பக்கங்கள்

15 அக்டோபர் 2013

சிம்புவுக்கு சரியான ஜோடி!

சிம்புவுக்கு சரியான ஜோடி ஆன்ட்ரியாதான் என்று கூறியுள்ளார் விடிவி கணேஷ். 'விண்ணைத் தாண்டி வருவாயா ' படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியை கேட்டுப் பிரபலமானவர் கணேஷ். அந்த படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ' இங்க என்ன சொல்லுது' படம் வரை தொடர்ந்து, சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்த படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து வருகிறது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான கணேஷ் எண்ணத்துக்கு ஏற்ப தேர்வு நடந்தது . இறுதியில்சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா தேர்ந்து எடுக்கபட்டார். இந்த ஜோடி தேர்வை பற்றி கணேஷ் கூறும் போது, 'சிம்புவும் ஆண்ட்ரியாவும் மிக சரியான ஜோடி. என் கணிப்பில், என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது . ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவே பிடிக்கும் . இந்த கதாபாத்திரமும் அவர்களுக்கெனவே படைத்தது போலவே பொருத்தமாக இருக்கிறது . படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தது , இறுதிகட்ட பணிகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது .இந்த மாத இறுதியில் படத்தை முடித்து பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன்," என்கிறார் . இங்க என்ன சொல்லுது படத்தை வின்சென்ட் செல்வா இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். மீரா ஜாஸ்மின், சொர்ணமால்யா, சந்தானம், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக