பக்கங்கள்

29 செப்டம்பர் 2011

நித்யாவிற்கும் தடை!

நடிகை நித்யா மேனனை நேரில் சந்திக்க வந்த பிரபல தயாரிப்பாளரை, நித்யா மேனன் சந்திக்க மறுத்ததால், அவருக்கு நடிக்க தடைவிதித்துள்ளது மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நித்யா மேனன். தமிழில் 180, வெப்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மம்முட்டிக்கு மிக நெருங்கிய நண்பரும், கேரளாவின் முன்னணி தயாரிப்பாளருமான ஆண்டோ ஜோசப், மலையாள படமொன்றில் நடித்துக் கொண்டிருந்த நித்யா மேனனை, புதுப்படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்வது தொடர்பாக சந்தித்து பேச விரும்பினார். ஆனால் நித்யாவோ, ஆண்டோ ஜோசப்பை சந்திக்க மறுத்துவிட்டார். என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. எதுவாக இருந்தாலும் எனது மேனஜரிடம் பேசுங்கள் என்று கூறியுள்ளார். நித்யா‌வின் இந்த பதிலை கேட்ட ஆண்டோ ஜோசப்புக்கு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது.
உடனே இதுகுறித்து மலையாள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். மூத்த தயாரிப்பாளரை அவமதித்ததற்காக நித்யா மேனனுக்கு தயாரிப்பாளர் சங்கம் நடிக்க தடை விதித்துள்ளது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நித்யாவுக்கு நடிக்க தடை விதிக்குமாறு இருமாநில தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. இந்த தடை உத்தரவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், பிறப்பித்துள்ளார்.

25 செப்டம்பர் 2011

அப்பாக்களுக்காக ஏங்கிய மகள்கள்!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் 3 படப்பிடிப்பிற்கு தங்களது அப்பாக்கள் ரஜினி மற்றும் கமல் வரவலில்லையே என்று அவர்கள் வருத்தம் அடைந்துள்ளனராம்.
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இதில் கதாநாயகனாக அவரது கணவர் தனுஷ் நடிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக தனது தோழி ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்துள்ளார்.
ஐஸ்வர்யாவும், ஸ்ருதியும் செட்டில் இருப்பதால் அவர்களது தந்தைகள் அதாவது ரஜினியும், கமலும் படப்பிடிப்புக்கு வருவார்கள் அவர்களை ஒன்றாகப் பார்த்துவிடலாம் என்று படக்குழுவினர் ஆர்வமாக உள்ளனர்.
அதேபோல தங்கள் அப்பாக்கள் நிச்சயம் படப்பிடிப்புக்கு வந்து தாங்கள் எப்படி பணிபுரிகிறோம் என்பதைப் பார்ப்பார்கள் என்று ஐஸ்வர்யாவும், ஸ்ருதியும் கூட மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் உள்ளனர்.
படப்பிடிப்பு துவங்கி இத்தனை நாட்களாகியும் அப்பாக்கள் வராததால் மகள்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
அட, இதுக்கெல்லாமா வருத்தப்படுவாங்க...!

22 செப்டம்பர் 2011

அவங்களுக்கு பிடித்த உடைதான்!

படத்தில் நடிக்கையில் இயக்குனர் சொல்லும் உடைகளைத் தான் அணிய வேண்டியிருக்கிறது. அதனால் தான் நினைத்தபடி உடைகள் அணிய முடியவில்லை என்று நடிகை தமன்னா கவலை அடைந்துள்ளார்.
இது குறித்து தமன்னா கூறியதாவது,
நான் சிறுபிள்ளையாக இருக்கும் போதே நிறைய படங்கள் பார்த்துள்ளேன். ஒவ்வொரு படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்ப்பேன். கல்லூரிக் கதை என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். ஏனென்றால் நான் கல்லூரிக்கு சென்று படித்ததில்லை. நான் நடிக்கும் படத்தில் குறைந்தது ஒரு காட்சியாவது கல்லூரி பின்னணியில் இருக்குமா என்று தான் எதிர்பார்ப்பேன்.
உடைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். கதாநாயகியாக நடிக்கையில் நான் நினைத்த உடைகளை அணிந்து நடிக்க ஆசைப்படுவேன். ஆனால் காட்சி, லைட, கதாபாத்திரத்திற்கு ஏற்ப இயக்குனர் சொல்லும் உடைகளைத் தான் அணிய வேண்டும். நினைத்தபடி உடை அணிய முடியாதது ஏதோ தடைவிதித்தது போன்று இருக்கும். அதனால் வருத்தப்படுவேன்.
ஆனால் ஷூட்டிங் இல்லையென்றால் நான் இஷ்டப்பட்ட உடைகளைத் தான் அணிவேன். எனக்கு லைட் கலர் உடைகள் தான் ரொம்பப் பிடிக்கும் என்றார்.

18 செப்டம்பர் 2011

சோனாவிற்கு மாரடைப்பு!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனும், தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகருமான எஸ்.பி. சரண் மீது பாலியல் குற்றச்சாட்டுக் கூறியுள்ள கவர்ச்சி நடிகை சோனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.பி.சரண் தன்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார், மானபங்கம் செய்தார் என்பது உள்ளிட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களை சோனா கூறியுள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பதட்டமாக இருந்ததால் சோனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாம். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் லேசான மாரடைப்பு ஏற்பட்டதை கண்டுபிடித்தனராம். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.

14 செப்டம்பர் 2011

நிகிதாவின் தடையை உடை!

தர்ஷன் குடும்பப் பிரச்சினையைக் காரணம் காட்டி கன்னட சினிமாவில் 3 ஆண்டுகள் நடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிகிதாவுக்கு கன்னட, தெலுங்கு சினிமா உலகில் ஆதரவு பெருகுகிறது.
நடிகர் தர்ஷனுடன் நிகிதா தகாத உறவு வைத்திருப்பதாக அவரது மனைவி விஜயலட்சுமி குற்றம் சாட்டினார்.
இதனால் தர்ஷன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நிகிதா மீத தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் தஷ்ஷனுடன் தவறான தொடர்பு இல்லை என்று நிகிதா மறுத்துள்ளார்.
தடை காரணமாக நிகிதாவுக்கு படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர் கைவசம் தற்போது 3 கன்னட படங்கள் உள்ளன.
பெருகும் ஆதரவு:
தயாரிப்பாளர்களின் இந்தத் தடையை கன்னடப் பட உலக இயக்குநர்கள், பிலிம்சேம்பர் நிர்வாகிகள் மற்றும் நடிகர்கள் எதிர்த்துள்ளனர்.
நிகிதாவுக்கு விதிக்கப்பட்ட தடை அநீதியானது, தேவையற்றது, சட்டவிரோதமானது என கூறியுள்ளனர்.
கன்னட திரையுலகின் மற்ற பல சங்கங்களும் இந்த முடிவைக் கண்டித்துள்ளன.
நடிகை தாரா:
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை தாரா கூறும் போது, "நிகிதா மீது கடும் நடவடிக்கை எடுத்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இப்பிரச்சினை குறித்து தீவிர ஆலோசனை நடத்தாமல் தடை விதித்துள்ளனர். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என்றார்.
கன்னட இயக்குனர்கள் சங்கமும் நிகிதாவுக்கு தடை விதித்ததை எதிர்த்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ரமேஷ் கூறுகையில், "நிகிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை அநீதியானது, தேவையற்றது. தடை விதிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படவில்லை. யாரோ சிலரின் தனிப்பட்ட விரோதம் இதில் தெரிகிறது," என்றார்.
நிகிதா நடிக்கும் 'காட்டான் பெட்' படத்தை இயக்கி வரும் ஓம்பிரகாஷ்ராவ் கூறும் போது, "தயாரிப்பாளர் சங்கத்தின் தடை உத்தரவுக்கு நான் அடிபணிய மாட்டேன். நிகிதாவை வைத்து படத்தை இயக்குவேன்," என்றார்.
ஜெயமாலா எதிர்ப்பு:
தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர்கள் கிரிஷ்கேசர வல்லி, சுரேஷ், நடிகை ஜெயமாலா, கன்னட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் சந்தேஷ் நாகராஜ் ஆகியோரும் நிகிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைக்காக ஒரு பிரபல நடிகையின் திரைவாழ்க்கையை முடக்குவதை அனுமதிக்க முடியாது என நடிகை ஜெயமாலா தெரிவித்துள்ளார்.

11 செப்டம்பர் 2011

நடிப்புக்கு இலக்கணம் காந்திமதி!

அடியே! அறிவு கெட்டவளே; மானம் கெட்டவளே; ரோசம் கெட்டவளே; வெட்கம் கெட்டவளே;....... உடம்பே கண்டம் துண்டமா வெட்டி உப்பு கண்டம் போட்டுருவேன்... ஏண்டி இந்த குருவம்மா அரும்பாடுபட்டு, கஷ்டப்பட்டு கோழி வளர்த்தா.... அதே வக்கனையா திருடி, வாய்க்கு ருசியா திங்க தெரியுதாடி.... அந்த வாயே கிழிச்சா..... அடியே அளந்து பேசு நாக்கை அறுத்துபுடுவேன் அறுத்து..... இது காந்திமதி 16 வயதினிலே படத்தில் படபடவென பேசும் வசனம்.
இதே போல் பாரதிராஜா இயக்கத்தில் அமைத்த இன்னொரு படமான மண்வாசனை படத்தில் பாட்டி வேஷத்தில் பழமொழிகள் சொல்லி நடிப்பில் சக்கபோடு போட்டிருப்பார். முத்து படத்தில் ரஜினியோடு காந்திமதி செய்யும் ரொமாண்டிக் கலாட்டா அனைவரும் ரசிக்கக் கூடியது.
இதயக் கோளாறு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்திமதி வடபழனியில் உள்ள தனது வீட்டில் (09.09.2011) வெள்ளிக்கிழமை காலமானார். காந்திமதியின் உடல் கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.
திருமணம் செய்து கொள்ளாத காந்திமதி, தன் தம்பி, தங்கை மகன்களான பாலசுப்பிரமணியன், தீனதயாளன் ஆகியோரை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதி தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான ‘யாருக்காக அழுதான்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி ஆகியோர் நடித்த பெரும்பாலான படங்களில் குணச்சித்திர வேடங்கள் ஏற்று புகழ் பெற்றார்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த "16 வயதினிலே', "கிழக்கே போகும் ரயில்', "மண்வாசனை' உள்ளிட்ட படங்கள் அவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தின. 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி.
நடிப்பில் நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் என எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அசத்துவார், அது மட்டும் இல்லை... அம்மாவாக நடித்தவர்களில் அம்மாவாகவே எல்லோரிடமும் அன்பை பொழிந்தவர் காந்திமதியம்மா என்று சொல்கிறார்கள் திரை உலகினர்.

06 செப்டம்பர் 2011

ரீமா சென் திருமணம்!

நடிகை ரீமாசென், டெல்லியை சேர்ந்த ஓட்டல் அதிபரை காதல் திருமணம் செய்கிறார். இவர்கள் திருமணம் 2012-ல் நடக்கிறது. இதனை ரீமா சென்னே அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார்.
'மின்னலே' படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், ரீமாசென். செல்லமே, பகவதி, தூள், கிரி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவருக்கும், டெல்லியில் ஓட்டல் நடத்தி வரும் ஷிவ்கரன்சிங் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் கடந்த 2 வருடங்களாக சேர்ந்து சுற்றி வருகிறார்கள். நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் விருந்துகளுக்கு ஜோடியாக சென்று வருகிறார்கள். ஷிவ்கரன் சிங்கை தனது நண்பர் என்று ரீமாசென் மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வந்தார்.
இப்போது தனது காதலை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "நானும், ஷிவ்கரன்சிங்கும் முதலில் நண்பர்களாகத்தான் பழகி வந்தோம். நாளடைவில் எங்கள் நட்பு, காதலாக மாறிவிட்டது. என்னை அவரும், அவரை நானும் மிக நன்றாக புரிந்து கொண்டோம்.
அழகான ஒரு பஞ்சாபி இளைஞனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறி இருக்கிறது. ஷிவ்கரன் சின் கிடைத்தது, என் அதிர்ஷ்டம்.
பெற்றோர் சம்மதத்துடன்...
எங்கள் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதைத்தொடர்ந்து நானும், ஷிவ்கரன்சிங்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதமும் கிடைத்து விட்டது.
அடுத்த வருடம் ஆரம்பத்தில் எங்கள் திருமணம் நடைபெறும். திருமணத்துக்குப்பின் நடிப்பேனா, மாட்டேனா என்பதை முடிவு செய்யவில்லை. ஆனால், என் கணவருடன் டெல்லியில் குடியேறி விடுவேன். டெல்லி, எனக்கு மிகவும் பிடித்த நகரம்,'' என்றார்.

03 செப்டம்பர் 2011

காதலை அழித்தாலும் இது மட்டும் அழியல்லையே!

காதலன் பெயரை முதுகில் பச்சை குத்திய நடிகை திவ்யா, இப்போது காதலில் கசமுசா ஏற்பட்டுள்ளதால் பச்சையை அழிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம். குத்து ரம்யா என்று அழைக்கப்படும் நடிகை திவ்யா, வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வந்தார். காதல் விஷயத்தில் இந்த ஜோடி ரகசியம் காத்து வந்த இந்த ஜோடி, சமீபத்தில் பெங்களூரில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ஜோடியாக வந்த போது ரகசியம் அம்பலமானது.
ரமேஷ் என்ற தனது காதலரின் பெயரை நடிகை திவ்யா, தன் முதுகில் பச்சை குத்தியிருப்பதுடன். ரமேஷை என் காதலராக பெற்றது இறைவன் கொடுத்த வரம் என்று ட்விட்டரில் கூறியிருந்தார். இந்நிலையில் சமீப காலமாக இந்தக் காதலில் பிரச்னை முளைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்பெல்லாம் திவ்யாவை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொள்ளும் ரமேஷ், இப்போதெல்லாம் பேசுவதே இல்லையாம். இதனால் கோபமடைந்த திவ்யா, முதுகில் குத்திய பச்சையை அழிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாராம்.

31 ஆகஸ்ட் 2011

மீண்டும் சில்க் ஸ்மிதா!

80களில் தென்னிந்தியத் திரையுலகைக் கலக்கிய கவர்ச்சி நாயகி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் நாயகி வித்யா பாலனின் படு ஹாட்டான படங்கள் வெளியாகியுள்ளன.
சில்க்கின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் படம் டர்ட்டி பிக்சர்ஸ். இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். நஸிருதீன் ஷா உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர்.
இதில் வித்யா பாலன் படு கவர்ச்சிகரமாக பல காட்சிகளில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்களும், சூடான டிரெய்லரும் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் 80களில் உருவான திரைப்படங்களின் பாணியில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில்க் போன்றே கவர்ச்சிகரமான காஸ்ட்யூம்களில் படு கவர்ச்சியாக காட்சியளிக்கிறார் வித்யா பாலன்.
இந்தப் படங்களைப் பார்க்கும்போது சில்க் வேடத்தில் நடிக்க பொருத்தமில்லாதவர் வித்யா என்ற வாதம் அடிபட்டுப் போகும் என்றே தெரிகிறது.

26 ஆகஸ்ட் 2011

திஷாவின் கவர்ச்சிக் கலக்கல்.

தமிழ்ப்படம் பெரிய வெற்றிப்படமாகியும்கூட அந்தப் படத்தின் நாயகி திஷா பாண்டேக்கு நிறைய வாய்ப்புகள் அமையவில்லை. அந்தக் குறையை தீர்த்துவிடும் என அவர் பெரிதும் நம்புவது மயங்கினேன் தயங்கினேன் படத்தைத்தான்.
திருமாவளவனின் ஆசியுடன் தாய்மண் திரையகம் வழங்கும் படம் என கடந்த ஆண்டு பூஜை போடப்பட்ட இந்தப் படத்தின் நாயகன் நிதின் சத்யா.
எஸ்டி வேந்தன் இயக்கும் இந்தப் படத்தில் திஷா பாண்டேயின் கவர்ச்சிதான் ஹைலைட் என்கிறார்கள். போதாக்குறைக்கு தேஜாஸ்ரீயும் படத்தில் உண்டு. போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்களாம்.
கால் டாக்ஸி டிரைவரான நிதின் சத்யா, டெலிபோன் ஆபரேட்டரான திஷா மீது காதலாவதுதான் கதை. இதில் தமிழ் சினிமாவுக்கே உரிய அத்தனை மசாவலா சமாச்சாரங்களையும் சேர்த்து படமாக்கியிருக்கிறாராம் வேந்தன்.
தமிழ்ப்படம் படத்துக்கு இசையமைத்த கண்ணன்தான் இந்தப் படத்துக்கும் இசை. ஜான் மக்கள் தொடர்பை கவனிக்க சுடர் முருகையா, ராணி ஜீவானந்தனம், எஸ்டி வேந்தன் மற்றும் மகாதேவன் தயாரிக்கிறார்கள்.
படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

24 ஆகஸ்ட் 2011

ஒரு பாட்டுக்கு ஒரு கோடி!

ஒஸ்தி படத்தில் சிம்புவுடன் குத்தாட்டம் போட நடிகை கத்ரீனா கைஃபுக்கு ரூ 1 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வேடத்தில் நடிக்க நயன்தாராவை இதே தொகைக்கு அணுகி பேசிப் பார்த்தார் இயக்குநர் தரணி. சிம்புவும் தனது பழைய தொடர்புகளை தூதுவிட்டுப் பார்த்தாராம். நயன்தாரா சம்மதிக்காத நிலையில், வேறு சில டாப் நடிகைகளை அணுகிப் பார்த்தனர்.
ஆனால் யாரும் சரியாக வராத நிலையில், கத்ரீனா கைஃபிடம் பேசினர். அவர் 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்க, உடனே ஓகே சொல்லுமாறு நாயகன் சிம்பு கூறிவிட்டாராம்.
இன்னொரு பக்கம் ரஜினியின் ராணா நாயகி தீபிகா படுகோனேவிடமும் இதே ஆஃபரை வைத்துள்ளனர். அவர் இன்னும் எந்த பதிலும் சொல்லாததால், கத்ரீனாவையே ஒப்பந்தம் செய்துவிடலாம் என்ற முடிவில் உள்ளனராம்.
ஒரு குத்தாட்டப் பாட்டுக்கு தமிழில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமை இதுவரை ஸ்ரேயாவுக்குதான் இருந்தது. அதை தகர்த்துவிட்டார் கத்ரீனா இப்போது!

19 ஆகஸ்ட் 2011

சினேகாவின் கவர்ச்சி!

குடும்ப குத்துவிளக்கு என்ற இமேஜை இன்று வரை பாதுகாத்து வைத்திருக்கும் சினேகா முதல் முறையாக கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.
ஆனால் இது சினிமாவுக்கு அல்ல, ஒரு அழகு சாதனப் பொருள் விளம்பரத்துக்காக.
சமீபத்தில் இந்த விளம்பரப் படத்துக்கான ஷூட்டிங் ஏவிஎம்மில் நடந்தபோது, சினேகாவைப் பார்த்தவர்கள் பிரமித்து நின்றார்கள்.
வெளிர் ரோஜா நிற லோ கட் சிங்கிள் பீஸ் மிடியில், அசத்தலாக போஸ் கொடுத்தார் சினேகா. இந்த விளம்பரம் மலேஷியாவைச் சேர்ந்த நிஷா அழகு சாதனப் பொருள்களுக்காக எடுக்கப்பட்டது.
இந்த அழகு சாதனத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியதே சினேகாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இந்திய தொலைக்காட்சிகளில், சினிமாவில் கூட பார்த்திராத அழகிய கவர்ச்சி உடையில் 'சினேகா தரிசனம்' காணலாம்.

16 ஆகஸ்ட் 2011

விக்ரமை எனக்கு பிடித்துவிட்டது!

நான் ஜோடியாக நடித்த இரண்டு ஹீரோக்கள் விக்ரம் மற்றும் விஷாலின் படங்கள் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் நடிகை ஸ்ரேயா.
சிவாஜியில் ரஜினியுடன் நடித்த பிறகு, மற்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஒரு ரவுண்ட் நடித்து முடித்துவிட்டார் ஸ்ரேயா. அவர்களில் விக்ரம் மற்றும் விஷாலும் உண்டு.
விகரமுடன் கந்தசாமியில் நடித்தார். விஷாலுடன் தோரணையில் ஜோடி சேர்ந்தார்.
இப்போது ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரேயா, தமிழில் சமீபத்தில் அவர் பார்த்த படங்கள் குறித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், "சமீபத்தில் விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படம் பார்த்து பிரமித்துப் போனேன். பிரமாதமாக நடித்திருந்தார். கந்தசாமி படத்தில் விக்ரமுடன் நடித்த அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் தெய்வத் திருமகள் அவரை இன்னொரு உயர்ந்த இடத்துக்கு கொண்டு போய்விட்டது.
அதில் அவரது கிருஷ்ணா கேரக்டர் அற்புதமாக இருந்தது. அவரை நான் காதலிக்கத் துவங்கி விட்டேன்.
நான் பிரமித்த இன்னொரு ஹீரோ விஷால். அவர் நடித்த அவன் இவன் படம் எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும். அந்த அளவு அற்புதமாக நடித்திருந்தார்.
என்னுடைய இன்னொரு ஹீரோ ஜீவா நடித்த கோ படமும் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. ஜீவா அசத்தலாக நடித்திருந்தார்", என்றார்.

13 ஆகஸ்ட் 2011

உதட்டோடு உதடு சேர்க்க மறுத்த நாயகன்!

அஜ்மல்-அபர்ணா பாஜ்பாய் நடிக்க, பிரபுராஜ சோழன் டைரக்டு செய்து வரும் படம், `கருப்பம்பட்டி.' இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்ட காட்சிகள் பழனியில் படமாக்கப்பட்டன.
காட்சிப்படி, அஜ்மல் தன் காதலை சொல்ல-அபர்ணாவும் ஏற்றுக்கொள்கிறார். அதற்கு பரிசாக அஜ்மல் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் தர வேண்டும். கதாநாயகி அபர்ணாவிடம் டைரக்டர் காட்சியை விவரிக்க, அதன் முக்கியத்துவம் கருதி அபர்ணா நடிக்க சம்மதித்தார்.
அஜ்மலிடம் காட்சியை சொன்னதும், ``உதட்டுடன் உதடு சேர்த்து முத்த காட்சியில் நடிக்க மாட்டேன்'' என்றார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. கதாநாயகிதான் மறுப்பார் என்று எதிர்பார்த்த டைரக்டருக்கு, அஜ்மல் மறுத்தது ஏமாற்றத்தை அளித்தது.
உங்களிடம் கதை சொல்லும்போது கூட இந்த காட்சியை பற்றி விவரித்து இருந்தேனே'' என்று டைரக்டர் வற்புறுத்தி கேட்டும், அஜ்மல் பிடிவாதமாக நடிக்க மறுத்தார்.
இதனால் 2 மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளர் சுந்தர் கே கதாநாயகன் அஜ்மல், டைரக்டர் பிரபுராஜ சோழன் ஆகிய இருவரையும் சமாதானப் படுத்தினார்.
அதன்பிறகு உதட்டு முத்த காட்சி மாற்றப்பட்டு, கன்னத்தில் முத்தமிடுவது போல் படமாக்கப்பட்டது.
முத்த காட்சியில் நடிக்க மறுத்தது பற்றி அஜ்மலிடம் கேட்டபோது,
நான் சினிமா நடிகர் ஆவதை என் பெற்றோர்கள் விரும்பவில்லை. அவர்கள் விருப்பப்படி ரஷியாவில் டாக்டருக்கு படித்து முடித்து, `டிகிரி'யை அவர்களிடம் கொடுத்துவிட்டு, நடிப்பு துறைக்கு வந்தேன். அப்போது என் பெற்றோர்கள் சில நிபந்தனைகளை எனக்கு விதித்தார்கள்.
நடிகைகளுக்கு முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது. விரசமான காட்சிகளில் நடிக்கக்கூடாது. இரட்டை அர்த்த வசனம் பேசக்கூடாது'' என்று அவர்கள் கேட்டுக்கொண்டபடி, இன்று வரை உறுதியுடன் இருந்து வருகிறேன். நான் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்து நடித்தால், வீட்டில் சேர்க்க மாட்டார்கள்’’என்று கூறினார்.

12 ஆகஸ்ட் 2011

இம்ரானை அறைந்த கத்ரீனா!

பாலிவுட் நடிகர் இம்ரான் கானை சக நடிகை கத்ரீனா கைப் பளார் பளான கன்னத்தில் அறைந்துள்ளார். அதுவும் 16 தடவை!
உடனே கற்பனையைத் தட்டிவிடாதீங்க. செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் பாலிவுட் படம் 'மேரே பிரதர் கி துல்ஹன்'. அந்த படத்தில் ஆமீர் கான் மருமகன் இம்ரான் கான், கத்ரீனா கைப், பாகிஸ்தானிய நடிகர் அலி ஜாபர் ஆகியோர் நடிக்கின்றனர். அதில் ஒரு காட்சியில் கத்ரீனா இம்ரானை அறைய வேண்டும்.
கத்ரீனாவுக்கு இம்ரான் மேல் என்ன கடுப்போ என்னவோ தெரியவில்லை. 16 டேக் வாங்கியிருக்கிறார். கன்னம் சிவக்க, சிவக்க அறை வாங்கியிருக்கிறார் இம்ரான்.
16 டேக்குக்கு பிறகு இயக்குனர் ஓகே சொல்ல அன்றைய படபிடிப்பு முடிந்தது.
மறுநாள் படபிடிப்புக்கு வந்த இம்ரானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. செட்டில் நுழைந்ததும், நுழையாததுமாய் நேற்று எடுத்த காட்சியில் கத்ரீனாவுக்கு திருப்தி இல்லையாம். அதனால் இன்றும் கன்னதில் அறையும் காட்சி தான் என்று சொல்லியிருக்கின்றனர். பாவம் இம்ரான் என்ன சொல்ல முடியும், அமைதியாக அறை வாங்கினார்.
காதல் படங்களுக்குப் புகழ்பெற்ற யாஷ் ராஜ் பிலிம்ஸ்-ன் மேரே பிரதர் கி துல்ஹன் ஒரு முக்கோணக் காதல் கதை. சகோதரனுக்காக பெண் பார்க்கச் சென்றவன் அந்த பெண் மீது காதல் கொள்கிறான். இறுதியில் அந்த பெண் யாருக்கு என்பதுதான் கதை!

08 ஆகஸ்ட் 2011

இந்துவானார் நயன்தாரா.

பிரபு தேவாவைத் திருமணம் செய்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நடிகை நயன்தாரா.
15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து, 3 குழந்தைகள் பிறந்து, அதில் மூத்த குழந்தை இறந்த நிலையில், விவாகரத்து செய்தார் பிரபு தேவா. முஸ்லிமாக இருந்த ரம்லத், பிரபுதேவாவுக்காக மதம் மாறி லதா என்று புதுப்பெயர் சூடிக் கொண்டார். ஆனால் நயன்தாரா மீதான காதல் காரணமாக ரம்லத்தை உதறினார் பிரபு தேவா. சமீபத்தில்தான் ரம்லத் - பிரபு தேவா விவாகரத்தை அறிவித்தது குடும்ப நல கோர்ட்.
இப்போது பிரபு தேவா அடுத்த கல்யாணத்துக்கு தயாராகிறார். நயன்தாராதான் இவருக்கு மனைவியாகப் போகிறார். ஆனால் நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பிரபு தேவாவுக்காக நயன்தாரா மதம் மாறுவாரா அல்லது நயனுக்காக பிரபு தேவா மதம் மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இப்போது தனக்காக மனைவியை விவாகரத்து செய்த பிரபு தேவாவுக்காக, மதம் மாறிவிட்டார் நயன்தாரா.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் முறைப்படி இந்து மதத்துக்கு மாறினார். நேற்று கொச்சியிலிருந்து சென்னை வந்த நயன்தாரா, ஆரிய சமாஜத்தில் வேத விற்பன்னர்கள் முன்னிலையில் 'சுத்த பரிகாரம்' செய்தார்.
பி்ன்னர் வேத மந்திரங்களை உச்சரித்தபடி, இந்துவாக மாறினார்.
இந்து மதத்துக்கு மாறுவதை பெருமையாகவும் சந்தோஷமாகவும் உணர்வதாக நயன்தாரா பின்னர் தெரிவித்தார். இந்த மத மாற்றத்துக்கு யார் வற்புறுத்தலும் காரணமல்ல என்றும் இது எனது தனிப்பட்ட விருப்பம், உரிமை என்றும் அவர் கூறினார்.
நயன்தாராவின் நிஜப் பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவுக்காக வைக்கப்பட்ட இந்த நயன்தாரா என்ற பெயரையே இனி தன் நிரந்தரப் பெயராக பயன்படுத்தப் போகிறாராம்.

03 ஆகஸ்ட் 2011

திரிஷாவின் மாப்பிளை யார்?

நடிகை த்ரிஷாவுக்கு அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது, அவர் மணமுடிக்கப்போகும் மாப்பிள்ளை இளம் தொழில் அதிபரா? அல்லது சாப்ட்வேர் என்ஜினீயரா? என்பது செப்டம்பர் மாதம் தெரிந்து விடும். ஜோடி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் த்ரிஷா. லேசா லேசா படத்தில் தான் முதன்முதலாக கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அந்தபடம் வருவதற்கு முன்னாலேயே மவுனம் பேசியதே படம் ரிலீசாகி விட்டது. இந்த படம், 2002-ம் ஆண்டில் திரைக்கு வந்தது. கடந்த 10 வருடங்களாக த்ரிஷா தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இதுதவிர இந்தியிலும் ஒருபடம் பண்ணிவிட்டார். தற்போது த்ரிஷாவுக்கு சினிமா வாய்ப்புகள் நிறைய வந்தாலும், சமீப காலமாக அம்மணி சினிமாக்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதற்கு காரணம் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன.
ஏற்கனவே பலமுறை திருமண வதந்திகளில் சிக்கியிருக்கும் த்ரிஷாவுக்கு, இப்போது உண்மையிலேயே திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருக்கும் த்ரிஷாவை, பெண் கேட்டு 2 வரன்கள் வந்துள்ளன. இரண்டு பேருமே சென்னையை சேர்ந்தவர்கள். ஒருவர், இளம் தொழில் அதிபர். இன்னொருவர், சாப்ட்வேர் துறையில் உயர் அதிகாரியாக இருப்பவர். இவர்களில் தன், மனதுக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறாராம் த்ரிஷா. ஆனால் அவர் யார்? என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற இருக்கிறது.
இதனிடையே சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அம்ருத் என்பவரைத்தான் த்ரிஷா திருமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. அம்ருத் த்ரிஷாவுக்கு புதியவரல்ல.பெரும்பாலான பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம். கடந்த வாரம் த்ரிஷாவுக்கு ஸ்டைல் நடிகை விருது கொடுத்த போதுகூட, அம்ருத்தும் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

01 ஆகஸ்ட் 2011

படிக்கப்போறேன் என்கிறார் ஷம்மு.

காஞ்சிவரம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஷம்மு. இவர் மலையன், மாத்தியோசி படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இவர் தற்போது நடித்துள்ள மயிலு, பாலை படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் ஷம்மு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு மருத்துவ படிப்பை தொடர அமெரிக்க செல்வதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து ஷம்மு கூறியதாவது:
நான் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் அமெரிக்காதான். ஆனால் அடிப்படையில் நான் ஒரு தமிழ் பெண். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் டாக்டர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் சென்ட்ரல் புளோரிடா பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை மீண்டும் தொடரை இருக்கிறேன்.
நான் சினிமாவுக்கு வந்து தற்செயலான ஒரு நிகழ்வு. எனக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. தேசிய விருது பெற்ற காஞ்சிவரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது.
மீண்டும் சினிமாவுக்கு வருவேனா? என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

28 ஜூலை 2011

படத்தை ஆரம்பித்தார் ஐஸ்வர்யா.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஒருபடத்தில் நடிக்க போவதாக முன்னரே செய்திகள் வெளியாகின. அந்த செய்தி இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனுஷின் பிறந்ததினமான இன்று(28.07.11) இப்படத்தை ஆரம்பிக்கிறார் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ். தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், தேசிய விருது பெற்ற உற்சாகத்தில் இருக்கிறார். கூடவே அவருக்கு இன்று பிறந்தநாளும் கூட. இந்தபிறந்தநாளில் இன்னொரு சந்தோஷமும் தனுஷ்க்கு கூடி வந்திருக்கிறது. அதாகப்பட்டது ஏற்கனவே மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில், ஒரு படம் நடிக்க போவதாக இருந்த தனுஷ், அந்தபடத்தை தன்னுடைய பிறந்தநாளான இன்றே துவங்கியிருக்கிறார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநராக அவதரிக்கும் முதல் படம் இது. படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். புதுமுகம் ஒருவர் இசையமைக்கிறார். ஐஸ்வர்யா தனுஷூம், வேல்ராஜ் இருவரும் ஒளிப்பதிவு செய்கின்றனர். இந்தப் படத்துக்காக ஒரு பாடல் கூட பதிவு செய்யப்பட்டுவிட்டது. விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மேனன் பாடியுள்ளனர். இந்தப் பாடலைத்தான் இன்று ஷூட் செய்கிறார்கள். படப்பிடிப்பு சென்னை மற்றும் புறநகரிலேயே இருக்குமாம். இந்தபடம் பற்றிய முழுவிபரத்தை தனுஷ் நாளை வெளியிடுவார் எனத் தெரிகிறது. இதனிடையே படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ஸ்ருதிக்கு பதிலாக, அமலா பால் நடிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

18 ஜூலை 2011

அடம்பிடிக்கும் வித்யாபாலன்.

கவர்ச்சி நடிகை சில்க் வேடத்தில் நடிப்பேன்; ஆனால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று முன்பு ஒரு பேட்டியில் கூறி, எக்கச்சக்க விமர்சனத்துக்கு ஆளான வித்யாபாலன் மீண்டுமொரு பேட்டியால் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தால் கவர்ச்சியாகத்தானே நடிக்க வேண்டும். ஆனால் அம்மணி அதற்கு மாறாக நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்தார். ஒருவழியாக அவரை சரிகட்டிய படக்குழுவினருக்கு மீண்டும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் வித்யா.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில், எந்த வகையான காஸ்ட்யூமும் தனக்கு ஓ.கே தான்;ஆனால் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மட்டும் கூடவே கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறார் வித்யா பாலன். தற்போது ஐதராபாத்தில் சூட்டிங் நடந்து வருகிறது. படத்தில் வித்யாவை கவர்ச்சிகரமாக காட்டும் பொறுப்பை அவரது காஸ்ட்யூம் டிசைனர் நிஹாரிகா கான் ஏற்றுள்ளார். அவரிடம்தான் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிய மாட்டேன் என்று அடம்பிடித்திருக்கிறார் வித்யா. ஏன் ஸ்லீவ்லெஸ் வேண்டாம்? என்று அம்மணியிடம் கேட்டால், ஸ்லீவ்ஸெல் போட்டால் தனது தோள்பட்டைகளும், அக்குளும் பட்டவர்த்தனமாக தெரியும். அதை நான் விரும்பவில்லை என்று கூறுகிறாராம். என்னத்த சொல்ல?

15 ஜூலை 2011

ஐயையோ!எல்லாமே பொய்.

தனக்கும், தனது கணவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஒன்றாகத் தான் இருப்பதாகவும் நடிகை பூமிகா தெரிவித்துள்ளார்.
நடிகை பூமிகா, யோகா பயிற்சியாளர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக பூமிகா மும்பை நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
குறிப்பாக பரத் தாகூர் படம் ஒன்றை எடுத்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பூமிகா கடுப்பாகியுள்ளதாகவும் பேசப்பட்டது.
இதைப் பார்த்து பூமிகா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
எனக்கும், எனது கணவருக்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாகத் தான் இருக்கிறோம். நாங்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதை நான் பலமுறை மறுத்துள்ளேன். ஆனாலும் வதந்திகள் நின்றபாடில்லை. இந்த வதந்திகளை நம்பாதீர்கள் என்றார்.

10 ஜூலை 2011

ஜெனிலியா வீட்டில் சம்மதம் கிடைத்தது.

பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா. சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குக்கும் சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. இருவரும் “துங்கே மேரி கஸம்” என்ற படத்தில் இணைந்து நடித்தனர்.
ரிதேஷ் தேஷ்முக் முன்னாள் மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில் இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக ரிதேஷின் தந்தை காதலர்களை பிரிக்க கடும் முயற்சி செய்தார். ஆனாலும் அவர்கள் காதலில் உறுதியாக இருந்தனர். ரகசியமாக சந்தித்து வந்தார்கள்.
சமீபத்தில் டோரன்டோவில் நடந்த பட விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் கைகோர்த்தபடி நடந்து சென்று காதலை உறுதிபடுத்தினர். அருகருகே உட்கார்ந்து விழாவை கண்டு களித்தனர்.
காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. பட விழாவில் ரிதேசும் ஜெனிலியாவும் நெருக்கமாக உட்கார்ந்து இருந்தபோது ஜெனிலியாவின் தாயாரும் உடன் இருந்தார்.
ஜெனிலியாவுக்கு தற்போது இரண்டு இந்திப் படங்கள் கைவசம் உள்ளன. “போர்ஸ்” என்ற படத்தில் ஜான் அபிரகாமுடனும் இன்னொரு படத்தில் அபிஷேக்பச்சனுடனும் நடிக்கிறார். இப்படங்கள் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

05 ஜூலை 2011

சீறும் ஸ்ரேயா.

சென்னை நட்சத்திர ஹோட்டல் பார்ட்டியில் பங்கேற்ற நடிகை ஸ்ரேயா, குடிபோதையில் குத்தாட்டம் போட்டதாக வெளியான செய்தியை அவரே மறுத்துள்ளார். சர்ச்சையின் நாயகியாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. சினிமா வாய்ப்புகள் இருக்கிறதோ... இல்லீயோ...? அம்மணியைப் பற்றி தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இப்போது வெளியாகியிருக்கும் செய்தி கொஞ்சம் மோசமான செய்திதான். நடிகை ஸ்ரேயா குடித்துவிட்டு போதையில் ஆடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் உலா வருகின்றன. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவுக்குப் பிறகு, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் ஸ்ரேயா பங்கேற்று அளவுக்கு மீறி குடித்து போதையில் தள்ளாடினாராம் ஸ்ரேயா. விருந்து முடிந்து அளவுக்கதிகமான போதையில் கீழே விழப்போன ஸ்ரேயாவை அவரது தோழிகள்தான் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று காரில் உட்கார வைத்ததாக செய்திகள் வெளியாயின.
இந்த செய்தியைப் படித்ததும் கொதித்துப் போன ஸ்ரேயா, "நான் போதையில் தள்ளாடியதாகவும், ஆட்டம் போட்டதாகவும் செய்தி பரவி இருப்பது வேதனையளிக்கிறது. எனக்கு எதிராக இது போன்ற அவதூறு பரப்பியவர்களை சும்மா விடமாட்டேன். நான் நட்சத்திர ஹோட்டல் பப்களுக்கு அபூர்வமாகத்தான் போவேன். கடந்த சில நாட்களாக எந்த பப்புக்கும் போகவில்லை. மதுவும் அருந்தவுமில்லை. என்னைப் பற்றி இது போன்று வதந்திகளை பரப்பியது யார் என்று தெரியவில்லை. இன்டர்நெட்டில் நான் குடித்து விட்டு ஆடுவது போன்று படம் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த படத்தில் இருப்பது நான் அல்ல. மார்பிங் செய்து அந்த போட்டோவை வெளியிட்டுள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று கூறியுள்ளார்.
போற போக்கைப் பார்த்தால் சர்ச்சைகளில் சிக்குவதில் த்ரிஷாவை முந்தி விடுவார் போலிருக்கிறதே?

02 ஜூலை 2011

சினிமாவிற்கு விடை கொடுத்த நயன்.

நயன்தாரா, சினிமாவிலிருந்து விலகிவிட்டார். தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராம ராஜ்யம்தான் அவரது கடைசி படம். இந்தப் பட ஷூட்டிங்கின் கடைசி தினமான நேற்று, படப்பிடிக்குழுவினரிடம் கதறி அழுதபடி விடைபெற்றார் நயன்தாரா!
இனி நான் நடிக்க மாட்டேன். உங்களை ஷூட்டிங்கில் சந்திப்பது இதுவே கடைசி என்று கூறிவிட்டுச் சென்றார்.
வில்லு படத்தில் நடித்தபோது நடிகை நயன்தாராவுக்கும், நடிகர்-இயக்குநர் பிரபுதேவாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. கணவர்-மனைவி போல் வாழ ஆரம்பித்தனர்.
நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில், பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி நயன்தாரா-பிரபுதேவா காதல் தொடர்ந்தது.
நயன்தாராவின் காதலுக்கு விலையாக ரம்லத்தை விவாகரத்து செய்யத் தயாரானார் பிரபு தேவா. விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள் பிரபு தேவாவும் ரம்லத்தும். திடீர் திருப்பமாக, இருவரும் மனமொத்து பிரிவதாக எழுதிக் கொடுத்தனர். இதற்கு நஷ்டஈடாக ரம்லத்துக்கு பல கோடி சொத்துக்களை கொடுத்துள்ளார் பிரபு தேவா. இந்த செட்டில்மென்டும் சமீபத்தில் முடிந்துவிட்டது. அடுத்தமாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வருகிறது.
விவாகரத்து தீர்ப்பு வந்ததும் பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்துகொள்கிறார். இப்போது இருவரும் மும்பையில் தங்கியிருக்கிறார்கள். அநேகமாக திருமணத்தையும் விரைவில் மும்பையிலேயே வைத்துக்கொள்வார்கள் என்று தெரிகிறது.
கடைசி படம்:
திருமணத்துக்குப்பின் நயன்தாரா சினிமாவில் நடிக்கக்கூடாது என்று பிரபுதேவா கண்டிப்புடன் கூறியிருக்கிறார். அதற்கு நயன்தாராவும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அவர் கடைசியாக, ‘ஸ்ரீராமராஜ்யம்’ என்ற தெலுங்கு படத்தில் சீதையாக நடித்து வந்தார்.
இது, என்.டி.ராமராவ் நடித்த ‘லவகுசா’ என்ற படத்தின் ரீமேக். அவருடைய மகன் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் நடந்தது. அதில் நயன்தாரா கலந்துகொண்டு நடித்து வந்தார். நேற்று கடைசி நாள் படப்பிடிப்பு.
கண்ணீர் கதறல்:
நயன்தாரா காலையில் படப்பிடிப்புக்கு வந்தபோதே சோகமாக காணப்பட்டார். மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் பிரியா விடை பெற்றார். அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு அழுதார்.
அவருக்கு, நடிகர் பாலகிருஷ்ணா ஆறுதல் கூறினார். “திருமணம் ஆனபிறகும் நீ தொடர்ந்து நடிக்கலாம். கவலைப்படாதே” என்றார். அதற்கு நயன்தாரா, “திருமணத்துக்குப்பின் நடிக்கக்கூடாது என்று ‘அவர்’ கண்டிப்பாக கூறிவிட்டார்” என்று பதில் அளித்தார்.
கடிகாரம்-மோதிரம் பரிசு:
பின்னர் அவர், படப்பிடிப்பு குழுவில் இருந்த 150 பேர்களுக்கும் கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். தன்னிடம் நீண்ட நாட்கள் ‘மேக்கப்மேன்’ ஆக பணிபுரிந்த ராஜுவுக்கு ஒரு பவுனில் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார்.
அதன்பிறகு படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் நயன்தாரா சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. நயன்தாரா கண்களை துடைத்துக்கொண்டு, விமானம் மூலம் மும்பைக்கு பறந்தார்.

28 ஜூன் 2011

புரட்டிப்போட்ட ஸ்ரேயா.

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகை ஸ்ரேயா. கடந்த வாரம், இடுப்புக் கீழே போட்டோ எடுக்கக் கூடாது என புகைப்படக்காரர்களைத் திட்டியதால் பரபரப்பாக செய்திகளில் இடம் பெற்றார்.
இந்த வாரம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மது குடித்தால் தப்பில்லை என்பதுபோல கருத்து சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில் 25 வயதுக்கு உட்பட்டோர் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
அவர்கள் மதுக்கடைகளில் மது வாங்கவும் அனுமதிக்கப்படவில்லை. இச்சட்டத்தை நடிகை ஸ்ரேயா விமர்சித்ததாக செய்திகள் வந்தன. 18 வயது உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஓட்டு போடவும் அனுமதி இருக்கிறது. ஆனால் மது அருந்த மட்டும் தடை போடுகிறார்கள் என்று ஸ்ரேயா கண்டித்ததாக கூறப்பட்டது.
ஸ்ரேயா கருத்துக்கு அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதை அறிந்த ஸ்ரேயா உடனே தனது கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டதாக, பழியை பத்திரிகைகள் மீது போட்டுள்ளார். மது குடிப்பதை ஆதரித்து நான் எந்த கருத்தும் சொல்லவே இல்லை. நான் சொல்லாத விஷயத்துக்கு என் மீது கண்டனம் தெரிவித்தால் என்ன அர்த்தம்?, என்று திருப்பிக் கேட்டுள்ளார் ஸ்ரேயா.