நடிகைகள் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் என்பதே புதியாத சமாச்சாரம். டிஸ்கொத்தேக்களில் மது நாற்றத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்கள், மீன் வாடைக்கு பயப்படுவார்கள்.
பெரிய பாம்புகளுடன் தைரியமாக நடிக்கும் இவர்கள்தான், கரப்பான் பூச்சிக்காக ஊரைக் கூட்டுவார்கள்.
குத்து ரம்யாவும் இந்த ரகம்தான். இவருக்கு தமிழர்களை அறவே பிடிக்காது. ஆனால் தமிழ்ப் படங்களின் வாய்ப்பு மட்டும் வேண்டும்.
காவிரி பிரச்சினைக்காக இங்கே கோலிவுட் உண்ணாவிரதமிருந்தபோது, இவர் பெங்களூரில் காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என கொடிபிடித்து உண்ணும் விரதமிருந்ததை மறக்க முடியாது.
ஆனாலும், ரோஷக்கார தமிழ் சினிமாக்காரர்கள் இந்த குத்து ரம்யாவை தேடிப்போய் அழைத்து வந்து தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து குதூகலித்தனர். அப்படி வந்ததுதான் வாரணம் ஆயிரம், சரி விடுங்கள், அது கெளதம் மேனன் படம்.
இப்போது ஜீவாவுடன் சிங்கம் புலி படத்தில் நடிக்கிறார் இந்த குத்து ரம்யா என்கிற திவ்யா ஸ்பாந்தனா.
இப்படத்தில் ஜீவா வக்கீலாகவும், மீன் விற்பவராகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம்.
சமீபத்தில் இப்படத்தின் படப்படிப்பு ராயபுரம் மீன் மார்க்கெட்டில் நடந்தது. ஜீவா, திவ்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே, சொல்லாமல் கொள்ளாமல் திடீரென ரம்யா கேரவனை நோக்கி ஓடினாராம். பதறிப்போன இயக்குநர் அவரிடம் உடம்பு சரியில்லையா? என்று கேட்க திவ்யாவோ, "உடம்பு நல்லாத்தான் இருக்கு, மீன் வாடையைத்தான் பொறுக்க முடியவில்லை," என்று கூறி உள்ளார்.
நாளைக்கொரு வேஷம் போடுகிற மனுஷன் நாத்தத்துக்கு இந்த மீன் நாத்தம் ஆயிரம் மடங்கு பெட்டர்... வாங்க உங்க சீனை வேணும்னா சீக்கிரம் முடிச்சிடறேன்", என்று கூறி அழைத்துப் போனாராம் இயக்குநர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக