பக்கங்கள்

10 செப்டம்பர் 2010

ஆபாசமாக நடித்ததாக வழக்கு: தள்ளுபடி செய்யக்கோரி மல்லிகா ஷெராவத் முறையீடு.

ரஜினிகாந்த் போரிலே என்பவர் தம்மீது தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கோரி பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சிடம் முறையீடு செய்துள்ளார்.
ஆபாசமாக நடித்ததாக மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யக் கோரி யாவத்மால் மாவட்டத்தில் உள்ள பந்தர்காவ்டா முதல் வகுப்பு ஜூடிசியல் நீதிமன்றத்தின் முன்பு ரஜினிகாந்த் போரிலே என்பவர் 2009ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
'ஷாதி கே பெஹலே', 'மர்டர்' மற்றும் 'மான் கயா முகல் இ அஸம்' போன்ற படங்களில் மல்லிகா ஷெராவத் ஆபாசமாக நடித்ததாகவும், அது இளைஞர்களையும், சமுதாயத்தையும் பெரிதும் பாதித்துள்ளதாகவும் ரஜினிகாந்த் போரிலே தனது மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.
இவ்வழக்கு தொடர்பாக மல்லிகாவுக்கு இந்த நீதிமன்றம் 2010 ஏப்ரல் 3ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. எனினும் நீதிமன்றத்தில் மல்லிகா ஆஜராகவில்லை.
தற்போது அவ்வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மல்லிகா ஷெராவத் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.கோடே, இதுதொடர்பாக மகாராஷ்டிர அரசுக்கும், ரஜினிகாந்த் போரிலேவுக்கும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக