படத்தில் நடிக்கையில் இயக்குனர் சொல்லும் உடைகளைத் தான் அணிய வேண்டியிருக்கிறது. அதனால் தான் நினைத்தபடி உடைகள் அணிய முடியவில்லை என்று நடிகை தமன்னா கவலை அடைந்துள்ளார்.
இது குறித்து தமன்னா கூறியதாவது,
நான் சிறுபிள்ளையாக இருக்கும் போதே நிறைய படங்கள் பார்த்துள்ளேன். ஒவ்வொரு படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்ப்பேன். கல்லூரிக் கதை என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். ஏனென்றால் நான் கல்லூரிக்கு சென்று படித்ததில்லை. நான் நடிக்கும் படத்தில் குறைந்தது ஒரு காட்சியாவது கல்லூரி பின்னணியில் இருக்குமா என்று தான் எதிர்பார்ப்பேன்.
உடைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். கதாநாயகியாக நடிக்கையில் நான் நினைத்த உடைகளை அணிந்து நடிக்க ஆசைப்படுவேன். ஆனால் காட்சி, லைட, கதாபாத்திரத்திற்கு ஏற்ப இயக்குனர் சொல்லும் உடைகளைத் தான் அணிய வேண்டும். நினைத்தபடி உடை அணிய முடியாதது ஏதோ தடைவிதித்தது போன்று இருக்கும். அதனால் வருத்தப்படுவேன்.
ஆனால் ஷூட்டிங் இல்லையென்றால் நான் இஷ்டப்பட்ட உடைகளைத் தான் அணிவேன். எனக்கு லைட் கலர் உடைகள் தான் ரொம்பப் பிடிக்கும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக