ஒரு காலத்தில் என்க்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும் என்று சொல்வது நடிகை களின் பேஷனாக இருந்தது. அப்படிப் பேசும் நடிகைகளுக்குத்தான் இங்குள்ள இங்குள்ள இயக்குநர்கள் சிலரும் ஆதரவை வாரி வாரி வழங்கி வந்தனர்.
ஆனால் இன்று நிலைமை தலைகீழ்... நடிக்க வரும் முன்பே தமிழைக் கொஞ்சமாகவேனும் கற்றுக் கொண்டு வரும் அளவுக்கு நடிகைகள் மாறியிருக்கிறார்கள் (இதிலும் விதிவிலக்குகள் உண்டு!).
அந்த மாதிரி நடிகைகளில் ஒருவர் ப்ரீத்திகா. பாலிவுட் நடிகை அம்ரிதா ராவின் தங்கை. பூர்வீகம் தமிழ்நாடுதான் என்றாலும் பிறந்து, வளர்ந்தது மும்பையில். ஆனால் தமிழ் அட்சர சுத்தமாகப் பேசுகிறார்.
சிக்கு புக்கு படத்தில் ஆர்யா ஜோடியாக அறிமுகமாகும் ப்ரீத்திகா, படத்தில் ஒப்பந்தமான பிறகு, தமிழை தெளிவாகக் கற்றுக் கொண்டுவிட்டாராம்.
பாலிவுட்டிலேயே இன்னிங்ஸை தொடங்கியிருக்கலாமே...? என்றால், 'வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. அப்போதுதான் தமிழில் சிக்குபுக்கு வாய்ப்பு வந்தது. தமிழில் அறிமுகமாவது இந்திக்கு நிகரான பெருமைதான்..." என்கிறார்.
ப்ரீத்திகாவின் பேவரிட் நடிகர் ? வேறு யாராக இருக்க முடியும்... சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.
ரஜினிதான் என் ஆல்டைம் பேவரிட் ஹீரோ... குழந்தையாக இருந்ததிலிருந்து இன்றுவரை நான் பார்க்கும் படங்கள் அவருடையதுதான். இந்தியில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த சால்பாஸ் படத்தை அறுபது தடவை பார்த்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அவருக்கு நான் எந்த அளவு ரசிகை என்று. இப்போது எந்திரன் பார்த்து பிரமித்துப் போனேன். அதிலும், இரும்பிலே ஒரு இதயம் பாடலில், அவரது நடனம்... சான்ஸே இல்லை..." என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக