பிரபு தேவாவைத் திருமணம் செய்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நடிகை நயன்தாரா.
15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து, 3 குழந்தைகள் பிறந்து, அதில் மூத்த குழந்தை இறந்த நிலையில், விவாகரத்து செய்தார் பிரபு தேவா. முஸ்லிமாக இருந்த ரம்லத், பிரபுதேவாவுக்காக மதம் மாறி லதா என்று புதுப்பெயர் சூடிக் கொண்டார். ஆனால் நயன்தாரா மீதான காதல் காரணமாக ரம்லத்தை உதறினார் பிரபு தேவா. சமீபத்தில்தான் ரம்லத் - பிரபு தேவா விவாகரத்தை அறிவித்தது குடும்ப நல கோர்ட்.
இப்போது பிரபு தேவா அடுத்த கல்யாணத்துக்கு தயாராகிறார். நயன்தாராதான் இவருக்கு மனைவியாகப் போகிறார். ஆனால் நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பிரபு தேவாவுக்காக நயன்தாரா மதம் மாறுவாரா அல்லது நயனுக்காக பிரபு தேவா மதம் மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இப்போது தனக்காக மனைவியை விவாகரத்து செய்த பிரபு தேவாவுக்காக, மதம் மாறிவிட்டார் நயன்தாரா.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் முறைப்படி இந்து மதத்துக்கு மாறினார். நேற்று கொச்சியிலிருந்து சென்னை வந்த நயன்தாரா, ஆரிய சமாஜத்தில் வேத விற்பன்னர்கள் முன்னிலையில் 'சுத்த பரிகாரம்' செய்தார்.
பி்ன்னர் வேத மந்திரங்களை உச்சரித்தபடி, இந்துவாக மாறினார்.
இந்து மதத்துக்கு மாறுவதை பெருமையாகவும் சந்தோஷமாகவும் உணர்வதாக நயன்தாரா பின்னர் தெரிவித்தார். இந்த மத மாற்றத்துக்கு யார் வற்புறுத்தலும் காரணமல்ல என்றும் இது எனது தனிப்பட்ட விருப்பம், உரிமை என்றும் அவர் கூறினார்.
நயன்தாராவின் நிஜப் பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவுக்காக வைக்கப்பட்ட இந்த நயன்தாரா என்ற பெயரையே இனி தன் நிரந்தரப் பெயராக பயன்படுத்தப் போகிறாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக