செப்டம்பர் 2010
அங்காடித் தெரு போல்...
கௌதமன் இயக்கத்தில் எழுத்தாளர் நீல.பத்மநாபனின் "தலைமுறைகள்' நாவல் "மகிழ்ச்சி' என்ற பெயரில் படமாகியுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது. கௌதமன், சீமான் கதாநாயகர்களாக நடிக்க அஞ்சலி நாயகியாக நடித்துள்ளார். கார்த்திகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அஞ்சலி, ""கற்றது தமிழ்', "அங்காடித் தெரு' படங்களில் வந்த பெயர்களைப் போல் இந்தப் படமும் எனக்கு பெயர் வாங்கித்தரும். மகிழ்ச்சி படத்தில் நடித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதில் குழலி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மகிழ்ச்சி என்ற தலைப்பை இத்தனை நாள் எப்படித்தான் விட்டு வைத்திருந்தார்களோ தெரியவில்லை. இதுவரை முழு கிராமத்துப் பெண்ணாக நடித்ததில்லை. இப்படம் அந்தக் குறையை தீர்த்து வைத்துள்ளது. "அங்காடித் தெரு' போல் இந்த வருடத்தில் இதுவும் சிறந்த படமாக இருக்கும்'' என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக