பக்கங்கள்

28 நவம்பர் 2010

தமிழுக்கு வரும் மதுரிமா.

தெலுங்கு சினிமாவின் கவர்ச்சிகரமான நாயகிகளில் முக்கியமானவரான மதுரிமா இப்போது தமிழுக்கும் வருகிறார்.
மலையாளத்து ஷாஜி கைலாஷ் இயக்க, ஆர்.கே. நாயகனாக நடிக்கும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தின் நாயகியாக நடிக்கிறார் மதுரிமா.
இந்தியில் பெரும் வெற்றிப் படமாக, பரபரப்பாகப் பேசப்பட்ட 'அப்தக்சப்பன்' படத்தின் மூலக் கதையைத் தழுவி உருவாக்கப்படும் படம் இந்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு. இப்படத்தின் டைட்டிலை கமல்ஹாசனிடமிருந்து பிரத்யேக அனுமதி பெற்று வாங்கியுள்ளனராம்.
இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஆர்.கே. அவருக்கு ஜோடி போடுகிறார் மதுரிமா. தெலுங்கைப் போல தமிழிலும் கவர்ச்சித் தென்றலை அவர் தவழ விட வருவதால் இங்கு ஏற்கனவே உள்ள ஹீரோயின்கள் வட்டாரத்தில் சற்றே நடுக்கம் ஏற்பட்டுள்ளதாம்.
இப்படத்தின் வெற்றியைப் பொறுத்து அடுத்தடுத்து தமிழிலும் தடபுடலாக நடிக்க தயாராகி வருகிறாராம் மதுரிமா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக