பக்கங்கள்

08 செப்டம்பர் 2013

கேயார் வெற்றி, தாணு தோல்வி!

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. கேயார் வெற்றி, தாணு தோல்விதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் இயக்குநர் கேயார் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தயாரிப்பாளர் தாணு தோல்வியடைந்தார். 2013-2015ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட சங்கத் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், குஷ்பு என பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாக்களித்தனர். தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு மாலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குநர் கேயார் 449 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட கலைப்புலி தாணு 252 வாக்குகளும் பெற்றனர். இதனால் கேயார் வெற்றி பெற்றார். இரு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுபாஷ் சந்திரபோஷ் 407 வாக்குகளுடனும், டி.ஜி.தியாகராஜன் 358 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர். இரு செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா 414, டி.சிவா 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இப்பதவிக்குப் போட்டியிட்ட சிவசக்திபாண்டியன் 280 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டதில் எஸ்.தாணு அணியைச் சேர்ந்த ராதாரவி, கருணாஸ் ஆகிய இருவர் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக போட்டியிட்ட கோவைத்தம்பி வெற்றி பெற்றார். மொத்தத்தில் கேயார் அணியினரே பெரும் வெற்றியைப் பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக