பாலிவுட் நடிகர் இம்ரான் கானை சக நடிகை கத்ரீனா கைப் பளார் பளான கன்னத்தில் அறைந்துள்ளார். அதுவும் 16 தடவை!
உடனே கற்பனையைத் தட்டிவிடாதீங்க. செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் பாலிவுட் படம் 'மேரே பிரதர் கி துல்ஹன்'. அந்த படத்தில் ஆமீர் கான் மருமகன் இம்ரான் கான், கத்ரீனா கைப், பாகிஸ்தானிய நடிகர் அலி ஜாபர் ஆகியோர் நடிக்கின்றனர். அதில் ஒரு காட்சியில் கத்ரீனா இம்ரானை அறைய வேண்டும்.
கத்ரீனாவுக்கு இம்ரான் மேல் என்ன கடுப்போ என்னவோ தெரியவில்லை. 16 டேக் வாங்கியிருக்கிறார். கன்னம் சிவக்க, சிவக்க அறை வாங்கியிருக்கிறார் இம்ரான்.
16 டேக்குக்கு பிறகு இயக்குனர் ஓகே சொல்ல அன்றைய படபிடிப்பு முடிந்தது.
மறுநாள் படபிடிப்புக்கு வந்த இம்ரானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. செட்டில் நுழைந்ததும், நுழையாததுமாய் நேற்று எடுத்த காட்சியில் கத்ரீனாவுக்கு திருப்தி இல்லையாம். அதனால் இன்றும் கன்னதில் அறையும் காட்சி தான் என்று சொல்லியிருக்கின்றனர். பாவம் இம்ரான் என்ன சொல்ல முடியும், அமைதியாக அறை வாங்கினார்.
காதல் படங்களுக்குப் புகழ்பெற்ற யாஷ் ராஜ் பிலிம்ஸ்-ன் மேரே பிரதர் கி துல்ஹன் ஒரு முக்கோணக் காதல் கதை. சகோதரனுக்காக பெண் பார்க்கச் சென்றவன் அந்த பெண் மீது காதல் கொள்கிறான். இறுதியில் அந்த பெண் யாருக்கு என்பதுதான் கதை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக