பக்கங்கள்

29 நவம்பர் 2010

அடித்தாரா நயன்தாரா?

ஹன்சிகாவை பிரபு தேவா காதலிப்பதாகவும், இருவரும் ஹோட்டலில் ஒன்றாக இருந்ததை கையும் களவுமாகப் பிடித்த நயன்தாரா, பிரபு தேவாவின் சட்டையைப் பிடித்து சண்டை போட்டார் என்றும் செய்திகள் வந்தன.
நயன்தாரா வந்ததும் அங்கிருந்து நைசாக நழுவப் பார்த்த ஹன்சிகாவை அடித்தார் நயன்தாரா என்று ஒரு ஆங்கிலப் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டு இன்னும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்த விவகாரம் குறித்து ஹன்சிகா இன்று விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், எனக்கு இப்போதுதான் 19 வயசாகுது. அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர்.
பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்ற அளவில் அவரை நேசிக்கிறேன். எனக்கு அண்ணன் மாதிரின்னு கூட சொல்லலாம்.
நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவில்லை" என்றார்.
என்னமோ போங்க... இதுக்கெல்லாம் 'ஐ விட்னஸா' தேடிக்கிட்டிருக்க முடியும்!

28 நவம்பர் 2010

தமிழுக்கு வரும் மதுரிமா.

தெலுங்கு சினிமாவின் கவர்ச்சிகரமான நாயகிகளில் முக்கியமானவரான மதுரிமா இப்போது தமிழுக்கும் வருகிறார்.
மலையாளத்து ஷாஜி கைலாஷ் இயக்க, ஆர்.கே. நாயகனாக நடிக்கும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தின் நாயகியாக நடிக்கிறார் மதுரிமா.
இந்தியில் பெரும் வெற்றிப் படமாக, பரபரப்பாகப் பேசப்பட்ட 'அப்தக்சப்பன்' படத்தின் மூலக் கதையைத் தழுவி உருவாக்கப்படும் படம் இந்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு. இப்படத்தின் டைட்டிலை கமல்ஹாசனிடமிருந்து பிரத்யேக அனுமதி பெற்று வாங்கியுள்ளனராம்.
இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஆர்.கே. அவருக்கு ஜோடி போடுகிறார் மதுரிமா. தெலுங்கைப் போல தமிழிலும் கவர்ச்சித் தென்றலை அவர் தவழ விட வருவதால் இங்கு ஏற்கனவே உள்ள ஹீரோயின்கள் வட்டாரத்தில் சற்றே நடுக்கம் ஏற்பட்டுள்ளதாம்.
இப்படத்தின் வெற்றியைப் பொறுத்து அடுத்தடுத்து தமிழிலும் தடபுடலாக நடிக்க தயாராகி வருகிறாராம் மதுரிமா.

26 நவம்பர் 2010

கிள்ளாதீங்கண்ணே என்று கண்டித்த சினேகா!

கோழிப் பண்ணையைப் பார்வையிட வந்த போது, தனது இடுப்பை தொடர்ந்து கிள்ளியபடியும், இடித்தபடியும் இருந்த இளைஞரை, சற்றுகோபத்துடன், தயவு செய்து இப்படி செய்யாதீங்கண்ணே என்று கூறி கண்டித்தார் நடிகை சினேகா. இதையடுத்து அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.
நடிப்பு தவிர விளம்பரப் படங்கள், கடை திறப்பு உள்ளிட்டவற்றிலும் பிசியாக இருக்கிறார் சினேகா. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், ஹோட்டல் திறப்பு விழாவில் சினேகா கலந்து கொண்டார்.
அழகான சேலையில், கழுத்து நிறைய நகையைப் பூட்டிக் கொள்ளாமல் சிம்பிளாக அதே சமயம் படு க்யூட்டாக வந்த சினேகாவைப் பார்க்க கூட்டம் கூடி விட்டது.
ஹோட்டல் திறப்பை முடித்த பின்னர் அதன் உரிமையாளர் வைத்துள்ள ஈமு கோழிப் பண்ணையைப் பார்க்கச் சென்றார் சினேகா. இதையடுத்து அங்கு பெரும் கூட்டம் கூடி விட்டது. கூடியிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் சினேகாவை மனம் போனபடி படம் பிடித்தனர்.
பெண்கள் சிலர் தங்களுக்கு போஸ் தருமாறு கூறவே சினேகாவும் புன்னகைத்தபடி நின்றார். இதையடுத்து தங்களது செல்போன்களில் சினேகாவை படம் எடுத்தனர் அப்பெண்கள்.
அப்போது சினேகாவை நெருக்கியபடி நின்ற ஒரு நபர் அவரது இடுப்பைக் கிள்ளியுள்ளார். இதைப் பார்த்து கோபமடைந்த சினேகா, அவரிடம் திரும்பி, அப்போதிருந்தே இடித்துக் கொண்டே இருக்கறீங்கண்ணே, நல்லா இல்லே. இன்னொரு முறை இப்படி செய்யாதீங்க என்று கண்டித்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த நபரை கடுமையாக எச்சரித்து, திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டனர்.

24 நவம்பர் 2010

காவலன் படத்தை திரையிட உயர்நீதிமன்றம் தடை!

நடிகர் விஜய் நடித்துள்ள காவலன் படத்தை 6 வார காலத்திற்கு வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த சந்திரா இன்கார்பரேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரவணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில்,
நடிகர் விஜய்- அசின் நடித்த காவலன் படத்தை ஏகவனூர் கிரியேஷன்ஸ் பட நிறுவன உரிமையாளர் ரொமேஷ்பாபு தயாரித்துள்ளார். டைரக்டர் சித்திக் இயக்கி உள்ளார். வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.
படத்தை அடுத்த மாதம் 17-ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ரொமேஷ்பாபுவிடம் இருந்து ரூ.5.50 கோடிக்கு வாங்கினேன். இதற்கான ஒப்பந்தம் 29-9-2010 அன்று போடப்பட்டது. இதுவரை நான் ரூ. ஒன்றரை கோடியை முன்பணமாக கொடுத்துள்ளேன்.
இந்நிலையில் காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமையை உரிமையாளர் ரொமேஷ்பாபு சினிமா பாரடைஸ் நிறுவன உரிமையாளர் சக்தி சிதம்பரத்துக்கு விற்றுள்ளார்.
இதுபற்றி நான் சக்திசிதம்பரம் மற்றும் இப்படத்தை பிரின்ட் செய்யும் கலர் லேப்புக்கும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். மேலும் தயாரிப்பாளரிடம், கலர் லேப்பிடம் இருந்து வெளிநாட்டு உரிமை எனக்கு வழங்கியதற்கான கடிதம் வாங்கி தரும்படி வலியுறுத்தினேன்.
அதற்கு அவர் இனி என்னிடம் கலர் லேப் கடிதம் கேட்டால் வெளிநாட்டு உரிமைக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
நான் தயாரிப்பாளரிடம் மீதி தொகையை கொடுக்கும் போது கலர்லேப் என்னிடம் காவலன் பட பிரின்டை ஒப்படைக்க வேண்டும். வேறு யாருக்கும் பிரின்ட் கொடுக்க கூடாது என தடை விதிக்க வேண்டும். வெளிநாட்டு உரிமையை வேறு யாருக்கும் கொடுப்பதற்கும், படத்தை வெளியிடவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை இன்று விசாரித்த நீதிபதி ராஜேஷ்வர், படத்தை 6 வாரத்திற்கு வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், விளக்கம் அளிக்கும்படி தயாரிப்பாளர் ரொமேஷ் பாபு, விநியோகஸ்தர் சக்திசிதம்பரம், கலர் லேப் நிர்வாகி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

21 நவம்பர் 2010

சீதையாக நயனதாரா நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா போராட்டம்!

தெலுங்குப் படத்தில் சீதை வேடத்தில் நடிகை நயனதாரா நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இன்று சிவசேனா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. ராமாயண கதையை இதில் படமாக்குகின்றனர். இதில் ராமர் வேடத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரபுதேவாவுடன் கள்ளக் காதல் கொண்டு, பிரபுதேவா குடும்பத்தில் புயலைக் கிளப்பி வரும் நயனதாரா, சீதை வேடத்தில் நடிப்பதா என்று அங்கு ஆட்சேபனை கிளம்பியது.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல், சீதை வேடத்தில் நயனதாராவே நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் இதற்கு இந்து அமைப்புகள் ரூபத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்து மக்கள் கட்சி தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சிவசேனா சார்பில் இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரன் நினைவுப் பூங்கா முன்பு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் நயனதாரா சீதை வேடத்தில் நடிப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில், நயனதாரா சீதை வேடத்தில் நடிப்பதை ஏற்க முடியாது. இது இந்துக்களை இழிவுபடுத்தும் செயல். எனவே இதை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறோம். நயனதாரா இந்த வேடத்தில் நடிப்பது உறுதியானால் அதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

18 நவம்பர் 2010

அசினுடன் விஜய் நெருக்கம்!

இலங்கை சென்று வந்ததால் தமிழர்களால் சபிக்கப்பட்டவர் அசின். இப்போது விஜய்யின் காவலன் படத்தில் தமிழர்களின் எதிர்ப்போடு நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படபிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது அசினுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பை கேட்டு வாங்கியது காவலன் படக்குழு. படபிடிப்பு தளத்தின் முன்பு பல தமிழ் இயக்கங்கள் போராட்டம் நடத்தியது தான் காரணம். என்ன வேடிக்கை!
இந்த படத்தை இயக்குபவர் இயக்குனர் சித்திக். அவர் இது பற்றி பேசியதாவது, படத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்பது என் வேலை. மற்றதைப் பற்றி எனக்கு தெரியாது என்று சொன்னார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தபோது, இலங்கை சம்மந்தமாக எதுவும் அசினிடம் கேட்க கூடாது என்று கட்டளையிட்டார்கள். மீறி இலங்கைப் பேச்சை எடுத்தும் அசின் விறு விறுவென வெளியேறினார். இப்படியெல்லாம் இருக்கிற நிலையில்...
காவலன் படத்தின் பாடல் காட்சி பூனேவின் அருகில் உள்ள லவாசா மலையில் எடுக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் விஜய்யுடன் அசின் பயங்கர நெருக்கம் காட்டி இருக்கிறாராம். விஜய்யுடன் அசினுக்கு இது மூன்றாவது படம் என்பதால் புரிதல் அதிகமாய் இருக்கலாம் என்று பேசிக் கொள்கிறது சினிமா வட்டாரம்.
இருந்தாலும் பாடல் காட்சி ரொம்ப சூப்பரா வந்திருக்கு என்று சொல்கிறது படக்குழு. இந்தி பக்கம் போனதிலிருந்து அசின் கவர்ச்சியில் கொஞ்சம் தாராளம் காட்டி வருகிறார் என்றும் இப்பொது சல்மான் கானுடன் நடிக்கும் ரெடி படத்திலும் சல்மானுடன் அசின் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார் என்பதும் காத்து வழியாக கிடைத்த செய்தி. உண்மை என்னனு யாருக்கு தெரியும்!?

17 நவம்பர் 2010

என் திறமை கோடம்பாக்கத்திற்கு தெரியவில்லை!

பாலிவுட்டெல்லாம் போயும், பார்த்தும் பருப்பு வேகாததால் கோலிவுட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார் பத்மப்ரியா. வந்தவர் தன்னைத் தெரிந்த இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கும், தனக்கு தெரிந்த இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கும் தூது மேல் தூது விட்டு வாய்ப்பு தேடியும், வாய்ப்புகள் எதுவும் வாயிற் கதவை தட்டாததால் நொந்து நூடுல்ஸ்ஆகிப் போய் விட்டார். தனக்கு தெரிந்த நெருக்கமான மீடியாக்காரர்களிடம், என்னைப் போன்ற திறமையான நடிகைகளின் அருமை கோடம்பாக்கத்திற்கு தெரியவில்லை என புலம்போ புலம்பென புலம்பி வருகிறாராம். தங்களது திறமை தெரிந்து வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்களையும், அடித்தார், துவைத்தார் என அசிங்கப்படுத்தி விடுகிறீர்களாமே மேடம்? அது மட்டும் சரியா?

15 நவம்பர் 2010

ரஜினி படத்தை 60 முறை பார்த்த சிக்கு புக்கு நடிகை!

ஒரு காலத்தில் என்க்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும் என்று சொல்வது நடிகை களின் பேஷனாக இருந்தது. அப்படிப் பேசும் நடிகைகளுக்குத்தான் இங்குள்ள இங்குள்ள இயக்குநர்கள் சிலரும் ஆதரவை வாரி வாரி வழங்கி வந்தனர்.
ஆனால் இன்று நிலைமை தலைகீழ்... நடிக்க வரும் முன்பே தமிழைக் கொஞ்சமாகவேனும் கற்றுக் கொண்டு வரும் அளவுக்கு நடிகைகள் மாறியிருக்கிறார்கள் (இதிலும் விதிவிலக்குகள் உண்டு!).
அந்த மாதிரி நடிகைகளில் ஒருவர் ப்ரீத்திகா. பாலிவுட் நடிகை அம்ரிதா ராவின் தங்கை. பூர்வீகம் தமிழ்நாடுதான் என்றாலும் பிறந்து, வளர்ந்தது மும்பையில். ஆனால் தமிழ் அட்சர சுத்தமாகப் பேசுகிறார்.
சிக்கு புக்கு படத்தில் ஆர்யா ஜோடியாக அறிமுகமாகும் ப்ரீத்திகா, படத்தில் ஒப்பந்தமான பிறகு, தமிழை தெளிவாகக் கற்றுக் கொண்டுவிட்டாராம்.
பாலிவுட்டிலேயே இன்னிங்ஸை தொடங்கியிருக்கலாமே...? என்றால், 'வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. அப்போதுதான் தமிழில் சிக்குபுக்கு வாய்ப்பு வந்தது. தமிழில் அறிமுகமாவது இந்திக்கு நிகரான பெருமைதான்..." என்கிறார்.
ப்ரீத்திகாவின் பேவரிட் நடிகர் ? வேறு யாராக இருக்க முடியும்... சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.
ரஜினிதான் என் ஆல்டைம் பேவரிட் ஹீரோ... குழந்தையாக இருந்ததிலிருந்து இன்றுவரை நான் பார்க்கும் படங்கள் அவருடையதுதான். இந்தியில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த சால்பாஸ் படத்தை அறுபது தடவை பார்த்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அவருக்கு நான் எந்த அளவு ரசிகை என்று. இப்போது எந்திரன் பார்த்து பிரமித்துப் போனேன். அதிலும், இரும்பிலே ஒரு இதயம் பாடலில், அவரது நடனம்... சான்ஸே இல்லை..." என்றார்.

11 நவம்பர் 2010

ரசிகனுக்கு கன்னத்தில் அறைந்த ஜெனிலியா!

பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்தவர் ஜெனிலியா. முன்னணி நடிகர்களான விஜய்யுடன் சச்சின், ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் உத்தமபுத்திரன் படங்களிலும் நடித்துள்ளார். விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் விஜயவாடாவில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஜெனிலியாவை அழைத்து இருந்தனர். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டார்கள்.
ஜெனிலியா வந்ததும் கூட்டம் அவரை மொய்த்துக்கொண்டது. விழா நடத்தியவர்களால் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் மத்தியில் சிக்கிக் கொண்டார் ஜெனிலியா.
அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர் ஜெனிலியாவின் உடம்பை தொட்டு சில்மிஷம் செய்தார். இதில் பொறுமையிழந்த ஜெனிலியா , ரசிகர் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற ரசிகர்களும் விலகிக் கொண்டனர்.
ஆனால் பின்னர் இதனை மறுத்தார் ஜெனிலியா. 'ரசிகர் கூட்டத்தில் நான் மாட்டிக் கொண்டதும், குறிப்பிட்ட ஒரு ரசிகர் தன்னை நெருக்கியதும் உண்மையே... ஆனால் அவரை தள்ளிவிட்டதோடு சரி. அடிக்கவில்லை,' என்று கூறியுள்ளார் ஜெனிலியா.

09 நவம்பர் 2010

முற்றும் துறந்த வித்யா பாலன்!

எப்எச்எம் என்ற இதழுக்காக பிளவுஸைத் துறந்து முழு முதுகையும் காட்டியபடி அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார் நடிகை வித்யா பாலன்.
முதுகு தெரிய வித்யா பாலன் கவர்ச்சி போஸ் கொடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் கூட கொடுத்துள்ளார். ஆனால் இப்போதுதான் முதல் முறையாக பிளவுஸையும் துறந்து முழு முதுகும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார் அவர்.
எப்எச்எம் இதழின் அட்டைப் படத்திற்காகத்தான் இந்த கவர்ச்சிகரமான போஸ். வெறும் சேலை ஒன்றை முன்பக்கமாக சுற்றிக் கொண்டு, பிளவுஸ் இல்லாமல், முழு முதுகும் தெரியும் படி வித்யா பாலன் கொடுத்துள்ள இந்த போஸ் சூட்டைக் கிளப்பியுள்ளது.
எப்எச்எம் இதழின் 3வது ஆண்டையொட்டி இந்த ஸ்பெஷல் தரிசனம் கொடுத்துள்ளார் வித்யா. இந்த மாதம் இந்த கவர்ச்சி இதழ் விற்பனைக்கு வருகிறது.
விரைவில் மறைந்த கவர்ச்சிக் கன்னி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ளார் வித்யா பாலன். இப்படத்தில் வரலாறு காணாத அளவுக்கு கவர்ச்சியைக் கொடுக்க அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்கான ஒத்திகைதான் இந்த முதுகு போஸா...

05 நவம்பர் 2010

கடும் வெயிலில் சுருண்டு விழுந்த வசுந்தரா!

வட்டாரம், ஜெயம் கொண்டான், பேராண்மை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அதிசயா என்ற வசுந்தரா. தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், மும்பையில் செட்டிலானவர். நடிப்பதற்காக தமிழகத்துக்கு வந்து போகும் இவர் சில தெலுங்கு , கன்னடப் படங்களிலும் தலை காட்டியுள்ளார்.
இப்போது `தென்மேற்கு பருவக் காற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தேனி அருகே ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் நடந்து வருகிறது.
கடும் வெயிலில் பொட்டல் வெளியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது கதாநாயகன் விஜய் சேதுபதி, சைக்கிளில் செல்லும் கதாநாயகி வசுந்தராவை துரத்தும் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தது.
சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த வசுந்தரா திடீரென்று தலைகுபுற கீழே விழுந்ததோடு வயிற்றை பிடித்துக் கொண்டு கதறி அழவே இயக்குனர் உள்பட சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் அதிர்ந்துவிட்டனராம்.
உடனடியாக ஒரு டாக்டர் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடும் வெயில் காரணமாக, அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் சிகிச்சைக்குப் பின் தொடர்ந்து நடித்துக் கொடுத்துவிட்டே சென்றாராம் வசுந்தரா.

03 நவம்பர் 2010

உத்தமபுத்திரனை சன் வாங்க மறுத்தது ஏன்?

தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தை சன் பிக்ஸர்ஸ்தான் வெளியிட்டது. சன் வெளியீடாக வராமல் போயிருந்தால் அந்தப் படம் பப்படம் ஆகியிருக்கும்.
இதனாலேயே தனுஷின் அடுத்த படமான குட்டியையும் சன்னிடம் விற்க முயன்றனர். ஆனால் குட்டியை வாங்கவில்லை சன். ஜெமினி நிறுவனமே தனியாக ரிலீஸ் செய்து கையை சுட்டுக் கொண்டது (இன்றைக்கு சன்னுடன் நெருக்கமாக உள்ளது ஜெமினி!)
அடுத்து உத்தமபுத்திரன் படம் வெளியாகிறது. இந்தப் படத்தை சன் பிக்ஸர்தான் வெளியிடும் என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் படத்தில் அவ்வளவாக சன்னுக்கு திருப்தியில்லையாம். மேலும் எந்திரனையே தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் தொடர வைக்கும் பணிகளில் சன் பிக்ஸர்ஸ் தீவிரமாக உள்ளதால், உத்தமபுத்திரனை வாங்க மறுத்துவிட்டார்களாம்.
சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில், இது குறித்த கேள்விகளுக்கு இப்படி சமாளித்தார்கள் தனுஷும் இயக்குநர் ஜவஹரும்.
"படம் பிரமாதமாக வந்துள்ளது... இந்தப் படம் தெலுங்கு , கன்னடத்தில் சூப்பர் ஹிட். அந்த நம்பிக்கையில்தான் யாருக்கும் விற்காமல் சொந்தமாக ரிலீஸ் பண்ணுகிறார்கள்", என்று இருவரும் திரும்பத் திரும்ப கூற, 'இதுக்குப் பேருதான் மீசைல மண் ஒட்டலைங்கறது' என்று நமுட்டு சிரிப்பு சிரித்தனர் நிருபர்கள்!

02 நவம்பர் 2010

'மனுச நாத்தத்தைவிட மீன் வாடை எவ்வளவோ தேவலை!'

நடிகைகள் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் என்பதே புதியாத சமாச்சாரம். டிஸ்கொத்தேக்களில் மது நாற்றத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்கள், மீன் வாடைக்கு பயப்படுவார்கள்.
பெரிய பாம்புகளுடன் தைரியமாக நடிக்கும் இவர்கள்தான், கரப்பான் பூச்சிக்காக ஊரைக் கூட்டுவார்கள்.
குத்து ரம்யாவும் இந்த ரகம்தான். இவருக்கு தமிழர்களை அறவே பிடிக்காது. ஆனால் தமிழ்ப் படங்களின் வாய்ப்பு மட்டும் வேண்டும்.
காவிரி பிரச்சினைக்காக இங்கே கோலிவுட் உண்ணாவிரதமிருந்தபோது, இவர் பெங்களூரில் காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என கொடிபிடித்து உண்ணும் விரதமிருந்ததை மறக்க முடியாது.
ஆனாலும், ரோஷக்கார தமிழ் சினிமாக்காரர்கள் இந்த குத்து ரம்யாவை தேடிப்போய் அழைத்து வந்து தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து குதூகலித்தனர். அப்படி வந்ததுதான் வாரணம் ஆயிரம், சரி விடுங்கள், அது கெளதம் மேனன் படம்.
இப்போது ஜீவாவுடன் சிங்கம் புலி படத்தில் நடிக்கிறார் இந்த குத்து ரம்யா என்கிற திவ்யா ஸ்பாந்தனா.
இப்படத்தில் ஜீவா வக்கீலாகவும், மீன் விற்பவராகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம்.
சமீபத்தில் இப்படத்தின் படப்படிப்பு ராயபுரம் மீன் மார்க்கெட்டில் நடந்தது. ஜீவா, திவ்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே, சொல்லாமல் கொள்ளாமல் திடீரென ரம்யா கேரவனை நோக்கி ஓடினாராம். பதறிப்போன இயக்குநர் அவரிடம் உடம்பு சரியில்லையா? என்று கேட்க திவ்யாவோ, "உடம்பு நல்லாத்தான் இருக்கு, மீன் வாடையைத்தான் பொறுக்க முடியவில்லை," என்று கூறி உள்ளார்.
நாளைக்கொரு வேஷம் போடுகிற மனுஷன் நாத்தத்துக்கு இந்த மீன் நாத்தம் ஆயிரம் மடங்கு பெட்டர்... வாங்க உங்க சீனை வேணும்னா சீக்கிரம் முடிச்சிடறேன்", என்று கூறி அழைத்துப் போனாராம் இயக்குநர்.

01 நவம்பர் 2010

நாயகியின் கன்னம் பழுத்தது!

ஹீரோ கன்னத்தில் அறைவது போன்ற காட்சியில் டைமிங் மிஸ் ஆனதால், நிஜமாகவே கன்னத்தில் பளார் என அறை விழ பொறி கலங்கிப் போய் கன்னம் வீங்கி கதறி அழுதாராம் நடிகை உதயதாரா.
இப்போதெல்லாம் ஷூட்டிங்கின்போது நடக்கும் நிஜக் காட்சிகள் குறித்த நிகழ்வுகள் கோலிவுட்டிலிருந்து நிறைய வருகிறது. கடலில் படப்பிடிப்பு நடத்தியபோது ஹீரோயின் அல்லது ஹீரோ மூழ்கிய செய்திகள் , அடிப்பது போன்ற காட்சியின்போது நிஜமாகவே அடித்து விடுவது, ஹீரோயினைக் கடிப்பது போன்ற காட்சியில் நிஜமாகவே கடித்து விடுவது (நடிகர் விக்னேஷ் நடிகையின் கன்னத்தைக் கடிப்பது போல நடித்தபோது நிஜமாகவே கடித்து விட்டதாக செய்தி வந்தது) என்று நிஜங்கள் குறித்த பல செய்திகள் வருகின்றன.
அந்த வரிசையில் ஹீரோவிடம் அடி வாங்கிய ஹீரோயின் கதை குறித்த செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது. பகவான் என்று ஒரு படம். யுவராஜா என்பவர்தான் நாயகன். உதயதாராதான் நாயகி.
நாயகியை ரவுடிகள் சிலர் கிண்டல் செய்கிறார்கள். அதை நாயகி ஹீரோவிடம் போய் சொல்கிறார். பொங்கி எழும் ஹீரோயினை அழைத்துக் கொண்டு ரவுடிகளிடம் செல்கிறார். ஆனால் அங்கு ரவுடிகளாக ஹீரோயின் சொன்னவர்கள் எல்லாம் சமூக சேவகர்கள் எனத் தெரிகிறது.
நாயகி தன்னை ஏமாற்றி விட்டதை அறியும் ஹீரோ கடும் கோபமடைந்து அவரை பளார் என அறைகிறாராம். இது சீன். இந்த சீனில் யுவராஜும், உதயதாராவும் நடித்தனர். யுவராஜ் ஓங்கி அறைவது போல நடித்தபோது படாரென உதயதாரா திரும்பிக் கொள்ள வேண்டும். ஆனால் டைமிங் மிஸ் ஆகி உதயதாரா திரும்பாமல் இருந்து விட்டார். பிறகென்ன கன்னம் பளுத்துப் போய் வீங்கி விட்டதாம்.
வலி தாங்க முடியாமல் உட்கார்ந்து விட்டாராம் உதயதாரா. கதறி அழுத அவரை நீண்டநேரம் ஆறுதல் படுத்தினார் யுவராஜ். இருந்தாலும் உதயதாரா தேறி வர அரை மணி நேரம் ஆனதாம். பின்னரே அந்தக் காட்சியமைப் படமாக்கி முடித்தார்களாம்.

30 அக்டோபர் 2010

விமானம் தாமதம்,கடுப்பான லட்சுமி ராய்.

தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் பயணமான லட்சுமிராய், தனியார் விமான சேவை குளறுபடியால் தன் லக்கேஜைத் தொலைத்து, விமானத்தையும் தவறவிட்டார்.
இதனால் சொந்த ஊருக்குப் போகாமல் மும்பையில் சகோதரி வீட்டிலேயே தங்கிவிட்டார்.
இதுகுறித்து லட்சுமிராய் கூறுகையில், "தீபாவளி பண்டிகை கொண்டாட எனது சொந்த ஊருக்கு செல்ல ஆசைப்பட்டேன். பெல்காம் செல்ல நேரடி விமானம் கிடையாது. சென்னையில் இருந்து பெங்களூர் சென்று, அங்கிருந்து மும்பை போய் காரில் பெல்காம் செல்லத் திட்டமிட்டேன்.
சென்னையில் தனியார் விமான நிலையத்தில் காலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், 7.30 மணிக்குதான் கிளம்பியது. தாமதம் காரணமாக நான் பெங்களூரில் இருந்து மும்பை செல்லும் விமானத்தை தவறவிட்டு விடுவேனே என்று அதிகாரிகளிடம் முறையிட்டேன். அவர்களோ சென்னை விமானம் பெங்களூர் போய் சேர்ந்த பிறகு தான் மும்பைக்கு செல்லும் விமானம் புறப்படும் என்றனர்.
ஆனால் பெங்களூர் சென்று இறங்கியபோது மும்பை விமானம் முன் கூட்டியே கிளம்பி போய் இருந்தது. நான் அதிர்ந்து போனேன். விமான நிலைய அதிகாரிகள் நாளை இதே நேரத்தில் கிளம்பும் விமானத்தில் உங்களை மும்பை அனுப்பி வைக்கிறோம் என்றனர். பெங்களூரிலிருந்து மும்பை போக ஒரு நாள் பெங்களூரில் காத்திருக்க முடியுமா?
எனக்கு ஆத்திரமாக வந்தது. தயாரிப்பு நிறுவனமொன்றில் சொல்லி மும்பைக்கு வேறு டிக்கெட் எடுத்து பயணமானேன். விமான நிலையத்தில் இறங்கியபோது எனது லக்கேஜ் மாயமாகி இருந்தது. வாழ்க்கையே வெறுத்துப் போனது.
இதனால் என் தீபாவளி ட்ரிப்பையே ரத்து செய்துவிட்டேன். மும்பையில் உள்ள எனது சகோதரி வீட்டில்தான் இந்த ஆண்டு தீபாவளி...", என்றார் கோபத்துடன்.

29 அக்டோபர் 2010

எல்லோரும் பாராட்டுறாங்க!-ரீமா சென்.

ரீமா சென்னுக்கு இன்று பிறந்தநாள். முன்னெப்போதையும் விட சந்தோஷமாக இந்த பிறந்தநாளைக் கொண்டாடுவதாக அவர் தெரிவித்தார்.
அப்படியென்ன விசேஷம் இந்த ஆண்டு மட்டும்?
"காரணம் இருக்கே... இந்த ஆண்டு நான் நடித்த ஆக்ரோஷ் இந்திப் படம் வெளியாகியுள்ளது. இதில் எனக்குத்தான் அதிக முக்கியத்துவம். படம் வெளியானதும் பாலிவுட்டின் பெரிய டைரக்டர்கள் எல்லாம் என்னை கூப்பிட்டுப் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
இதுவரை என்ன போன் நம்பரே தெரியாமலிருந்த டைரக்டர்கள் கூட, தெரிந்தவர்களிடம் நம்பர் வாங்கி என்னை கூப்பிட்டாங்கன்னா பாத்துக்கங்க..." என்கிறார் ரீமா குஷியாக.
அப்போ கோலிவுட் அவ்வளவுதானா... இனி இங்குள்ள ரசிகர்களை மறந்துவிடுவாரா?
"இல்லையில்லை... விரைவில் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கப் போகிறேன்...," என்றார்.
பிறந்த நாள் கொண்டாட்டமெல்லாம் எப்படி?
"என் தங்கை திஷா ஒரு பெரிய பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்கா. இந்த இரவு விருந்துக்கு 50பேரை மட்டும் கூப்பிட்டிருக்கேன்...", என்றார்.

27 அக்டோபர் 2010

விக்ரம் - அனுஷ்கா ஜோடி சேரும் தெய்வ மகன்!

மதராஸபட்டினம் புகழ் விஜய் இயக்க, விக்ரம் - அனுஷ்கா முதல்முறையாக ஜோடி சேரும் தெய்வ மகன் படப்பிடிப்பு துவஙகியது.
அனுஷ்காவின் உயரமும், வாளிப்பான உடலமைப்பும்தான் அவரது ப்ளஸ் என்பதால் தெலுங்கில் வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் தமிழிலோ அவரது உயரமே எதிரியாகிவிட்டது.
உயரம் குறைந்த நாயகர்கள், அரையடி ஸ்டூல் அளவுக்கு ஷூ போட்டுக் கொண்டு அவருடன் நடிக்கவேண்டிய நிலை உள்ளதால், 'அனுஷ்காவா, வேண்டாம்... பக்கத்தில் நின்று பேசக் கூட முடியாது (?!)' என்று ஓரங்கட்டுகிறார்களாம். இப்படி அனுஷ்கா இழந்த வாய்ப்புகள் நான்கைந்து இருக்கும் என்கிறார்கள்.
ஆனால் இயக்குநர் விஜய்க்கு அந்த கஷ்டமில்லை தெய்வமகன் படத்தில். இந்தப் பட நாயகன் விக்ரமுக்கு சரியான ஜோடி எனும் அளவு படுபாந்தமாக அமைந்துள்ளதாம் இருவரின் பொருத்தமும்.
இந்தப் படத்தில் 7 வயது மகளை மீட்கப் போராடும் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் விக்ரம். அவருக்கு உதவும் நேர்மையான வக்கீலாக வருகிறாராம் அனுஷ்கா. 2001-ல் வெளியான 'ஐயாம் ஸாம்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் இது என்கிறார்கள்.

25 அக்டோபர் 2010

நீயா?நானா?பிரியாமணி,விமலாராமன் மோதல்!

தெலுங்குப் படம் ஒன்றின் க்ளைமாக்ஸ் காட்சியில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்பதில் ப்ரியாமணிக்கும் விமலா ராமனுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
விஜய் என்ற புதிய இயக்குநர் இயக்கும் தெலுங்குப் படம் ஒன்றில் ப்ரியாமணியும் விமலா ராமனும் நடிக்கிறார்கள்.
சுமந்த் நடிக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் ஆரம்பத்தில் ப்ரியாமணியை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அதுவரை குழப்பமின்றி போய்க்கொண்டிருந்த ஷூட்டிங்கில், விமலா ராமன் வந்ததும் பிரச்சினை செய்ய ஆரம்பித்தாராம் ப்ரியாமணி. .
எனக்கு என்ன ரோல், விமலா ராமனுக்கு என்ன ரோல்? என்று கேட்க ஆரம்பித்துவிட்டாராம்.
க்ளைமாக்ஸில் தன்னை விட விமலா ராமனுக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் என்பதால் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டாராம் ப்ரியாமணி.
"நான் ஒரு தேசிய விருது பெற்ற நடிகை ... நானும் அவளும் ஒண்ணா... நான் ஷூட்டிங்குக்கு வரலேன்னா என்ன பண்ணுவீங்க?", என்று ப்ரியாமணி எகிற, "உங்களுக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தைத்தான் ராவணன்ல பார்த்தோமே... அதுக்கு இது ஒண்ணும் குறைஞ்சிடலை... போங்க", என்று பதிலுக்கு எகிறியிருக்கிறார் இயக்குநர்.
விஷயம் கேள்விப்பட்ட விமலா ராமன், "பருத்தி வீரன்ல யார் நடிச்சிருந்தாலும் இந்த தேசிய விருது கிடைச்சிருக்கும். ஏன்னா அது எந்த நடிகையோட, நடிகரோட படமும் இல்லை. அமீர் சார் படம்...!" என தன் பங்குக்கு குத்த ஆரம்பித்துள்ளார்.

24 அக்டோபர் 2010

மன்மதன் அம்பு பிரமாண்ட வெளியீடு!

மன்மதன் தன் அம்பை நாணேற்றித் தயாராக வைத்திருக்கிறாராம். எந்த நிமிடத்திலும் எய்யப்படலாம் என்று சொல்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் முத‌ல் முறையாக கமல்-த்ரிஷா இருவரும் ஜோடி சேர்ந்திருக்கின்றனர்.
எந்திரனைப் போல் இப்படத்தையும் பெரிய அளவில் வெளியிடத் திட்டம் வைத்திருக்கிறார்களாம். அதற்காக இந்தி, தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வருகிறது இப்படம்.
எந்திரனைவிட ஒரு தியேட்டரிலாவது அதிகமாக ரீலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் செயலில் இறங்கியிருக்கிறதாம் தயாரிப்பாளர் தரப்பு. அதற்கான விளம்பரத்துக்காகவே பல கோடிகளைச் செலவிட ஆயத்தமாகி வருகிறார்களாம்.

21 அக்டோபர் 2010

மீனாட்சியின் கவர்ச்சி உடையும்; பார்த்திபனின் ஏடாகூட கமெண்ட்டும்!

பொது விழாக்களுக்கு கவர்ச்சி உடையணிந்து வருவதையே எழுதப்படாத பாலிஸியாக வைத்துக் கொண்டு செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர் மீனாட்சி.

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை தாவணியில் தோன்றி அசத்திய மீனாட்சியா இது? என்று முகம் சுழித்து கேட்கும் அளவுக்கு திரையில் தோன்றும் மீனாட்சி, அதைவிட மோசமான ஆடைகளையே பொது விழாக்களுக்கும் அணிந்து வருவார். அப்படி வரும் நடிகைகள் கண்ணை திறக்க முடியாத அளவுக்கு பிளாஷ் மழை பொழியும்.
அப்படியொரு பிளாஷ் மழை நடிகை மீனாட்சியின் மீது பொழிந்தது. அவர் நாயகியாக நடித்திருக்கும் மந்திர புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அத்த‌னை ‌பேரையுமே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சிக்கென்ற ஆடையுடன் வந்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன் தனக்கே உரிய நையாண்டியுடன் மீனாட்சியைப் பற்றி ஏ‌டாகூடமான கமெண்ட் அடித்தார். பார்த்திபன் பேசுகையில், போட்டோகிராபர்களுக்கு மீனாட்சியின் கால் ஷீட் கிடைச்சிருச்சு, என்ற கமெண்ட் அடித்தபோது ஒட்டுமொத்த கூட்டமும் சிரிக்க, அவர்கள் சிரிப்பது தன்னைப் பார்த்துதான் என்பதுகூட புரியாமல் கன்னத்தில் கை வைத்திருந்தார் மீனாட்சி.
மீனாட்‌சியின் உடை பற்றி படத்தின் டைரக்டரும் ஹீரோவுமான கரு.பழனிப்பன் பேசுகையில், மீனாட்சி அணிந்து வந்திருக்கும் உடை எல்லோரையும் கவர்ந்து இழுக்கிறது. இந்த பங்ஷனுக்‌கு எப்படி வரணும்னு நான் மீனாட்சிக்கு போன் பண்ணி சொல்ல சொன்னேன். அசிஸ்டென்ட் டைரக்டர்கள் போன் பண்ணி நல்லா டிரஸ் பண்ணிட்டு வாங்கன்னு சொல்லியிருந்தாங்க. அப்புறமும் இப்படி… என்ன செய்ய?, என்றார். அதோடு படத்தில் இடம்பெறும் ஒரு வசனத்தை குறிப்பிட்டு பேசினார். “பையன் ஒழுங்கா படிக்காம மக்கா இருந்தான்னா போவட்டும். அவனை சினிமா ஹீரோவாக்கிட்டு போறேன்” என்பதுதான் அந்த டயலாக்காம்.

20 அக்டோபர் 2010

கவர்ச்சியுடையார் இகழ்ச்சியடையார்! நாயகிகளின் புது பாலிஸி!!

தமிழ் சினிமா நாயகிகளில் பலரும் சமீப காலமாக கவர்ச்சியை நம்பித்தான் காலத்தை ஓட்டுகிறார்கள் என்பதில் இருவேறு மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. முன்பெல்லாம் சினிமாக்களில் கவர்ச்சிக்கு என்று தனி நாயகி இருப்பார்.
அவர் காமெடி நடிகருக்கு ஜோடியாகவோ, விலைமாது கேரக்டரிலேயோ அல்லது ஏதாவது தள்ளுவண்டி, இட்லிக்கடைக்காரியாகவோ நடிப்பார். அதற்கு பிறகு வந்த சினிமாக்களில் ஒரு பாடல் குத்துப்பாட்டாகவும், அந்த குத்துப்பாட்டில் கவர்ச்சி நடிகையின் குத்தாட்டமும் இடம்பெற்றன.
ஆனால் சமீப காலமாக கவர்ச்சிக்கு தனி நடிகை தேவையில்லை என்று சொல்கிற அளவுக்கு படத்தின் நாயகிகளே கவர்ச்சி உடையில் கலக்க ஆரம்பித்துள்ளனர்.
சினிமாவில் நுழைந்தபோது பாவாடை தாவணியணிந்து பக்கத்து வீட்டுப் பெண் போல இருந்த நயன்தாரா பில்லா படத்தில் நீச்சல் உடையணிந்து ரசிகர்களை கிறங்கடித்தார். அதேபோல புதுமுக நடிகைகள் பலரும் எதற்கும் ரெடி என்கிற பாலிஸியுடன்தான் சினிமாவில் நுழைகிறார்கள். இதனால் கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.
எத்தனை புதுமுகங்கள் வந்தாலும், எவ்வளவு கவர்ச்சி காட்டினாலும் கவர்ச்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற பாலிஸியுடன் இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரீமா சென். பட வாய்ப்புகளுடன் தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் பல கண்டிஷன்களை போடும் ரீமா கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு வந்த வாய்ப்புகளையெல்லாம் பல காரணங்களுக்காக தட்டிக்கழித்த அவர், ஆக்ரோஷ் என்ற இந்திப்படத்தில் நடித்தார்.
அந்த படம் எதிர்பார்த்ததை விட பெரிய ஹிட் ஆகி விட்டதால் இனி மும்பையை விட்டு வெளியேறுவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.

19 அக்டோபர் 2010

காதலியை குரூப் செக்ஸுக்கு அழைத்த இளவரசர் ஹரி!

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளைய மகன் இளவரசர் ஹாரி. 26 வயதான இவர் ராணுவ ஹெலிகாப்டர் விமானியாக இருக்கிறார். இவர் ஜிம்பாப்வேயை சேர்ந்த 25 வயது பெண் செல்சி டேவியை காதலித்து வந்தார். இவர்களுக்கு இடையே 7 ஆண்டு காலமாக காதல் இருந்தது. இந்த காதல் இப்போது காணாமல் போய்விட்டது. இருவரும் பிரிந்து விட்டார்கள்.
செல்சி இப்போது வீட்டுமனைகளை உருவாக்கும் டான் பிலிப்சன்னை காதலிக்க தொடங்கி இருக்கிறார். இளவரசர் ஹாரி இப்போது லண்டன் இரவு விடுதிகளில் பல பெண்களுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது. இவர்கள் பிரிந்ததற்கு காரணம் என்ன என்பது இப்போது தெரியவந்து உள்ளது.
மற்ற பெண்களுடன் சேர்ந்து (குரூப் செக்ஸ்) தன்னுடன் சந்தோஷமாக இருக்கும்படி அவர் காதலியை கேட்டுக்கொண்டார். இதை கேட்டு கொதித்து போன செல்சி, ஹாரியை ஒரேயடியாக உதறிவிட்டு போய்விட்டார்.

17 அக்டோபர் 2010

நான் அதிக சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள் – தமன்னா!

நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள். நான் ஒருபோதும் அவ்வளவு சம்பளம் கேட்கவில்லை என்கிறார் தமன்னா.
தமிழ் சினிமாவின் ஹாட் ஸ்டாராக திகழ்பவர் தமன்னா. கை நிறையப் படங்களுடன் தமிழ், தெலுங்கில் பிசியாக ஓடிக் கொண்டிருக்கும் முன்னணிக் குதிரை. இந்த நிலையில் தமன்னா 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இதை மறுக்கிறார் தமன்னா. இதுகுறித்து அவர் கூறுகையில்,
தமிழில் கார்த்தியுடன் சிறுத்தை, தெலுங்கில் அல்லு அர்ஜுன், நாக சைதன்யா படங்கள் என 3படங்களில் நடித்து வருகிறேன்.
அடுத்து தமிழில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர், ராம் ஆகியோருடன் 2 படங்கள் உள்ளன. இவற்றின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை கால்ஷீட் இல்லை. ஆனால் சிலர் என்னிடம் வந்து கால்ஷீட் கேட்டனர். எனது நிலையைச் சொல்லி மறுத்து விட்டேன். இதனால் கோபமாகி நான் 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.
கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு நான் வந்துள்ளேன். அதைப் புரிந்து கொள்ளாமல் இப்படி வதந்தி பரப்புவது நியாயமா என்று விசனப்படுகிறார் தமன்னா.

13 அக்டோபர் 2010

5 படங்கள் ஒரு ஹீரோ!

ஜீவா தற்சமயம் 4 படங்களில் நடித்து வருகிறார். இதில் சாய்ரமணி இயக்கும் சிங்கம் புலியில் ஜீவாவுக்கு இரட்டை வேடம். வழக்கறிஞராகவும் மீன் வியாபாரியாகவும் அசத்தியுள்ளார். கிட்டத்தட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.
கே.வி ஆனந்தின் கோ, ஆர். கண்ணன் இயக்கத்தில் வந்தான் வென்றான், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ரவுத்திரம் ஆகியவை மற்ற மூன்று படங்கள்.
ஷங்கரின் 3 இடியட்ஸ் படத்தில் இவரது கேரக்டர் நிச்சயமாகும் பட்சத்தில் இந்த லிஸ்ட் 5 படங்களாக மாறும். ஜமாய்ங்க ஜீவா.

11 அக்டோபர் 2010

நயன்தாரா மேனேஜர் – பிஆர்ஓ நீக்கம் – பல லட்சம் மோசடி?

தனக்கு மேனேஜராக இருந்த அஜீத் மற்றும் பிஆர்ஓ ஜான்சன் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளார் நயன்தாரா.
இதன் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் திரையுலகை அதிர வைத்துள்ளது.
பிரபலமான அந்த ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ 1 கோடி சம்பளம் பேசியிருக்கிறார்கள். ஆனால் நயன்தாராவிடம் அந்தத் தொகையை காட்டாமல் ரூ 60 லட்சம்தான் சம்பளம் பேசப்பட்டதாக மேனேஜர் அஜீத் மற்றும் பிஆர்ஓ சொன்னதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் சந்தேகம் கொண்ட நயன்தாரா, நேரடியாக சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை உரிமையாளரிடமே தொடர்பு கொண்டு விசாரிக்க, அவரும் முதலில் மழுப்பி, பின்னர் உண்மையைக் கூறியுள்ளார்.
கோபத்தை அடக்கிக் கொண்ட நயன்தாரா, மீண்டும் மேனேஜரையும், பிஆர்ஓவையும் அழைத்து விசாரிக்க அவர்கள் தொடர்ந்து அந்த ரூ 60 லட்சம் கதையையே தொடர்ந்தார்களாம்.
கஷ்டப்பட்டு நடிப்பது நான், சம்பளம் பேசுவதாகக் கூறி எனக்கே தெரியாமல் பணத்தை அபகரிப்பதா?”, என்று கோபம் காட்டிய நயன்தாரா, உடனடியாக இருவரையும் நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரை நயன்தாரா தொடர்பான அனைத்துப் படங்களுக்கும் இந்த இருவர்தான் சம்பளம் பேசினார்களாம். அதிலெல்லாம் எந்த அளவு பணம் கணக்கில் வராமல் போனதோ என்று அங்கலாய்த்தாராம் நயன். ஆனால் சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது (திருடனுக்கு தேள் கொட்டிய கதை!) என்ற சூழல் காரணமாக பல்லைக் கடித்துக்கொண்டு அமைதி காக்கிறாராம் நயன்தாரா.
ஆனால் இதுகுறித்து அஜீத்திடம் கேட்டபோது, நானாகவே நயன்தாராவிடமிருந்து விலகி வந்துவிட்டேன் என்றும், பணவிவகாரம் பற்றிய எதுவும் உண்மையில்லை என்றும், கூறினார்.
சம்பந்தப்பட்ட பிஆர்ஓவைத் தொடர்பு கொண்டால், அவர் போனையே எடுக்கவில்லை!