காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த பார்வதியின் பிடிவாதம் உடைந்தது. சசி இயக்கத்தில் ‘பூ’ படத்தில் அறிமுகமானவர் பார்வதி. இப்படத்துக்கு பிறகு நிறைய தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்கவில்லை. அதன்பிறகு ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் மட்டும் நடித்தார். கவர்ச்சியாகவோ, நெருக்கமான காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்று கூறி பல படங்களை ஒதுக்கி வந்தார். இந்நிலையில், பரத்பாலா இயக்கும் ‘மரியான்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் தனுஷுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்திருக்கிறாராம். இதையடுத்து அவரது பிடிவாதம் உடைந்துவிட்டதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது. தனுஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது கூச்சமாகவே இருந்தது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ‘‘காதல் கதைகள் என்றால் எனக்கு அலர்ஜி. ‘மரியான்’ படம் ரிலீஸ் ஆன பிறகு காதல் கதைகள் எனக்கு வெள்ளமென திரண்டு வரும். ஆனாலும் அவற்றை நான் ஏற்கப் போவதில்லை. நல்ல கதாபாத்திரத்துக்காக எப்போதும்போல காத்திருப்பேன்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக