பக்கங்கள்

18 அக்டோபர் 2013

மீண்டும் கைதானார் பவர் ஸ்டார்!

பவர் ஸ்டார் அடைமொழியுடன் திரியும் நடிகர் சீனிவாசன் மீது இதுவரை ஆறு மோசடி வழக்குகள் உள்ளன. ஏழாவதாக, டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு 50 கோடி கடன் வாங்கித் தருவதாகக்கூறி பணம் மோசடி செய்த வழக்கில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அந்த வழக்கில் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் நேற்று மீண்டும் படாவதி ஸ்டார் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இவர் மீது சிவகாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கார் நம்பர் பிளேட்டுக்கும், கார் ஆவணத்தில் இருந்த நம்பருக்கும் வித்தியாசம் இருந்ததால் இந்த வழக்கு சீனிவாசன் மீது போடப்பட்டது. அந்த வழக்கில் சீனிவாசன் ஜாமின் வாங்கியிருந்தார். அது காலாவதியானதைத் தொடர்ந்து நேற்று சென்னை வந்த சிவகாசி போலீஸார் அவரை கைது செய்தனர். திஹார் மீண்ட நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் சீனிவாசன். சிவகாசி போலீஸாரின் நடவடிக்கையால் சீனிவாசனின் சினிமா முயற்சி மீண்டும் பெவிலியன் திரும்பியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக