பக்கங்கள்

08 செப்டம்பர் 2010

ஆபாச கான்செப்ட் டைரக்டர் வீட்டில் கல்வீச்சு!

உயிர், மிருகம் என்று இரண்டு படங்களிலுமே ஊர் வாயை மெல்ல வைத்தவர் டைரக்டர் சாமி. அவரது முன்றாவது படமான சிந்து சமவெளி பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது. அதோடு நில்லாமல் நாலா புறத்திலும் சாமிக்கு அர்ச்சனை(?) வந்த வண்ணம் இருக்கிறதாம். நேற்று காலை அவரது வீட்டில் கல்லெறி சம்பவங்களும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பதினெட்டு வயசில் மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் அப்பா, தாயில்லாத அந்த மகனை கல்லு£ரி ஹாஸ்டலுக்கு அனுப்பி வைக்கிறார். மருமகளுடன் அந்த வீட்டில் தங்கியிருக்கும் அவர் சந்தர்ப்ப சூழ்நிலையில் அவள் மீதே காதலாகி உறவு கொள்கிறார் என்பதாக போகிறது கதை. அதுமட்டுமல்ல, இந்த கள்ளக்காதலுக்கு மருமகளும் உடன்படுகிறாள் என்பதுதான் பேரதிர்ச்சி.
மக்களின் ரீயாக்ஷன் எப்படியோ? திரையுலக வட்டாரத்தில் இந்த படத்திற்கு பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. உதவி இயக்குனர்கள் பலர் கூடி கூடி பேசுகிறார்கள். கொதிக்க கொதிக்க திட்டுகிறார்கள். தியேட்டர் விசிட்டுக்கு வந்த சாமியை சுற்றி வளைத்ததாகவும் கேள்வி. இந்த நிலையில்தான் இன்று காலை இந்த சம்பவம். அவரது வீட்டில் கல்லெறிந்ததுடன், வாராண்டாவில் நிறுத்தி வைத்திருந்த அவரது காரையும் சேதப்படுத்திவிட்டு தப்பியோடியிருக்கிறார்கள் யாரோ?
கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் சாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக