பக்கங்கள்

03 நவம்பர் 2010

உத்தமபுத்திரனை சன் வாங்க மறுத்தது ஏன்?

தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தை சன் பிக்ஸர்ஸ்தான் வெளியிட்டது. சன் வெளியீடாக வராமல் போயிருந்தால் அந்தப் படம் பப்படம் ஆகியிருக்கும்.
இதனாலேயே தனுஷின் அடுத்த படமான குட்டியையும் சன்னிடம் விற்க முயன்றனர். ஆனால் குட்டியை வாங்கவில்லை சன். ஜெமினி நிறுவனமே தனியாக ரிலீஸ் செய்து கையை சுட்டுக் கொண்டது (இன்றைக்கு சன்னுடன் நெருக்கமாக உள்ளது ஜெமினி!)
அடுத்து உத்தமபுத்திரன் படம் வெளியாகிறது. இந்தப் படத்தை சன் பிக்ஸர்தான் வெளியிடும் என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் படத்தில் அவ்வளவாக சன்னுக்கு திருப்தியில்லையாம். மேலும் எந்திரனையே தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் தொடர வைக்கும் பணிகளில் சன் பிக்ஸர்ஸ் தீவிரமாக உள்ளதால், உத்தமபுத்திரனை வாங்க மறுத்துவிட்டார்களாம்.
சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில், இது குறித்த கேள்விகளுக்கு இப்படி சமாளித்தார்கள் தனுஷும் இயக்குநர் ஜவஹரும்.
"படம் பிரமாதமாக வந்துள்ளது... இந்தப் படம் தெலுங்கு , கன்னடத்தில் சூப்பர் ஹிட். அந்த நம்பிக்கையில்தான் யாருக்கும் விற்காமல் சொந்தமாக ரிலீஸ் பண்ணுகிறார்கள்", என்று இருவரும் திரும்பத் திரும்ப கூற, 'இதுக்குப் பேருதான் மீசைல மண் ஒட்டலைங்கறது' என்று நமுட்டு சிரிப்பு சிரித்தனர் நிருபர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக