பக்கங்கள்

05 நவம்பர் 2010

கடும் வெயிலில் சுருண்டு விழுந்த வசுந்தரா!

வட்டாரம், ஜெயம் கொண்டான், பேராண்மை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அதிசயா என்ற வசுந்தரா. தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், மும்பையில் செட்டிலானவர். நடிப்பதற்காக தமிழகத்துக்கு வந்து போகும் இவர் சில தெலுங்கு , கன்னடப் படங்களிலும் தலை காட்டியுள்ளார்.
இப்போது `தென்மேற்கு பருவக் காற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தேனி அருகே ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் நடந்து வருகிறது.
கடும் வெயிலில் பொட்டல் வெளியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது கதாநாயகன் விஜய் சேதுபதி, சைக்கிளில் செல்லும் கதாநாயகி வசுந்தராவை துரத்தும் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தது.
சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த வசுந்தரா திடீரென்று தலைகுபுற கீழே விழுந்ததோடு வயிற்றை பிடித்துக் கொண்டு கதறி அழவே இயக்குனர் உள்பட சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் அதிர்ந்துவிட்டனராம்.
உடனடியாக ஒரு டாக்டர் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடும் வெயில் காரணமாக, அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் சிகிச்சைக்குப் பின் தொடர்ந்து நடித்துக் கொடுத்துவிட்டே சென்றாராம் வசுந்தரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக