![]() |
| மகள் காயத்ரியுடன் ரகுராம் மாஸ்ரர் |
நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள் நல்லுள்ளங்களாக இருப்பின், துன்பங்களில் கூட இன்பங்களை காணலாம்.
30 நவம்பர் 2013
நடன இயக்குனர் ரகுராம் காலமானார்!
23 நவம்பர் 2013
ஸ்ருதியை தாக்கியது பிரபல நடிகரின் மனைவி?
- பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவரின் மனைவி ஏற்பாட்டில்தான் ஸ்ருதி ஹாஸன் தாக்கப்பட்டதாக பரபரப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன மும்பை மீடியாவில்.ஸ்ருதி ஹாஸன் வீட்டிலிருந்த போது அவரை மர்ம மனிதன் தாக்கிவிட்டு ஓடியது தெரிந்ததே. ஸ்ருதிஹாஸன் தாக்கப்பட்டதன் பின்னணியில் பிரபல நடிகர் மனைவி? இதுகுறித்து ஸ்ருதிஹாஸன் முதலில் போலீசில் புகார் செய்யவில்லை. காரணம், அந்த தாக்குதல் நடந்தபோது, அவர் வீட்டில் ஒரு பிரபல இந்தி நடிகர் இருந்ததாகவும், புகார் செய்தால இந்த விவகாரம் வெளியில் வந்துவிடும் என்று அஞ்சியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தாக்குதல் குறித்து நேற்றுதான் போலீசில் புகார் செய்தார் ஸ்ருதிஹாஸன். ஆனால் இப்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் அதிர வைத்துள்ளது. கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார் ஸ்ருதி என்றும் இதற்கு ஒரு பிரபல கான் நடிகர்தான் காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இதைவிட அதிர வைக்கும் விஷயம், ஸ்ருதியைத் தாக்க இந்த நபரை ஏவியவர் அந்த நடிகரின் மனைவிதானாம். ஸ்ருதி புகார் தந்ததுமே, அந்த நடிகர் ஸ்ருதியைத் தொடர்பு கொண்டு, இந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள். இல்லாவிட்டால் என் பெயர் நாறிவிடும், என வற்புறுத்தினாராம்.அபார்ட்மென்ட்டில் உள்ள அனைவரும் பார்க்கும் வகையில் ஸ்ருதியுடன் பிரச்சினை செய்ய வேண்டும் என்று சொல்லித்தான் அந்த நபரை நடிகரின் மனைவி ஏற்பாடு செய்திருந்தாராம். அவர் நினைத்தது கிட்டத்தட்ட இப்போது நடந்துவிட்டது. ஸ்ருதி தாக்கப்பட்டதை விட, அதன் பின்னணி பற்றித்தான் அதிகம் பேச ஆரம்பித்துள்ளனர்.முக்கிய பத்திரிகைகளின் நிருபர்களுக்கு இந்த விஷயத்தை நடிகரின் மனைவியே போன் போட்டு சொன்னதும் அம்பலமாகியுள்ளது."நடிகருடனான தொடர்பை ஸ்ருதி இத்துடன் நிறுத்திக் கொள்ளாவிட்டால், நிச்சயம் அடுத்தமுறை நானே நேரில் வந்து அனைவருக்கும் தெரியும் வகையில் சண்டை போடவும் தயங்கமாட்டேன்... என் கணவருடன் சேர்ந்து அவரது கள்ளத் தொடர்புகளும் அம்பலமாகட்டும்," என்றும் எச்சரித்துள்ளாராம் நடிகர் மனைவி.இந்தத் விவரங்கள் இப்போது தமிழ்ப் பத்திரிகைகள் மத்தியிலும் பரவ ஆரம்பித்துள்ளது.
20 நவம்பர் 2013
ஷ்ருதி ஹாசனை பலாத்காரம் செய்ய முயற்சி!
கமல் ஹாஸன் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாஸனின் மும்பை வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவலாளிகள் விரட்டியுள்ளனர்.
ஸ்ருதி ஹாஸன் அவரிடமிருந்து விலகி, அந்த நபரை பாதுகாவலர்கள் துணையுடன் விரட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் எதுவும் இன்னும் பதிவாகவில்லை.
வீடு புகுந்து ஸ்ருதி ஹாஸனை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்... பாலிவுட்டில் பரபரப்பு!
ஆனால் இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளாராம் ஸ்ருதி.
இந்தியில் பிஸியான நடிகையாக உள்ளார் ஸ்ருதி ஹாஸன். அவரை கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒரு நபர் பின்தொடர்ந்து வந்தாராம். ராமய்யா வஸ்தாவய்யா படப்பிடிப்பின்போது ஸ்ருதியை அவர் நெருங்க முயன்றுள்ளார். ஆனால் படக்குழுவினர் விரட்டியடித்துவிட்டனர்.
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாந்த்ராவில் ஸ்ருதி தங்கியுள்ள வீட்டு அழைப்பு மணி ஒலிக்க, பாதி தூக்க கலக்கத்துடன் கதவைத் திறந்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். உடனே சட்டென்று உள்ளே நுழைந்த அந்த நபர், ஸ்ருதியை கட்டிப்பிடித்து, கழுத்தை நெறிக்க முயன்றாராம்.
உடனே சுதாரித்துக் கொண்ட ஸ்ருதி, அந்த நபரை பலமாக வெளியில் தள்ளி கதவை தாழிட முயன்றாராம். அதே நேரம் பலமாகக் குரலெழுப்பி செக்யூரிட்டிகளை அழைத்துள்ளார். அவர்கள் வந்து அந்த நபரைப் பிடித்து இழுத்து விரட்டியடித்துள்ளனர்.
ஸ்ருதியின் மும்பை ஏஜென்ட் இத்தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த நபர் யார், ஸ்ருதியைக் காதலித்த ரசிகரா... ஸ்ருதியின் மீதான தனிப்பட்ட பகை காரணமா என்பது குறித்து எதுவும் தெரியாது என அந்த ஏஜென்ட் தெரிவித்தார்.
ஆனால் தங்களுக்கு இதுபற்றி எந்த புகாரும் வரவில்லை என்று மும்பை போலீஸ் துணை கமிஷனர் செர்ரிங் டோர்ஜ் தெரிவித்தார்.14 நவம்பர் 2013
இளையதளபதி எல்லாம் சும்மா!
என் வாழ்க்கையில் அப்பா அம்மா மனைவி குழந்தைக்குப் பிறகு எனக்கு எல்லாமே என் நண்பன் விஷால்தான். இளையதளபதி அது இதெல்லாம் சும்மா, என்று கண்கலங்கினார் நடிகரும் விஜய்யின் தம்பியுமான விக்ராந்த். விக்ராந்த்... நடிகர் விஜய்யின் ரத்த சொந்தம். சித்தி மகன். அவர் கற்க கசடற படத்தில் அறிமுகமான போதே, விஜய்யின் தம்பி என்றுதான் தன்னை காட்டிக் கொண்டார். படத்திலும் விஜய்க்கு ஏக பில்டப் தரும் காட்சிகள் உண்டு. அதன் பிறகு, எங்கள் ஆசான், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்தார். நட்சத்திர கிரிக்கெட்டில் செஞ்சுரி அடிக்க முடிந்த அவரால், சினிமா நட்சத்திரமாக திரையில் ஜெயிக்க முடியவில்லை. இந்த நேரத்தில்தான் விஷால் அவருக்குக் கைகொடுத்தார். தான் மிகுந்த நெருக்கடியில் இருந்த போதும், தன்னைவிட மிகவும் நெருக்கடியில், கிட்டத்தட்ட பூஜ்யத்திலிருந்த விக்ராந்துக்கு தன் சொந்தப் படமான பாண்டிய நாட்டில் சிறு வேடம் கொடுத்தார். அதன் விளைவு இன்று விக்ராந்துக்கு நல்ல பெயர். அத்துடன் நிற்கவில்லை விஷால். தன் சொந்தப் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தில் முழு ஹீரோவாக விக்ராந்தையே நடிக்க வைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார். இத்தனையும் சேர்த்து விக்ராந்தை நெக்குருக வைத்துவிட்டது. உங்க சொந்த அண்ணன் இளையதளபதி செய்யாததை, இந்த அண்ணன் விஷால் செய்திருப்பது குறித்து? என கேட்டபோது, "நான் உண்மையிலேயே சொல்றேன். விஷால் என்னை ஹீரோவா வெச்சு படம் பண்றார்ங்கிறதுக்காக சொல்லல. நானும் விஷாலும் 12 வருஷமா ப்ரெண்ட்டா இருக்கோம். என்னோட அப்பா, அம்மா, என்னோட மனைவி, குழந்தைக்கப்புறம் அவனுக்குத்தான் எனக்கு ஏதாவது செய்யணும்னு தோணிருக்கு. அதனால தான் என்னை வெச்சி படம் பண்றேன்னு சொல்றாப்ல. மத்தபடி ‘இளையதளபதி' அது இதெல்லாம் சும்மா... அதையெல்லாம் பேச விரும்பல," என்றார்.09 நவம்பர் 2013
தமன்னாவுக்கு ஈடு கொடுக்க முடியாத கதாநாயகர்கள்!
![]() |
| தமன்னா |
29 அக்டோபர் 2013
நிசாவுக்குத்தான் திருமணம்!
என் தங்கை நிஷாவுக்குத்தான் உடனடியாக திருமணம் செய்யப் போகிறோம். எனக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால்.நடிகை காஜல்அகர்வால் புதிய படங்களில் நடிக்க மறுப்பதாகவும், சினிமாவை விட்டு விலகுவதாகவும் தெலுங்கு திரையுலகில் கடந்த வாரம் பரபரப்பு பேச்சு நிலவியது.இந்த பேச்சு, ஹாட் நியூஸாக தெலுங்கு மீடியாவில் வலம் வந்தது.அதற்கேற்ப, காஜலும் சில தினங்களாக மவுனம் காத்தார்.தமிழில் ஜில்லா என்ற படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. தெலுங்கில் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.இந்த நிலையில் இன்று தன் திருமண செய்தி, படங்களில் நடிக்காதது பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறியுள்ளார் அவரது செய்தித் தொடர்பாளர்.அதில், "காஜல்அகர்வால் உடனடியாக திருமணம் செய்து கொள்ள மாட்டார். தங்கை நிஷா அகர்வாலுக்குதான் இப்போது திருமணம் நடக்கிறது.அந்த திருமண வேலைகளில் காஜல்அகர்வால் பிஸியாக இருக்கிறார்.இப்போது ஜில்லாவில் நடித்து வரும் காஜல்,அடுத்து இரு தெலுங்குப் படங்களுக்கும் ஒரு புதிய தமிழ்ப் படத்துக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார். தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பார்.மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் காஜல் அகர்வால் திருமணம் நடக்கும். இப்போதைக்கு திருமணம் பற்றிய எண்ணமில்லை அவருக்கு,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 அக்டோபர் 2013
அஞ்சலி நடிக்கிறார்!
அஞ்சலி எங்கே இருக்கார்? என்ன பண்றார்? என்பது புரியாத புதிர். ஆனாலும் அக்கட பூமியில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார் அஞ்சலி.சீனியர் ஹீரோ வெங்கடேஷூக்கு ஜோடி என்றாலும் அஞ்சலி ஓ.கே சொல்லத் தயங்குவதில்லை.
தெலுங்கில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் நடித்த படம் தான் 'சீதம்மா வாகிட்லோ சிறுமல்லே செட்டு'.
மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சமந்தா நடித்தார். அப்போது, அஞ்சலி வெங்கடேஷூக்கு ஜோடியாக நடித்தார்.
மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்? என்று அஞ்சலியைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தனர்.
அதற்கெல்லாம் அசராமல் பதில் சொன்னதால் தான், இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அஞ்சலிக்குக் கிடைத்திருக்கிறது.
இந்தியில் அபிஷேக் பச்சன், அஜய் நடிதத 'போல் பச்சான்' படம் தெலுங்கில் 'மசாலா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் வெங்கடேஷூக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.
இப்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல், டோலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் அஞ்சலி.
18 அக்டோபர் 2013
மீண்டும் கைதானார் பவர் ஸ்டார்!
பவர் ஸ்டார் அடைமொழியுடன் திரியும் நடிகர் சீனிவாசன் மீது இதுவரை ஆறு மோசடி வழக்குகள் உள்ளன. ஏழாவதாக, டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு 50 கோடி கடன் வாங்கித் தருவதாகக்கூறி பணம் மோசடி செய்த வழக்கில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
அந்த வழக்கில் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் நேற்று மீண்டும் படாவதி ஸ்டார் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே இவர் மீது சிவகாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கார் நம்பர் பிளேட்டுக்கும், கார் ஆவணத்தில் இருந்த நம்பருக்கும் வித்தியாசம் இருந்ததால் இந்த வழக்கு சீனிவாசன் மீது போடப்பட்டது. அந்த வழக்கில் சீனிவாசன் ஜாமின் வாங்கியிருந்தார். அது காலாவதியானதைத் தொடர்ந்து நேற்று சென்னை வந்த சிவகாசி போலீஸார் அவரை கைது செய்தனர்.
திஹார் மீண்ட நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் சீனிவாசன். சிவகாசி போலீஸாரின் நடவடிக்கையால் சீனிவாசனின் சினிமா முயற்சி மீண்டும் பெவிலியன் திரும்பியிருக்கிறது.15 அக்டோபர் 2013
சிம்புவுக்கு சரியான ஜோடி!
சிம்புவுக்கு சரியான ஜோடி ஆன்ட்ரியாதான் என்று கூறியுள்ளார் விடிவி கணேஷ். 'விண்ணைத் தாண்டி வருவாயா ' படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியை கேட்டுப் பிரபலமானவர் கணேஷ். அந்த படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ' இங்க என்ன சொல்லுது' படம் வரை தொடர்ந்து, சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்த படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து வருகிறது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான கணேஷ் எண்ணத்துக்கு ஏற்ப தேர்வு நடந்தது . இறுதியில்சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா தேர்ந்து எடுக்கபட்டார். இந்த ஜோடி தேர்வை பற்றி கணேஷ் கூறும் போது, 'சிம்புவும் ஆண்ட்ரியாவும் மிக சரியான ஜோடி. என் கணிப்பில், என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது . ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவே பிடிக்கும் . இந்த கதாபாத்திரமும் அவர்களுக்கெனவே படைத்தது போலவே பொருத்தமாக இருக்கிறது . படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தது , இறுதிகட்ட பணிகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது .இந்த மாத இறுதியில் படத்தை முடித்து பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன்," என்கிறார் . இங்க என்ன சொல்லுது படத்தை வின்சென்ட் செல்வா இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். மீரா ஜாஸ்மின், சொர்ணமால்யா, சந்தானம், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
25 செப்டம்பர் 2013
குடியில் மூழ்கும் திரிஷா!
‘த்ரிஷா குடிக்கிறதை நிறுத்தவே மாட்டாரா?’இப்படித்தான் ஆரம்பிக்கிறது த்ரிஷா பற்றி ஒரு தெலுங்கு மீடியா வெளியிட்டுள்ள செய்தி. என்ன நடந்தது? சமீபத்தில் ஹைதராபாதின் தாஜ் பஞ்சாரா ஹோட்டலில் நடந்த இரவு விருந்துக்குப் போயிருக்கிறார் நடிகை த்ரிஷா. அவருடன் நடிகை சங்கீதாவும் மகேஸ்வரியும் போயிருக்கிறார்கள். உடன் வந்தவர்கள் கொஞ்சம் லைட்டான சரக்கில் இறங்கி, த்ரிஷா மட்டும் செம ஹாட்டில் இறங்கி, போதையின் உச்சத்துக்குப் போய் ஆட்டம் போட்டிருக்கிறார்.
அங்கிருந்தவர்களுடன் தகராறு, கலாட்டா என விவகாரம் எல்லை மீற, ஓட்டல் சிப்பந்திகள் வலுக்கட்டாயமாக த்ரிஷாவை வெளியேற்றினார்களாம். த்ரிஷா – நள்ளிரவு மது விருந்துகள் – கலாட்டா என்பது வாசகர்களுக்குப் புதிய விஷயமும் இல்லை. கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆரம்பித்த த்ரிஷாவின் போதை கலாட்டா வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என எங்கே போனாலும் தொடர்கிறது. பார்க் ஷெராட்டன் ஓட்டலில் முற்றாக நினைவிழந்த த்ரிஷாவை போலீசார் காரில் அழைத்துவந்து விட்டதாக முன்பு ஒரு செய்தி வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.21 செப்டம்பர் 2013
ஆபாசமாக வந்து நின்ற சமீரா ரெட்டி!
17 செப்டம்பர் 2013
நழுவியது பிரபல நடிகையின் உடை!
சமீபத்தில் துபாயில் நடந்த சிமா விருது வழங்கும் விழாவில் பிரபல கன்னட நடிகை ராகினி திவிவேதியின் உடை திடீரென நழுவியது. இதில் நடிகையை விட பார்வையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். துபாயில் நடந்த இந்த விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில், ஒரு கலவை பாடலுக்கு மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி. அப்போது திடீரென அவரது ஸ்கர்ட் நழுவி, உள்ளாடை தெரிய, ரசிகர்கள் அதிர்ந்தனர். ஆனால் இது எதுவுமே தெரியாமல் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி. இதைப் பார்த்த நடிகையும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு, மேடைக்கு ஓடினார். விளக்குகளை அணைக்கச் சொன்ன அவர், ராகினியை உள்ளே அழைத்துப் போய் உடையைத் திருத்தினார். பின்னர் மீண்டும் மேடைக்கு வந்து மிச்சத்தையும் ஆடிவிட்டுச் சென்றார் ராகினி. இந்த விழாவில் அவருக்கு சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது கிடைத்தது (கன்னடப் படம் சிவாவில் நடித்ததற்காக). தனது உடை நழுவியது குறித்து கருத்து தெரிவித்த அவர், "எதுவோ தப்பா இருக்கேன்னு நினைச்சிக்கிட்டேதான் டான்ஸ் பண்ணேன். நல்ல வேளை விளக்குகளை அணைச்சிட்டாங்க. ஒரு விபத்துதான். அதை நான் மறக்க விரும்புகிறேன்," என்றார்.
14 செப்டம்பர் 2013
ஆன்ட்ரியாவுடன் சேர்ந்த அனிருத்?
08 செப்டம்பர் 2013
கேயார் வெற்றி, தாணு தோல்வி!
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் இயக்குநர் கேயார் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தயாரிப்பாளர் தாணு தோல்வியடைந்தார். 2013-2015ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட சங்கத் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், குஷ்பு என பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாக்களித்தனர். தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு மாலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குநர் கேயார் 449 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட கலைப்புலி தாணு 252 வாக்குகளும் பெற்றனர். இதனால் கேயார் வெற்றி பெற்றார். இரு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுபாஷ் சந்திரபோஷ் 407 வாக்குகளுடனும், டி.ஜி.தியாகராஜன் 358 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர். இரு செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா 414, டி.சிவா 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இப்பதவிக்குப் போட்டியிட்ட சிவசக்திபாண்டியன் 280 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டதில் எஸ்.தாணு அணியைச் சேர்ந்த ராதாரவி, கருணாஸ் ஆகிய இருவர் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக போட்டியிட்ட கோவைத்தம்பி வெற்றி பெற்றார். மொத்தத்தில் கேயார் அணியினரே பெரும் வெற்றியைப் பெற்றனர்.14 ஆகஸ்ட் 2013
பி.சுசீலாவுக்கு பாராட்டு விழா!
தூத்துக்குடியில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. காந்திய சேவா மன்ற நிறுவனர் என்.வீ.ரஜேந்திரபூபதி பாடகி சுசீலாவுக்கு தங்க சங்கிலி பரிசளித்தார். விழாவில் பாடகி சுசீலா, மக்களின் மனம் கவர்ந்த பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து ரசிகர்களிடையே பேசிய அவர்,
கடலின் ஆழத்தை தெரிந்து விடலாம். ஆனால் இசையின் ஆழம் தெரியாது. அலைகள் ஓய்வது இல்லை. அதே போன்று பாடல்களும் ஓய்வது இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாடல்களாக இருந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
தூத்துக்குடி மக்கள் டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவித்தீர்கள். கடவுளின் அனுகிரகத்தால் நான் இங்கு வந்து உள்ளேன். நான் முதன் முதலில் ‘எதுக்கு அழைத்தாய், ஊதல் ஊதி ஜாடை காட்டி..’ என்ற பாடல் மூலம் பாடகியானேன்.
அதன்பிறகு என்னை மிகவும் பிரபலம் அடைய செய்த பாடல்கள் பல உண்டு. குறிப்பாக, பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் உள்ள செல்வமன்றோ.., உன்னை கண்தேடுதே... அன்பில் மலர்ந்த நல் ரோஜா என்னும் தாலாட்டு பாடல்கள் என்னை பிரபலப்படுத்தின.
மேலும் மயங்குகிறாள் ஒரு மாது... கங்கைக்கரை தோட்டம், அன்புள்ள அத்தான், அவள் என்னைத்தான், உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன், 16 வயதினிலே, கண்ணுக்கு மையழகு போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் என்னை மிகவும் பிரபலப்படுத்தியது. எல்லோரும் இசைக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் நாங்கள் ஒரு கருவிதான் என்றார்.
விழாவின்போது அவருக்கு மலர் கிரீடம் அணிவித்து, அவரது அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, திரைப்படங்களில் பி. சுசீலா பாடிய பாடல்களை அவரது மருமகள் சந்தியா, மருத்துவர் பிரேம சந்திரன் உள்ளிட்ட பாடகர்கள் மேடையில் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். பின்னர், விழா மலர் வெளியிடப்பட்டது. வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் செங்குட்டுவன், தொழிலதிபர்கள் விநாயகமூர்த்தி, டி.ஏ. தெய்வநாயகம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துணைப் பொது மேலாளர் கிருஷ்ணகுமார், காந்திய சேவா மன்ற நிர்வாகிகள் பரமசிவன், ராஜேந்திரபூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
02 ஆகஸ்ட் 2013
இயக்குனர் சேரனுக்கு இப்படி ஒரு மகள்!
தன்னை தன் காதலனிடம் இருந்து பிரிக்கவும், காதலனை கொலை செய்யவும் தனது தந்தை முயற்சி செய்வதாக இயக்குனர் சேரனின் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் வல்லவர் சேரன். அவரது மனைவி செல்வராணி. அவர்களுக்கு நிவேதா மற்றும் தாமினி(20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சேரன் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேரனின் 2வது மகள் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் இன்று காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். தனது தந்தை தன்னையும், தனது காதலன் சந்துருவையும் பிரிக்க முயற்சிப்பதாக புகார் அளித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சூளைமேட்டைச் சேர்ந்த சந்துரு என்பவரை நான் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். அவர் சினிமாவில் உதவி இயக்குனராகவும், டான்சராகவும் உள்ளார். சினிமா விழா ஒன்றுக்கு என் தந்தையுடன் சென்றபோது தான் சந்துரு அறிமுகமானார். பிறகு நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம். எங்கள் காதல் பற்றி என் தந்தைக்கு தெரிய வந்தது.முதலில் அவர் எங்கள் காதலை எதிர்க்கவில்லை. படிப்பு முடிந்த பிறகு நீ சந்துருவையே திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். ஆனால் கடந்த 2 மாதங்களாக எங்கள் வீட்டில் என் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என் தந்தையும், அவருக்கு நெருக்கமான திரைத்துறையினரும் சேர்ந்து சந்துருவை மறந்துவிடும்படி என்னை மிரட்டி வருகின்றனர். சந்துருவை கொலை செய்ய பல முறை முயற்சி நடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது என் தந்தை வெள்ளைத்தாளில் என்னிடம் கையெழுத்து வாங்கினார். எங்கள் காதலை பிரித்து சந்துருவை கொன்றுவிடுவதாக அவர் மிரட்டுகிறார். என்னை வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு வந்து சந்துருவின் வீட்டில் தஞ்சம் அடைந்தேன். என் தந்தை எங்கள் காதலை பிரிக்க முயற்சிக்கிறார் என்று சந்துருவின் தாய் மற்றும் அக்காவிடம் கூறினேன். அவர்களுடன் வந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். என்னை என் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.24 ஜூலை 2013
மஞ்சுளாவுக்கு கண்ணீர் அஞ்சலி!
மஞ்சுளாவின் திடீர் மரணம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகமே திரண்டு வந்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
ரஜினிகாந்த் மஞ்சுளாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.அவரைப் பார்த்ததும் கதறி அழுதபடி ரஜினியை விஜயகுமார் கட்டிக் கொண்டார். அதேபோல் சரத்குமார் வந்த போதும் விஜயகுமாரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
பாக்யராஜ்,பூர்ணிமா பாக்யராஜ்,சாந்தனு,சினேகா,பிரசன்னா,லட்சுமி,ராதிகா சரத்குமார்,தேவி ஸ்ரீ பிரசாத்,ஹாரிஸ் ஜெயராஜ்,கவுண்டமணி, பாண்டியராஜன்,ராதாரவி,ஒய்.ஜி.மகேந்திரன்,ஜாக்குவார் தங்கம்,மீனா,ரம்யா கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் மஞ்சுளாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
01 ஜூன் 2013
பார்வதி பிடிவாதம் தளர்ந்தது!
காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த பார்வதியின் பிடிவாதம் உடைந்தது. சசி இயக்கத்தில் ‘பூ’ படத்தில் அறிமுகமானவர் பார்வதி. இப்படத்துக்கு பிறகு நிறைய தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்கவில்லை. அதன்பிறகு ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் மட்டும் நடித்தார். கவர்ச்சியாகவோ, நெருக்கமான காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்று கூறி பல படங்களை ஒதுக்கி வந்தார். இந்நிலையில், பரத்பாலா இயக்கும் ‘மரியான்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் தனுஷுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்திருக்கிறாராம். இதையடுத்து அவரது பிடிவாதம் உடைந்துவிட்டதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது. தனுஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது கூச்சமாகவே இருந்தது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ‘‘காதல் கதைகள் என்றால் எனக்கு அலர்ஜி. ‘மரியான்’ படம் ரிலீஸ் ஆன பிறகு காதல் கதைகள் எனக்கு வெள்ளமென திரண்டு வரும். ஆனாலும் அவற்றை நான் ஏற்கப் போவதில்லை. நல்ல கதாபாத்திரத்துக்காக எப்போதும்போல காத்திருப்பேன்’’ என்றார்.09 மே 2013
மேலங்கி இல்லாத பூஜா காந்தி!
‘கரிமேடு’ படத்தில் பூஜா காந்தி கொள்ளை கும்பலின் அழகியாக,மேலங்கி அணியாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
உண்மை சம்பவம்,பெங்களூர் அருகே தண்டுபாளையம் என்ற இடத்தில் தொடர்ந்து நடைபெற்ற 91 கற்பழிப்புகள், 106 கொலைகள், 203 கொள்ளைகளை மையமாக வைத்து, ‘கரிமேடு’ என்ற படம் தயாராகி இருக்கிறது.அக்கிரமங்கள் செய்த மனித மிருகங்களை, காவல் துறையினர் உயிரை பணயம் வைத்து, கடமை உணர்வுடன் எப்படி வேட்டையாடினார்கள்? என்பதை இந்த படத்தில் உணர்வுப்பூர்வமாக படமாக்கி இருக்கிறார்கள்.
இந்த படத்தில் பூஜா காந்தி கொள்ளை கும்பலின் அழகியாக மேலங்கி அணியாமல் துணிச்சலாக நடித்து, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். படத்தில் அவர், பீடியை பற்ற வைத்து புகைப்பது போன்ற காட்சியும் வருகிறது.
பூஜா காந்தி ‘கொக்கி,’ ‘திருவண்ணாமலை’ ஆகிய படங்களில் நடித்தவர்.
இந்த படத்தை சீனிவாசராஜு டைரக்டு செய்து இருக்கிறார். அருந்ததி, காஞ்சனா, கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆகிய படங்களை வெளியிட்ட ராம.நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.
இந்த படத்தை பற்றி ராம.நாராயணன் கூறியதாவது:–
‘‘வீடுகளில் குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளே புகும் ஒரு கும்பல் பெண்களை கற்பழித்து, கொள்ளையில் ஈடுபடுவதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தை பார்த்து அதிர்ந்து போனேன். விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறார்கள். கொலை கும்பலில் உள்ள ஒரு பெண்ணாக பூஜா காந்தி நடித்து இருக்கிறார். படத்தில் அவர் ஜாக்கெட் அணியாமல் நடித்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசின் விருது கிடைத்து இருக்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மத்தியில் இந்த படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.’’ இவ்வாறு ராம.நாராயணன் கூறினார்.
‘‘வீடுகளில் குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளே புகும் ஒரு கும்பல் பெண்களை கற்பழித்து, கொள்ளையில் ஈடுபடுவதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தை பார்த்து அதிர்ந்து போனேன். விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறார்கள். கொலை கும்பலில் உள்ள ஒரு பெண்ணாக பூஜா காந்தி நடித்து இருக்கிறார். படத்தில் அவர் ஜாக்கெட் அணியாமல் நடித்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசின் விருது கிடைத்து இருக்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மத்தியில் இந்த படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.’’ இவ்வாறு ராம.நாராயணன் கூறினார்.
06 மே 2013
முத்தத்திற்கு அஞ்சமாட்டேன்!
சினிமாவில் முத்தக் காட்சியில் நடிக்க மகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார் நடிகர் அர்ஜூன்.
பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா நாயகியாக அறிமுகமாகிறார். இதில் அவர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். பூபதி பாண்டியன் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். 'நாடோடிகள்' படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். சினிமா என்றாலே முத்தக் காட்சிகள் இருக்குமே, அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பீர்களா..? என ஐஸ்வர்யாவை கேட்டால் உடனே நடிப்பேன் என்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது : “என் அப்பா என்னை மிகவும் தைரியமான பெண்ணாகத்தான் வளர்த்திருக்கிறார். சினிமாவுக்கு நடிக்க வந்த பிறகு இந்தக்காட்சிகளில் மட்டும் தான் நடிப்பேன், அந்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது, ஒரு படத்தின் திரைக்கதைப்படி காட்சிக்கு மிகவும் முக்கியம் என்றால் முத்தக்காட்சியில் நடிக்கவும் கூட முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்” என்றார்.
27 ஏப்ரல் 2013
பேசிக்கொண்டேயிருக்கும் அபிநயா!
![]() |
| அபினயா |
26 ஏப்ரல் 2013
ஷ்ரேயாவால் கலங்கும் நடிகர்!
![]() |
| ஸ்ரேயா |
23 ஏப்ரல் 2013
திமிர் பிடித்த அழகி நித்யாமேனன்!
![]() |
| நித்தியா மேனன் |
21 ஏப்ரல் 2013
உள்ளூர் மாப்பிளைதான் வேணும்-த்ரிஷா
![]() |
| திரிஷா |
14 ஏப்ரல் 2013
என் வாழ்க்கை என் கையில்-அஞ்சலி
‘‘இனி என் வாழ்க்கை என் கையில் தான். திங்கட்கிழமை முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்’’ என்று நடிகை அஞ்சலி கூறினார்.
பரபரப்பு:
சென்னை வளசரவாக்கத்தில் சித்தி பாரதிதேவி குடும்பத்தினருடன் வசித்து வந்த நடிகை அஞ்சலி, கடந்த 8–ந்தேதி திடீரென்று வீட்டைவிட்டு வெளியேறினார். ஐதராபாத்தில் இருந்தபடி போன் மூலம் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ‘நான் இதுவரை அம்மா என்று அழைத்து வந்த பாரதிதேவி, என்னை பெற்ற அம்மா அல்ல. என் அம்மாவின் தங்கை. அவரும், டைரக்டர் களஞ்சியமும் சேர்ந்து, என்னை கொடுமைப்படுத்தினார்கள். அவர்களால், என் உயிருக்கு ஆபத்து இருந்ததால், வீட்டைவிட்டு வெளியேறினேன்’ என்று அவர் கூறினார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் சித்தாப்பாவுடன் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அஞ்சலி அங்கிருந்தும் திடீரென்று மாயமானார். அவர் எங்கே இருக்கிறார், என்ன ஆனார்? என்பதும் மர்மமாக இருந்தது. காணாமல் போன அஞ்சலியை கண்டுபிடித்து தரும்படி அவருடைய சித்தி பாரதிதேவி, போலீசில் புகார் செய்தார். ஐகோர்ட்டிலும் ஒரு மனுதாக்கல் செய்தார்.
படப்பிடிப்பு:
அஞ்சலி ஏற்கனவே நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு, அவர் வராததால் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக படஅதிபர் சுரேஷ் ஐதராபாத் போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில், 2 நாட்களில் நான் போலீசார் முன்பு ஆஜராவேன் என்று அஞ்சலி கூறியிருந்தார். அதன்படி அவர், நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.
வாக்குமூலம்:
போலீஸ் கமிஷனரிடம், அஞ்சலி, ‘நான் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. மன அழுத்தத்தை குறைப்பதற்காகத்தான் வீட்டை விட்டு வெளியேறினேன். ஐதராபாத் அருகில் உள்ள என் தோழியின் சொந்த ஊரில் சில நாட்கள் தங்கியிருந்தேன்’ என்று அவர் வாக்குமூலம் அளித்தார். இந்த சூழ்நிலையில், நடிகை அஞ்சலிக்கு, படஅதிபர் சுரேஷ் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார். ‘இந்த படம் முடியும் வரை குடும்ப பிரச்சினைகளையும், சண்டைகளையும் தள்ளி வைத்துவிடு. படத்தை முடித்துக்கொடுக்கும் வரை எங்கள் அனுமதியில்லாமல் வெளியூர் செல்லக்கூடாது’ என்று நிபந்தனைகள் விதித்ததை தொடர்ந்து, அஞ்சலி ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார். அந்த ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. நாளை (திங்கட்கிழமை) அவர் சென்னை வந்து கோர்ட்டில் ஆஜராவார் என்று தெரிகிறது. இந்த நிலையில், தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில் நடிகை அஞ்சலி நேற்று தெலுங்கு டெலிவிஷன் சேனல்களுக்கு வீடியோ கேசட் அனுப்பி வைத்தார். டெலிவிஷனில் ஒளிபரப்பான அந்த வீடியோ கேசட்டில் அவர் கூறி இருப்பதாவது:–
மன்னிப்பு:
கடந்த சில நாட்களாக என் வாழ்க்கையில் எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்து விட்டன. அவை இப்போது முடிந்து விட்டன. அந்த சம்பவங்களால் என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்–நடிகைகள் ஆகியோர் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிரமத்தை கொடுத்ததற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் எழுந்த சர்ச்சைகளுக்காக மன்னிப்பு கோருகிறேன். என்னால் இனி யாருக்கும் எந்த கஷ்டமும் வராது. இக்கட்டான சமயத்தில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஊடகங்களுக்கும், ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய ஒத்துழைப்பும், ஆதரவும் எனக்கு எப்போதும் தேவை. என்னால் எனது குடும்பத்தினரும் வேதனைப்பட்டு உள்ளனர். அதற்காக வருந்துகிறேன்.
என் வாழ்க்கை என் கையில்:
இனி நான் சினிமா தொழிலில் முழு கவனம் செலுத்துவேன். இனி என் சினிமா வாழ்க்கையும், சொந்த வாழ்க்கையும் என் கையில்தான். அவற்றை நானே கவனித்துக் கொள்வேன். ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஓய்வு எடுத்துக்கொண்டு, திங்கட்கிழமை (நாளை) முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். புனேயில் திங்கட்கிழமை நடைபெறும் ‘போல் பச்சன் போல்’ இந்தி படத்தின் தெலுங்கு ‘ரீமேக்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். ‘பலுப்பு’ தெலுங்கு படத்தையும் விரைவில் முடித்துக்கொடுத்து விடுவேன். இவ்வாறு நடிகை அஞ்சலி கூறினார்.
பரபரப்பு:
சென்னை வளசரவாக்கத்தில் சித்தி பாரதிதேவி குடும்பத்தினருடன் வசித்து வந்த நடிகை அஞ்சலி, கடந்த 8–ந்தேதி திடீரென்று வீட்டைவிட்டு வெளியேறினார். ஐதராபாத்தில் இருந்தபடி போன் மூலம் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ‘நான் இதுவரை அம்மா என்று அழைத்து வந்த பாரதிதேவி, என்னை பெற்ற அம்மா அல்ல. என் அம்மாவின் தங்கை. அவரும், டைரக்டர் களஞ்சியமும் சேர்ந்து, என்னை கொடுமைப்படுத்தினார்கள். அவர்களால், என் உயிருக்கு ஆபத்து இருந்ததால், வீட்டைவிட்டு வெளியேறினேன்’ என்று அவர் கூறினார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் சித்தாப்பாவுடன் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அஞ்சலி அங்கிருந்தும் திடீரென்று மாயமானார். அவர் எங்கே இருக்கிறார், என்ன ஆனார்? என்பதும் மர்மமாக இருந்தது. காணாமல் போன அஞ்சலியை கண்டுபிடித்து தரும்படி அவருடைய சித்தி பாரதிதேவி, போலீசில் புகார் செய்தார். ஐகோர்ட்டிலும் ஒரு மனுதாக்கல் செய்தார்.
படப்பிடிப்பு:
அஞ்சலி ஏற்கனவே நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு, அவர் வராததால் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக படஅதிபர் சுரேஷ் ஐதராபாத் போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில், 2 நாட்களில் நான் போலீசார் முன்பு ஆஜராவேன் என்று அஞ்சலி கூறியிருந்தார். அதன்படி அவர், நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.
வாக்குமூலம்:
போலீஸ் கமிஷனரிடம், அஞ்சலி, ‘நான் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. மன அழுத்தத்தை குறைப்பதற்காகத்தான் வீட்டை விட்டு வெளியேறினேன். ஐதராபாத் அருகில் உள்ள என் தோழியின் சொந்த ஊரில் சில நாட்கள் தங்கியிருந்தேன்’ என்று அவர் வாக்குமூலம் அளித்தார். இந்த சூழ்நிலையில், நடிகை அஞ்சலிக்கு, படஅதிபர் சுரேஷ் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார். ‘இந்த படம் முடியும் வரை குடும்ப பிரச்சினைகளையும், சண்டைகளையும் தள்ளி வைத்துவிடு. படத்தை முடித்துக்கொடுக்கும் வரை எங்கள் அனுமதியில்லாமல் வெளியூர் செல்லக்கூடாது’ என்று நிபந்தனைகள் விதித்ததை தொடர்ந்து, அஞ்சலி ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார். அந்த ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. நாளை (திங்கட்கிழமை) அவர் சென்னை வந்து கோர்ட்டில் ஆஜராவார் என்று தெரிகிறது. இந்த நிலையில், தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில் நடிகை அஞ்சலி நேற்று தெலுங்கு டெலிவிஷன் சேனல்களுக்கு வீடியோ கேசட் அனுப்பி வைத்தார். டெலிவிஷனில் ஒளிபரப்பான அந்த வீடியோ கேசட்டில் அவர் கூறி இருப்பதாவது:–
மன்னிப்பு:
கடந்த சில நாட்களாக என் வாழ்க்கையில் எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்து விட்டன. அவை இப்போது முடிந்து விட்டன. அந்த சம்பவங்களால் என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்–நடிகைகள் ஆகியோர் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிரமத்தை கொடுத்ததற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் எழுந்த சர்ச்சைகளுக்காக மன்னிப்பு கோருகிறேன். என்னால் இனி யாருக்கும் எந்த கஷ்டமும் வராது. இக்கட்டான சமயத்தில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஊடகங்களுக்கும், ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய ஒத்துழைப்பும், ஆதரவும் எனக்கு எப்போதும் தேவை. என்னால் எனது குடும்பத்தினரும் வேதனைப்பட்டு உள்ளனர். அதற்காக வருந்துகிறேன்.
என் வாழ்க்கை என் கையில்:
இனி நான் சினிமா தொழிலில் முழு கவனம் செலுத்துவேன். இனி என் சினிமா வாழ்க்கையும், சொந்த வாழ்க்கையும் என் கையில்தான். அவற்றை நானே கவனித்துக் கொள்வேன். ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஓய்வு எடுத்துக்கொண்டு, திங்கட்கிழமை (நாளை) முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். புனேயில் திங்கட்கிழமை நடைபெறும் ‘போல் பச்சன் போல்’ இந்தி படத்தின் தெலுங்கு ‘ரீமேக்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். ‘பலுப்பு’ தெலுங்கு படத்தையும் விரைவில் முடித்துக்கொடுத்து விடுவேன். இவ்வாறு நடிகை அஞ்சலி கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













.jpg)
.jpg)

