பக்கங்கள்

28 ஜூன் 2011

புரட்டிப்போட்ட ஸ்ரேயா.

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகை ஸ்ரேயா. கடந்த வாரம், இடுப்புக் கீழே போட்டோ எடுக்கக் கூடாது என புகைப்படக்காரர்களைத் திட்டியதால் பரபரப்பாக செய்திகளில் இடம் பெற்றார்.
இந்த வாரம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மது குடித்தால் தப்பில்லை என்பதுபோல கருத்து சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில் 25 வயதுக்கு உட்பட்டோர் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
அவர்கள் மதுக்கடைகளில் மது வாங்கவும் அனுமதிக்கப்படவில்லை. இச்சட்டத்தை நடிகை ஸ்ரேயா விமர்சித்ததாக செய்திகள் வந்தன. 18 வயது உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஓட்டு போடவும் அனுமதி இருக்கிறது. ஆனால் மது அருந்த மட்டும் தடை போடுகிறார்கள் என்று ஸ்ரேயா கண்டித்ததாக கூறப்பட்டது.
ஸ்ரேயா கருத்துக்கு அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதை அறிந்த ஸ்ரேயா உடனே தனது கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டதாக, பழியை பத்திரிகைகள் மீது போட்டுள்ளார். மது குடிப்பதை ஆதரித்து நான் எந்த கருத்தும் சொல்லவே இல்லை. நான் சொல்லாத விஷயத்துக்கு என் மீது கண்டனம் தெரிவித்தால் என்ன அர்த்தம்?, என்று திருப்பிக் கேட்டுள்ளார் ஸ்ரேயா.

25 ஜூன் 2011

நானா அப்படிச்சொன்னேன்?ஐயோ!ஐயோ!

ஆர்வக் கோளாறில் அல்லது தங்களின் இயல்பான குணாதிசயம் காரணமாக திமிராகப் பேசிவிடுவதும், நிலைமை விபரீதமான பிறகு, 'நானா... எப்போ அப்படிச் சொன்னேன்' என்றை பிளேட்டைத் திருப்பிப் போடுவதும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நடிகைகளுக்கும் சாலப் பொருந்தும்!
சில தினங்களுக்கு முன் மும்பையில் ஒரு படவிழாவில், என்னை தென்னிந்திய நடிகை என்று சொல்லி கேவலப்படுத்த வேண்டாம். நான் பாலிவுட் நடிகை. அப்படிச் சொல்வதைத்தான் விரும்புகிறேன் என்று கூறியவர் காஜல் அகர்வால்.
இதனால் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா புள்ளிகளின் கடும் கண்டனத்துக்குள்ளானார். இனி அவரை வைத்து சினிமா எடுக்க வேண்டாம் என முன்னணி இயக்குநர்கள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலைமை கைமீறியுள்ளது. காஜல் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சக நடிகைகள் சிலரே கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், படப்பிடிப்புக்காக ஜெர்மனி போய் திரும்பி வந்துள்ள காஜலிடம் அதுகுறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த காஜல், "இதெல்லாம் சுத்தப் பொய். நான் அப்படிச் சொல்லவே இல்லை. நான் ஒரு மும்பைப் பெண். அதுதான் எனக்கு பெருமை. நான் ஒருபோதும் தென்னிந்திய நடிகையாகிவிட முடியாது, என்றுதான் சொல்லியிருந்தேன். அதை திரித்து எழுதிவிட்டார்கள்.
தென்னிந்திய படங்கள் மீது எனக்குப் பெரிய மதிப்பு உண்டு. கடந்த சில தினங்களாக நான் வெளிநாட்டில் இருந்தேன். அதற்குள் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் பரப்பி எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கி வைத்துள்ளனர்," என்றார்.

23 ஜூன் 2011

இடுப்புக்கு கீழே வேணாம்!

தம்மாத்தூண்டு டாப்ஸ்… எப்போது நழுவுமோ என பயப்பட வைத்த லூஸ் ஸ்கர்ட்… இதுதான் அந்த விழாவில் நடிகை ஸ்ரேயாவின் உடை.
சும்மா விடுவார்களா புகைப்படக்காரர்கள்… சுட்டுத் தள்ளினர் ஸ்ரேயாவை. நிகழ்ச்சியை சுத்தமாக மறந்துவிட்டு ஸ்ரேயாவையே சுற்றிச் சுற்றி வந்தனர்.
உடனே ஒரு போட்டோகிராபரை அழைத்த ஸ்ரேயா, அவர் எடுத்திருந்த படங்களைக் காட்டுமாறு கேட்டார். அவருடம் காட்ட, அவற்றில் தனது இடுப்பின் கீழ்ப்பகுதி வரை அப்பட்டமாகத் தெரிந்த படங்களையெல்லாம் அழிக்கச் சொன்னார்.
வேறு வழியின்றி அவரும் அழிக்க, “இனி டாப்ல மட்டும் எடுங்க, இடுப்புக்கீழே எல்லாம் எடுக்கக் கூடாது”, என கடுமையாகக் கூறினார்.
“நான் மட்டுமா எடுத்தேன்… எல்லாரும்தான் எடுத்திருக்காங்க. அப்படியே எடுக்கக் கூடாது என்றாலும், பொது நிகழ்ச்சிக்கு வரும் ஸ்ரேயா போன்றவர்கள் இந்த அளவு கவர்ச்சியாக வந்தால் என்ன செய்வது? நான் எடுக்காவிட்டாலும் மற்றவர்கள் எடுக்கத்தானே செய்வார்கள்,” என்றார் கோபமாக.
இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, ” எனக்கு கேமரா ப்ளாஷ் அலர்ஜி இருக்கிறது. அதனால்தான் கூப்பிட்டு சொன்னேன்,” என்றார்.
நாள் முழுக்க ஹெவி கேமரா ப்ளாஷில் இருப்பதுதான் ஸ்ரேயாவின் தொழிலே. அவரை இந்த சின்ன ஸ்டில் கேமரா ப்ளாஷ் பாதித்துவிட்டது என்றால்… என்ன சொல்றது போங்க!

20 ஜூன் 2011

எல்லை தாண்ட மாட்டேன்.

எதற்கும் ஒரு எல்லை உண்டு. கிளாமருக்கும் எல்லை உண்டு. அதைத் தாண்டி நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்கிறார் தமன்னா.
சில வாரங்களுக்கு முன்பு வரை தமன்னாதான் தமிழ் சினிமாவின் ஒய்யார நாயகியாக இருந்தார். அத்தனை ஹீரோக்களும் தமன்னாவுடன் ஜோடி போட அலை மோதிய காலம் அது.
ஆனால் இன்று தமன்னாவை பூதக் கண்ணாடி வைத்துத் தேட வேண்டியுள்ளது. காரணம், இப்போது அவர் தமிழில் அவ்வளவாக நடிப்பதில்லை. மாறாக தெலுங்கில் பிசியாகி விட்டார்.
இருப்பினும் தற்போது ஹரி இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக வேங்கை படத்தில் நடித்து வருகிறார் தமன்னா.
இதில் சாதாரண கல்லூரி மாணவியாக மகா எளிமையாக நடிக்கிறாராம் தமன்னா. ஏன் கிளாமர் பக்கம் போகவில்லையா என்று கேட்டால், எனக்கு கிளாமர் நடிப்பு, சாதா நடிப்பு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. நல்ல கதையா என்றுதான் பார்ப்பேன். கதை பிடித்திருந்தால் நடிப்பேன்.அது கிளாமருடன் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும்.
அதேசமயம், கிளாமர் காட்டுவதிலும் ஒரு எல்லை உண்டு. எல்லை கடந்தால் அது விரசமாகி விடும். அதற்கு எனது ஓட்டு எப்போதுமே கிடையாது. அதற்காக கிளாமரே கூடாது என்றெல்லாம் இல்லை.
இப்போது கூட பத்ரிநாத் என்ற படத்தில் கிளாமராகத்தான் நடித்திருக்கிறேன். அதேபோல 100பர்சன்ட் லவ் என்ற படத்திலும் கிளாமர் காட்டியுள்ளேன். எல்லாம் எல்லை கடக்காத அழகான கிளாமர்தான் என்று நீண்ட விளக்கமளித்து பெருமூச்சு விட்டார்.
சரி தமிழ் என்னாச்சு என்று கேட்டால், மறுபடியும் நீளமாக பேசினார் தமன்னா. அப்படியெல்லாம் கிடையாது. நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதை எனக்குப் பிடித்தாற் போல இல்லாததால் ஒப்புக் கொள்ளவில்லை. மற்றபடி தமிழை நான் புறக்கணிக்கவில்லை. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் மறுபடியும் நடிப்பேன் என்று கூறி நிறுத்தினார்.
கார்த்தி கல்யாணத்திற்குப் போவீங்களா தமன்னா...?

17 ஜூன் 2011

நிலாவை குழப்பிய குறுஞ்செய்தி.

என்னைப் பின் தொடர்ந்து, என்னைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து ஆபாசமாக மெயில் அனுப்பி என்னை டார்ச்சர் செய்தவனை சும்மா விடக் கூடாது. தண்டித்தே ஆக வேண்டும். இவனால் என்னால் வெளியில் கூட போக முடியவில்லை என்று கொதித்துக் கூறுகிறார் நடிகை நிலா.
மீரா சோப்ரா என்ற இயற்பெயரைக் கொண்ட நிலாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அமாவாசை ஆகி விட்டதால் டெல்லியிலேயே செட்டில் ஆகி விட்டார். இந்த நிலையில் அவருக்கு ஆபாச இமெயில்கள் தொடர்ந்து வரவே டெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நிலா கூறுகையில்,
இந்த ஆபாச இமெயில்களால் நான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். எனக்குத் தெரிந்தவர்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
என்னால் வெளியில் போகவே முடியவில்லை. வீட்டோடு முடங்கிப் போய் அழுதபடி இருந்தேன்.
அனுப்பியது யார் என்பது எனக்குத் தெரியும். என் மீது பற்று கொண்டிருப்பதால் இவ்வாறு அனுப்பி விட்டதாக நான் கருதி அமைதியாக இருந்தேன். ஆனால் தொடர்ந்து இந்த ஆபாச மெயில்கள் வந்ததால்தான் போலீஸாரை அணுகினேன்.
இந்த நபரை சும்மா விடக் கூடாது. பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார் நிலா.

14 ஜூன் 2011

கதாநாயகியாகிறார் ஸ்ரீதேவியின் மகள்.

முன்னால் கனவுக் கன்னி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இப்போது கதாநாயகியாகிறார்.
1970 மற்றும் 80-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இந்திப் படங்களிலும் நடித்தார். 1996-ல் இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் குடியேறினார். இவருக்கு ஜான்வி, குஷி என இருமகள்கள் உள்ளனர்.
ஜான்வி வளர்ந்து விட்டபடியால் கதாநாயகியாக்க முடிவு செய்துள்ளார். தெலுங்கு அல்லது தமிழ் படத்தில் அறிமுகம் செய்கிறார். இதற்காக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் தெலுங்கில்தான் தன் மகளை அறிமுகப்படுத்துவேன் என்று கூறிவந்தவர் ஸ்ரீதேவி.
ஏற்கெனவே இப்படிக் கூறி தெலுங்கில் தன் மகள் கார்த்திகாவை அறிமுகப்படுத்தி படுதோல்வி கண்டவர் ராதா. பின்னர் கார்த்திகாவை 'கோ' தமிழ் படத்தில் அறிமுகம் செய்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடுகிறது.
இதைப் பார்த்தபிறகு, தனது முடிவை மாற்றிக் கொண்ட ஸ்ரீதேவி, ஜான்வியை தமிழில் முதலில் நடிக்க வைக்க விரும்புகிறார்.

11 ஜூன் 2011

ஸ்ருதியை தாக்கும் நித்யா.

கமலின் கலைவாரிசு, ஸ்ருதிஹாசனுக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் நெருக்கம் இருந்து வருவதாக டோலிவுட் மீடியா தொரந்து எழுதி வந்தது. இந்த கிசு கிசு விவகாரத்தை இரண்டுபேரும் மறுத்து வந்ததோடு, இது என் தனிப்பட்ட விஷயம் என்று கமல் பாணியில் திமிராக பதில் சொல்லி வந்தார் வருகிறார் சித்தார்த்.
‘அகனாக ஒக்க தீருடு ‘ என்ற தெலுங்கு தோல்விப் படத்தில் சேர்ந்து நடித்த இவர்கள் இருவரும், வம்படியாக ‘ஓ மை பிரண்ட் ‘ என்ற தெலுங்குபடத்தில் ஜோடி சேர்ந்திருகிறார்கள்.
இந்த படத்துக்கு கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, சித்தார்த்துடன் போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்ட நிலையில், படத்திலிருந்து நீக்கப்பட்டார் நித்தியாமேனன். சித்தார்த்தின் வற்புறுத்தலால்தான் நித்தியா நீக்கப்பட்டதாக டோலிவுட் மீடியா எழுதியதை சித்தார்த்த எதுவும் பேசவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட கதாநாயகியான நித்தியாவே முன்வந்து உண்மையை தைரிடமாக உடைத்து, ஸ்ருதியைத் தாக்கியுள்ளார்.
தற்போது தமிழில் ‘வெப்பம், ‘180’ படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் மலையாள கலைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவர் வெப்பம் படத்தின் பேச் ஒர்க் படப்பிடிப்புக்காக சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்கள் அவர்களை சூழ்ந்துக்கொண்டனர். அப்போது “என்னை மலையாள நடிகை என்று எழுதாதீர்கள். நான் படம் இயக்குனர் ஆகவே பெரிதும் விரும்புகிறேன். என்றாலும் கன்னடத்தில்தான் நான் முதலில் நடிகை ஆனேன்.
பிறகு மலையாள படத்தில்தான் நாயகி ஆனேன். கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய நான்குமொழிப் படங்களிலும் நடித்துவருகிறேன்.இப்போது சொல்லுங்கள் என்னை மலையாள நடிகை என்று சொல்வதில் அர்த்தமிருகிறதா? தெலுங்கு ஹீரோ வெங்கடேஷின் படத்தில் நடிக்க மறுத்ததைப் பற்றி கேட்கிறார்கள்.
அவருக்கும் எனக்குமான வயது வித்தியாசம் அதிகம். படத்தில் எங்களைப் பார்த்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதனால்தான் மறுத்தேன். ‘180’ படத்துக்குப் பிறகு சித்தார்த்துடன் நான் நடிக்க வேண்டிய தெலுங்கு படம் ‘ஓ மை பிரண்ட்’. கடைசி நேரத்தில் நான் நீக்கப்பட்டது ஏன் என்று கேட்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். சித்தார்த், ஸ்ருதிஹாசனுடன் நடிக்க விரும்பினார். அதனால் நான் நீக்கப்பட்டேன். நான் நீக்கப்பட்டதற்கு ஸ்ருதிஹாசனே காரணம்” என்று தைரியமாக பேசுகிறார் நித்தியா மேனன்.

09 ஜூன் 2011

காதல் திருமணம் எல்லாம் கிடையாது.

காதல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன், வீட்டில் பார்க்கும் மணமகனை திருமணம் செய்து கொள்வேன் என நடிகை சினேகா கூறினார்.
கடலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்தார் நடிகை சினேகா. அவரைக் காண கொளுத்தும் வெளியிலிலும் குவிந்தனர் ரசிகர்கள். உடனே திரண்டு நின்ற ரசிகர்கள் மற்றும் பொது மக்களை பார்த்து சினேகா கையசைத்தார். பதிலுக்கு ரசிகர்களும் கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த ஆர்வத்தில் ரசிகர்கள் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. பொலிஸ்காரர்களும் மற்றும் கடை காவலர்களும் நடிகை சினேகாவை பாதுகாப்பாக கடைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் நடிகை சினேகா குத்து விளக்கேற்றி, கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நகைக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளின் குறிப்பிட்ட மாதிரிகளை எடுத்து அவர் தனது கழுத்தில் அணிந்து வாடிக்கையாளர்களிடம் காண்பித்தார். பின்னர் பேசிய அவர், நான் இன்னும் நடிப்பில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. நல்ல படங்கள் தான் முக்கியம். சம்பளமல்ல. அதனால் தான் இன்னும் கண்ணியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பதில் உறுதியாக உள்ளேன்.
என் திருமணம் இப்போது நடக்காது. அப்படி நடந்தாலும் அது நிச்சயமாக காதல் திருமணமாக இருக்காது. வீட்டில் பார்க்கும் பையனைத்தான் மணப்பேன் என்றார்.

07 ஜூன் 2011

கவர்ச்சிக்கு மாறும் அனுயா.

ஹோம்லி கேரக்டரை விட கவர்ச்சியான கேரக்டர் தான் பொருத்தமாக இருக்கும் என்று பலரும் கூறுவதால், இனி கவர்ச்சியான வேடத்தில் நடிக்க அனுயா தயாராகி கொண்டு இருக்கிறார். சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுயா. முதல்படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அனுயா, மதுரை சம்பவம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் சிலகாலம் காணாமல் போய் இருந்த அனுயாவுக்கு தற்போது, "நண்பன்" படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆனால் படத்தில் அவருக்கு கதாநாயகி வேடம் அல்ல, இலியானாவின் அக்காவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அனுயாவுக்கு கவர்ச்சி வேடம் தான் பொருத்தமாக இருக்கும் பலரும் கூறிவருகின்றனர். இதனால் கவர்ச்சிக்கு மாற தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சிவா மனசுல சக்தி, நகரம் போன்ற படத்தில் நல்ல ரோல் அமைந்தது, இருப்பினும் நடிப்புடன் கொஞ்சம் கவர்ச்சியையும் சேர்த்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறுகின்றனர். இதனால் நானும் கவர்ச்சியாக நடிக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன். அதற்கேற்றாற்போல் நல்ல கதை அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். தற்போது நண்பன் படத்தில் இலியானாவின் அக்காவாக நடிக்கிறேன். அக்கா கேரக்டர் என்றாலும், என்னுடைய கேரக்டர் நிச்சயம் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

04 ஜூன் 2011

பணத்தைக் காட்டியதும் ஓக்கே சொன்ன த்ரிஷா.

மலையாளத்தில் பாடிகார்ட் என்ற பெயரில் உருவாகி, பின்னர் தமிழில் காவலன் என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் தற்போது தெலுங்கில் பாடிகார்ட் என்ற பெயரிலேயே தயாராகிறது.
பாடிகார்ட் படத்தில் செக்ஸியான காட்சிகள் எதுவும் கிடையாது. இயல்பான கதையோட்டத்தைக் கொண்ட அப்படத்தை பெரிய அளவில் கொம்பாக்காமல் தமிழிலும் சற்று இயல்பாக எடுத்ததால் அப்படம் பெரிய ஹிட் ஆனது.
இந்த நிலையில், தெலுங்கு பாடிகார்டில் பெரிய அளவில் மசாலாவை சேர்த்து இணைக்கவுள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் திரிஷா. படத்தில் ஒரு காட்சியில் பிகினி உடையில் அவரை உலவ விட்டுள்ளனர்.
இந்தக் காட்சியில் நடிக்க முதலில் தயங்கியுள்ளார் திரிஷா. எக்ஸ்டிராவாக தருவதாக தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் தெரிவிக்கவே சம்மதித்துள்ளாராம் திரிஷா. இந்தக் காட்சியில் நடிப்பதற்காக எக்ஸ்டிராவாக ரூ. 25 லட்சத்தை வாங்கியுள்ளாராம் திரிஷா.
தெலுங்கில் தற்போது நாயகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. போட்டியை சமாளிக்க கவர்ச்சிக் களத்தில் குதித்து ரசிகர்களை இழுப்பதில் நாயகிகளிடையே பெரும் அடிதடியே காணப்படுகிறது. இந்த நிலையில்தான் போட்டிக் களத்தில் திரிஷாவும் இப்படிக் குதித்துள்ளாராம்.
அதை விட முக்கியம் இது தெலுங்குப் படமாச்சே, கவர்ச்சி மசாலா இல்லையென்றால் எப்படி...?

02 ஜூன் 2011

ஜெய் ஆகாஷின் ஆயுதப் போராட்டம்.

சியான் விக்ரம் அளவுக்கு பெரிய போராட்டம் இல்லாவிட்டாலும், லண்டனின் புலம்பெயர்ந்து வாழும் ஜெய்ஆகாஷ் எப்படியாவது தமிழ்சினிமாவில் எனக்கான ஆங்கீகாரத்தை அடைந்தே தீருவேன் என்று போராடிக்கொண்டிருகிறார்.
அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘ஆயுதப்போராட்டம்’ படத்தின் இசையை நேற்று சென்னையில் வெளியிட்டார்கள். ஜெய் ஆகாஷின் நெருங்கிய நண்பர்களான விஜய் ஆண்டனி, சமுத்திரகணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.ஜெய் ஆகாஷின் ஆயுதபோராட்டம். கொஞ்சம் சர்ச்சை, விவாதம், இன உணர்வு, தமிழ்தேசியம் என்று எல்லாம் பேசுகிற கமர்ஷில் படமாம். மொத்த படக்குழுவும் தாய்லாந்தில் மூன்று மாதம் தங்கியிருந்து முழு படத்தையும் முடித்துவிட்டு சென்னை திரும்பியிருகிக்கிறார்கள். இந்தப்படத்தில் தாய்லாந்தின் ராணுவ உதவி பெற்று காடுகளில் படமாக்கியிருகிறார்கள். இதற்குமுன் காதலன் காதலி என்ற படத்தை ஜெய் ஆகாஷ் இயக்கி நடித்தார்.
அந்த படத்தை தயாரித்த அதே ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தான் இந்த படத்தையும் தயாரித்திருகிறது. காதலன் காதலி படத்தை, நாங்கள் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட குறைவாக, அதே நேரத்தில் படத்தை சிறப்பாகவும் எடுத்துக்கொடுத்தார். அந்த நன்றிக்காக இந்தப்படம். இதிலும் கலக்கி விட்டார் ஜெய் ஆகாஷ் என்று பாராட்டுகிறார்கள். இந்தகாலத்தில் தயாரிப்பாளர்கள் பாராட்டுவது அபூர்வம்.
போகட்டும்! இந்தமுறையாவது பெரிய வெற்றி ஜெய் ஆகாஷுக்கு கிடைக்கட்டும் என்று வாழ்த்தி விட்டு படத்தின் கதையைச் சொல்லுங்கள் என்றோம். ஒரு இலங்கை தமிழ் இளைஞனுக்கும் ஒரு இந்திய தமிழ் இளைஞனுக்கும் நடக்கும் உணர்வு போராட்டம்தான் கதை.
இந்த இரண்டு தமிழ் இளைஞர்களாகவும் நடித்திருப்பது ஆகாஷேதானாம். இன்னும் கொஞ்சம் துருவியதில் வாழ்ந்து மறைந்த ஒரு விடுதலைபுலி போராளியின் கடிதங்களில் இருந்து கதைக்கான பல திருபங்களை எடுத்துக்கொண்டாராம் இயக்குனர்.

29 மே 2011

தமன்னா முதுகில்......!!!

தமன்னா முதுகில் பிட் எழுதி வைத்து பரீட்சை எழுதுவது போன்ற காட்சியை ஒரு படத்தில் வைத்து, கலெக்ஷனை அள்ளிக் கொண்டிருக்கிறது தெலுங்கு படமொன்று! 16 பிட் போஸ்டர்கள் செய்யாத பப்ளிசிட்டியை சமீபத்திய கலாச்சாரப்படி பொதுநல வழக்குகள் செய்து கொண்டிருக்கின்றன.
தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த இந்த புது டெக்னிக் இப்போது தெலுங்கு சினிமாவுக்கும் தாவியிருக்கிறது. தெலுங்கில் வெளியான 100 பர்‌சென்ட் லவ் என்ற படத்தில் ஒரு காட்சி. கதைப்படி நாயகி தமன்னாவின் வெள்ளை வெளேர் முதுகில் பிட் எழுதி வைத்துக் கொண்டு பின்னால் இருந்து அதை பார்த்து பார்த்து எழுதுவாராம் நாயகன் நாக சைதன்யா. அடிக்கடி அவர் தமன்னாவின் பனியனை தூக்கி தூக்கி பார்ப்பதை கண்டித்து சில பொதுநல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளன.
பொதுநல அமைப்பின் ஆக்ரோஷ ஆர்ப்பாட்டத்தால் 100 சதவீத லவ் வசூலை வாரி குவித்து விட்டதாம். குறிப்பிட்ட அந்த கிளுகிளு காட்சியை நீக்க உத்தரவு போட்ட பிறகும் கூட கட்டுக்கடங்காமல் திரிகிறதாம் ரசிகர்கள் கூட்டம். கலெக்ஷனை அள்ள இந்த புது டெக்னிக் உதவும் என நினைக்கும் பட அதிபர்கள் தங்களது படத்தில் மேற்படி காட்சியைப் போல ஒரு பிட் காட்சியை சொருகி, கண்டன அறிக்கை வெளியிடுவதற்காகவும், பொதுநல வழக்கு தொடருவதற்காகவும் சமூக நல ஆர்வலர்களை வாடகைக்கு பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடுத‌ல் தகவல்.

28 மே 2011

விக்ரம்,சிம்பு இருவரின் ஜோடி தீக்ஷா.

தமிழில் விக்ரமுடன் வேந்தன் படத்தில் ஜோடி போட்டு இருக்கும் தெலுங்கு வரவு தீக்ஷா செத், அடுத்து வேட்டை மன்னன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகி இருக்கிறார்.
வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு, அடுத்து வேட்‌டை மன்னன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிக்க, நெல்சன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் நாயகனாக சிம்பு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட்டை சேர்ந்த நடிகைகள் யாரையாவது நடிக்க வைக்க எண்ணினர் சிம்புவும், இயக்குநரும். ஆனால் கடைசியாக தெலுங்கு நடிகை தீக்ஷா செத் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் தவிர மொத்தம் மூன்று நாயகிகள் என்றும், தக்ஷா செத்தை தவிர மற்ற இரண்டு நாயகிகளுக்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழில், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படம் ஆக்ஷன் கலந்த காமெடி படமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
தீக்ஷா செத், ஏற்கனவே விக்ரம் நடிக்க இருக்கும் வேந்தன் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார். டாப்சி, ஹன்சி‌கா மோத்வானி ஆகியோரைத் தொடர்ந்து, இப்போது புதிய வரவாக வந்திருக்கும் தீக்ஷாவும், தமிழில் ஒரு ரவுண்டு வந்து கலக்க இருக்கிறார். எடுத்தவுடனே விக்ரம், சிம்பு என்று முன்னணி ஹீரோக்களுடன் தீக்ஷா ஜோடி போட்டு இருப்பது மற்ற நடிகைகள் இடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

26 மே 2011

தாவூத்தின் காதலி இலியானா.

புதிய இந்திப் படம் ஒன்றில் தாவூத் இப்ராகிம் காதலி மந்தாகினி வேடத்தில் இலியானா நடிப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதி செயலில் ஈடுபட்ட தாவூத் இப்ராகிம் வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாகிறது. இதில் தாவூத் இப்ராகிம் காதலியான நடிகை மந்தாகினி வேடத்தில் இலியானா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் நடிக்கும் இலியானாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.
அவர் கூறுகையில், "தாவூத் இப்ராகிம் வாழ்க்கை வரலாறு பட மாவதாகவும் அவரது காதலி வேடத்தில் நான் நடிப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்திப்படம் ஒன்றில் நடிக்கிறேன். அதன் கதை என்ன, எனது கேரக்டர் எப்படிபட்டது என்பதை எல்லாம் இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது சொல்வேன்," என்றார்.
இலியானாவின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியுள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், "தோல்விக்கான காரணத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு படத்திலும் கஷ்டப்பட்டுதான் நடிக்கிறேன். சமீபத்தில் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்டேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளேன்.
ஷங்கர் இயக்கும் நண்பன் படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது. அங்கு நீண்ட தூரம் படகில் பயணம் செய்தோம். அது என் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாததால் காய்ச்சல் வந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர்," என்றார்.

24 மே 2011

அது எனது தனிப்பட்ட பிரச்சனை.

சித்தார்த்தை நான் காதலிக்கிறேனா, அவரும் நானும் ஒன்றாக வசிக்கிறோமா என்பது பற்றியெல்லாம் பொதுவில் விவாதிக்க நான் தயாராக இல்லை. இதைக் கேட்க யாருக்கும் உரிமையில்லை,(வாசகர்களே உங்களுக்கும் தான்) என்று நடிகை ஸ்ருதிஹாஸன் கூறியுள்ளார்.
தெலுங்கில் அனகனகா ஓ தீருடு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதிஹாஸன். இந்தப் படம் மூலம் இருவருக்கும் மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, இப்போது இருவரும் ஹைதராபாதில் தனிக் குடித்தனம் நடத்துவதாக தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை இருவருமே மறுக்கவில்லை. மாறாக இதையெல்லாம் ஏன் கேட்கிறீ்கள்? அது என் தனிப்பட்ட வாழ்க்கை என்று கூறி வருகிறார் ஸ்ருதி. இந்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் ஸ்ருதியிடம் சித்தார்த் விவகாரம் பற்றிக் கேட்டனர்.
அதற்கு அவர், மீண்டும் சொல்கிறேன், இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. என் சினிமா பற்றி கேளுங்கள். சந்தோஷமாக பதில் சொல்கிறேன். நானும் சித்தார்த்தும் காதலிப்பது, ஒன்றாக வசிப்பது பற்றியெல்லாம் உங்களுக்கு எதற்கு? இது முழுக்க முழுக்க தனிமனித வாழ்க்கை. அதனால் இதுபற்றிக் கேட்க வேண்டாம், என்றார்.

22 மே 2011

நட்பாக பழகினால் அதன் பெயர் காதலா?

பாலிவுட்டின் இப்போதைய ஹாட் நியூஸ் அசின், நிதின் முகேஷ் தான். இருவரும் காதல் வயப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் பரவத் தொடங்கியுள்ளது.
கஜினி படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு போனவர் நடிகை அசின். கஜினி படத்தின் வெற்றியை தொடர்ந்து சல்மானுடன் லண்டன் ட்ரீம்ஸ், ரெடி போன்ற படங்களில் நடித்தார். லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் இருந்தே சல்மானுக்கும், அசின் இடையே காதல் இருப்பதாக நிறைய செய்திகள் வந்தன. ஆனால் அதனை இருவருமே மறுத்து வந்தனர். இந்நிலையில் இப்போது புதிதாக நடிகர் நிதின் முகேசை, அசின் காதலிப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.
அசினுக்காக பிரபல தயாரிப்பாளர்களிடம் எல்லாம் நேரில் போய் வாய்ப்பு கேட்கிறாராம் முகேஷ். மேலும் தன்னுடைய படங்களில் அவரையே நாயகியாக நடிக்கச் சொல்லி நிர்பந்திக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை முகேஷ் மறுத்துள்ளார். எனக்கும், அசினுக்கும் அந்தமாதிரியெல்லாம் எதுவும் கிடையாது. நட்பாக பழகினாலே, அதை காதல் என்று கதை கட்டி விடுகின்றனர் என்று கூறுகிறார்.

19 மே 2011

திரையுலகிற்கு விடை கொடுக்கப்போகும் நயன்தாரா.

நடிகை நயன்தாரா திரையுலக வாழ்க்கையின் இறுதிகட்டத்தை எட்டி வருகிறார். சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பிறகு மனம் வெறுத்து போயிருந்த நேரத்தில் ஆறுதலாக இருந்த நடிகர் பிரபுதேவாவை காதலிக்கத் தொடங்கினார். பிரபுதேவா ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தவர் என்பது தெரிந்தும், அவருடனான காதலைத தொடர்ந்தார். பொது விழாக்களுக்கு ஜோடியாக சென்ற அவர்களுக்கு, சிறந்த தம்பதி விருதும் வழங்கி கவுரவித்தது(?) ஒரு பத்திரிகை.
இதற்கிடையில் காதல் மனைவி ரமலத்துக்கும் - பிரபுதேவாவுக்கும் இடையே விவாகரத்து தொடர்பாக மோதல் உருவானது. எப்படியும் நயன்தாராவை விட்டு விட்டு பிரபுதேவா தன்னிடம் வரமாட்டார் என்பதை புரிந்து கொண்ட காதல் மனைவி ரமலத், பிரபுதேவாவிடம் இருந்து பெரிய தொகையையும், கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களையும் கேட்டுப் பெற்றார். பேரம் படிந்ததையடுத்து பிரபுதேவாவை விவாகரத்து செய்ய சம்மதித்தார். அடுத்த மாதம் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
இது ஒரு‌புறம் போய்க் கொண்டிருக்க... இன்னொருபுறம் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜூலையில் நயன்தாராவை முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்துள்ள பிரபுதேவா, திருமணத்துக்கு பிறகு நயன்தாராவை சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று கூறி விட்டாராம். அதனால்தான் அமமணி புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார். தற்போது ஸ்ரீராம் ஜெயம் படத்தில் நடித்து வரும் நயன்தாராவுக்கு இதுதான் கடைசி படமாக இருக்கும் என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். திரையுலக வாழ்க்கையில் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நயன்தாரா, சமீபத்தில் பெங்களூருவில் நடந்த சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்டார். விழா மேடையில் பேச பலர் வற்புறுத்தியும் பேச மறுத்த நயன், சமீப காலமாகவே பொது விழாக்களையும், மீடியாக்களையும் தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

16 மே 2011

இஷிதாவின் தயக்கம்.

பண்டலூன்ஸ் பெமினாவின் அழகிப்போட்டியில் கலந்து கொண்ட 'மிஸ் இந்தியா' இஷிதா சர்கார் கொலிவுட் படங்களில் நடிக்க யோசித்துள்ளார்.
சென்னையில் நடந்த ஒரு பொழுது போக்கு கலை நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார் அவர்.
அதில் அவர் பேசுகையில் சென்னை ஒரு அட்டகாசமான இடம், மற்ற மாநிலங்களில் உள்ள நகரங்கள் எல்லாம் மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கும் போது சென்னை மட்டும் தன் அடையாளத்தை இழக்காமல் அப்படியே உள்ளது.
அதன் சரித்திர புகழ் பெற்ற வேர்களும் கிளைகளும் மண்ணின் மணத்தை பரப்பி வருகின்றன. கொலிவுட்டில் வெளியாகும் அத்தனை படங்களையும் நான் விரும்பி பார்ப்பதில்லை.
கொலிவுட் நடிகர்களில் ரஜினியை மட்டும் எனக்கு பிடிக்கும். அவர் நடித்த சில படங்களை மட்டும் பார்த்துள்ளேன். அற்புதமான நடிகர் அவர்.அவரைத்தான் கொலிவுட்டின் முக்கியமான அடையாளமாக நினைக்கிறேன்.
அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்ததும் பதறிப்போனேன். நான் 'மிஸ் இந்தியா' ஆனதும் கோலிவுட்டிலிருந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன.
எனக்கு சரளமாக தமிழ் தெரியாது என்பதால் அந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. ஐஸ்வர்யா பச்சன் போல தமிழில் நடிக்க ஆசையும் உள்ளது.
தமிழை நன்றாக கற்ற பிறகு கோலிவுட் படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளேன் என்று மிஸ் இந்தியா இஷிதா கூறியுள்ளாராம்.

14 மே 2011

காதலிச்சா வாழ்க்கை பாழாகிடும்!

பொதுவாக காதல் வாழ்க்கையைக் கொடுக்கும் என்பார்கள். ஆனால் இவரோ அது வாழ்க்கையைக் கெடுக்கும் என்கிறார். அவர்... நடிகை பாவனா!
'காதலித்தால் வாழ்க்கை நாசமாகிவிடும். அதனால் நான் காதலிக்கமாட்டேன்', என்கிறார் பாவனா.
'சித்திரம் பேசுதடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பாவனா. தீபாவளி, அசல், ஜெயங் கொண்டான் படத்திலும் நடித்தார். தமிழில் வாய்ப்பில்லாத நிலையில் தெலுங்குக்குப் போய்விட்டார்.
தெலுங்கில் கோபிசந்தை அவர் காதலிப்பதாக நிறைய செய்திகள் வந்தன. இதுகுறித்துக் கேட்டபோது, "சினிமாவில் கதாநாயகிகள் சீக்கிரமே காணாமல் போய் விடுகின்றனர். நடிகர்கள்தான் ரொம்ப நாள் நிலைத்து இருக்கிறார்கள். காரணம், நடிகைகள் மார்க்கெட் போனதும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகு கணவர், குடும்பம், குழந்தை என வாழ்க்கை முடங்கிப் போகிறது.
சினிமாவில் காதல் காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் நிஜத்தில் காதல் பற்றி எதுவும் தெரியாது. காதலிச்சா வாழ்க்கை நாசமாகிவிடும். சிலர் காதலுக்காகவே உயிரை விடுவதையெல்லாம் பார்க்கிறோம். தேவையா இது... இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களை நான் வெறுக்கிறேன். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்," என்றார்.

11 மே 2011

இலியானா பாடு சிக்கலில்.

ஆந்திர திரையுலகில் நடிகை இலியானா சிக்கலுக்கு மேல் சிக்கலை சந்தித்து வருகிறார். அவருக்கு தொழில் தடை விதிக்க சக்தி பட தயாரிப்பாளர் முயன்று வருகிறார். தெலுங்கில் சக்தி என்ற படத்தில் நடித்தார் இடுப்பழகி இலியானா. இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ. ஒன்றரை கோடி. தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையுடன் வலம் வந்த இலியானாவுக்கு இப்போது புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது.
படத்தின் ஹீரோ ஜூனியர் என்டிஆருக்கும், இலியானாவுக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஆரம்பித்த பிரச்னை படம் ரீலிஸ் ஆன பிறகும் தொடர்ந்தது. சூட்டிங் சமயத்தில் டைரக்டர் மற்றும் ஹீரோவுக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காததால் இலியானா மீது ஏக கடுப்பில் இருந்த தயாரிப்பு தரப்பு, ரீலிசுக்கு பிறகும் அம்மணியின் ஒத்துழைப்பு இல்லாததால் கடுப்பின் உச்சத்துக்கே சென்று விட்டதாம். சக்தி பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர முடியாது என்று இலியானா கூறியதால், அப்செட் ஆன படக்குழுவினர், படத்தின் தோல்வியால் மெலும் அப்செட் ஆனார்கள்.
இலியானா மட்டும் பு‌ரமோஷனுக்கு வந்திருந்தால், ஓரளவு படம் இன்னும் கொஞ்ச நாள் ஓடியிருக்கும் என்று வாதிடும் தயாரிப்பாளர், இதுதொடர்பாக சங்கத்தில் முறையிட்டிருக்கிறார். முடிந்தால் கொடுத்த சம்பளத்தில் பாதியை பிடுங்குவது; இல்லையென்றால் இலியானாவுக்கு தொழில் தடை விதிப்பது என இரண்டு முடிவுகளையும் சொல்லி சங்கத்தை நெருக்குகிறாராம் தயாரிப்பாளர்.
ஏற்கனவே தமிழ் திரையுலகிற்கு எதிராக செயல்பட்ட குத்து ரம்யா உள்ளிட்ட சில நடிகைகளுக்கு கோலிவுட்டில் தொழில் தடை விதித்ததும், அதன் பிறகும் அவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருப்பதும் பாமர ரசிகனுக்குக் கூட தெரியுமே!

08 மே 2011

தமன்னாவுக்கும் காதல் தோல்வியாம்!

நடிகை தமன்னாவை காதலித்து ஏமாற்றியிருக்கிறார் பிரபல வாரிசு நடிகர் ஒருவர். முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்த அந்த காட்டன்வீர நடிகருடன் தமன்னா 2 படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் பட சூட்டிங்கின்போது இருவருக்குள்ளும் காதல் அரும்பி விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பின.
இடையில் அந்த நடிகர் காஜல் அகர்வாலுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இரண்டு கிசுகிசுக்களையும் ஒட்டுமொத்தமாக மறுத்த நடிகர், தமன்னாவை நேசித்ததாகவே தகவல்கள் வெளியாயின. காரணம் வீர நடிகரின் அண்ணனும் ஒரு நடிகையைத்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அந்த திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும், ஒருவழியாக சம்மதம் பெற்று திருமணம் முடித்து, குழந்தை குட்டியென்று சந்தோஷமாக வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார். அதனால் நம் காதலுக்கும் பெற்றோர் பச்சைக் கொடி காட்டுவார் என எதிர்பார்த்திருந்தார். தமன்னாவிடமோ என் காதலை (பெற்றோரிடம்) சொல்ல நேரமில்லை… என்று பையா பட பாட்டை பாடிக் கொண்டிருந்தார் அந்த நடிகர்.
இதற்கிடையில் விஷயம் கேள்விப்பட்ட அப்பா, நடிகரை கண்டித்ததுடன் இனிமேல் அந்த பெண்ணுடன் எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்று கடுமையான உத்தரவையும் போட்டிருக்கிறார். இந்த ஜோடியை வைத்து படம் எடுக்க நினைத்த முக்கிய புள்ளிகளிடமும் ‌வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தந்தைக்குலம். அதனால் அடுத்தடுத்து சினிமாவில் ஜோடி சேர வாய்ப்பில்லாமல் போனது அந்த ஜோடிக்கு. இப்போது நிஜத்திலும் ஜோடி சேர முடியாத அளவுக்கு நடிகருக்கு திருமணத்தை நிச்சயித்து விட்டனர்.
அதனால்தான் அம்மணி இனி தமிழ்ப்படங்கள் எதிலும் நடிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம். தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் 2009ம் ஆண்டு 5 படங்களில் நடித்த தமன்னா, 2010ல் 9 படங்கள் நடித்திருந்தார். திரைக்கு வந்த ஹிட் படங்களில் எல்லாம் தமன்னா தரிசனம் ரசிகர்களுக்கு கிடைத்தது. ஆனால் 2011ம் ஆண்டில் இதுவரை அவர் நடித்து ஒரே ஒரு படம்தான் வந்துள்ளது. இன்னும் ஒரேயொரு படம்தான் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு நடிகர் சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு, நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு சிலகாலம் முழுக்கு போட்டிருந்தார். பின்னர் ஒரு வழியாக மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்த நயன், தனக்கு ஆறுதல் சொன்ன நடிகர் பிரபுதேவாவிடம் மனதை பறிகொடுத்து, ஊரறிய கல்யாணம் பண்ண நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே வரிசையில் இப்போது தமன்னா காதல் முறிவுக்கு பிறகு தமிழ்நாட்டுப் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டேன் என்று கூறி தெலுங்கு பக்கம் ஐக்கியமாகும் முடிவில் இருக்கிறாராம்!

05 மே 2011

திரிஷா கொடுத்த விருந்து.

பிரிக்க முடியாதது த்ரிஷாவும் அமர்க்களமான பார்ட்டிகளும்தான் என்றால் மிகையல்ல. சாதாரண வார விடுமுறை நாட்களிலேயே விருந்து என்றால் தூள் கிளப்புவார்கள் த்ரிஷாவும் அவரது அம்மாவும் நண்பர்களுடன் சேர்ந்து. பிறந்த நாள் என்றால் கேட்கவா வேண்டும்…
நேற்று த்ரிஷாவுக்கு பிறந்த நாள். இந்த நாளை வழக்கம் போல காலையில் எழுந்து புத்தாடை அணிந்து, கோயிலுக்குப் போய்… ம்ஹூம் இந்த பிஸினஸே கிடையாது.
புதன்கிழமை அதாவது நேற்று அதிகாலை 12.01-க்கு செனடாப் சாலையில் உள்ள த்ரிஷாவின் வீடு அமர்க்களப்பட்டது. த்ரிஷாவின் அம்மா உமா மற்றும் நெருங்கிய தோழிகள் புடை சூழ கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார் த்ரிஷா.
அதன் பிறகு விடிய விடிய நடந்தது பிறந்த நாள் பார்ட்டி. சமீபத்தில் வெளியான த்ரிஷாவின் படங்களில் மன்மதன் அம்பு ஏமாற்றம் தந்தாலும், பவன் கல்யாணுடன் அவர் நடித்த தீன் மார் வசூலில் சக்கைப் போடு போடுகிறது.
இந்த வெற்றிக்கும் சேர்த்து நேற்றைய நள்ளிரவு விருந்தில் போதும் போதும் எனும் அளவுக்கு நண்பர்களை கவனித்து அனுப்பினாராம் த்ரிஷா!

03 மே 2011

ரீச்சரானார் நமீதா.

இதுவரை கவர்ச்சி நாயகியாக மட்டுமே வெள்ளித்திரையை வலம் வந்த நமீதா, இனி முற்றிலும் வித்தியாசமான கேரக்டர்களில் மட்டுமே என்று முடிவெடுத்திருக்கிறாராம். அதிர்ச்சியடைந்து விடாதீர்கள் ரசிகர்களே...! நமீயின் இந்த முடிவு தமிழில் அல்ல... தெலுங்கில்! தமிழில் பெரிய அளவிலான பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் கரையொதுங்கியிருக்கும் நமீதா, லவ் காலேஜ் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அம்மணிக்கு யோகா டீச்சர் வேடம். டீச்சர் என்பதால் ஓரளவு மட்டுமே கவர்ச்சி காட்ட முடியும் என கூறிய நமீதாவை கிடைத்த கோணத்தில் எல்லாம் படமாக்கி, படப்பெட்டிக்குள் சுருட்டி வைத்திருக்கிறாராம் ஒளிப்பதிவாளர்.
யோகா டீச்சர் என்பதால் தனது உ‌டல் எடையை குறைத்திருக்கும் நமீதா, உடல் ‌‌பொலிவை கூட்டியிருக்கிறாராம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், இதுவரை எனக்குள் மறைந்திருந்த நடிப்புத் திறமையை மொத்தமாக இதில் வெளிக்காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கப் போகிறேன், என்று கூறியுள்ளார்.
லவ் காலேஜ் படம் கன்னடத்தில் வெளியான நமீதா ஐ லவ் யூ படத்தின் டப்பிங்தான் என்ற போதிலும், அது தெரியாத அளவுக்கு படத்தில் சில மாறுதல்களையும் செய்து சேர்த்து பொலிவேற்றியுள்ளனராம். விரைவில் இந்த படமும் தமிழில் வராமலா போகும்?

01 மே 2011

முத்தம் என்றால் மொத்தமாய் கேட்ட தமன்னா.

கமலை வைத்து அவ்வைசண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் அடுத்து கமலை வைத்து ஒரு ‌காமெடி படம் ‌ஒன்றை இயக்க போகிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக தமன்னாவை நடிக்க வைக்க எண்ணினார் கே.எஸ்.ரவிக்குமார். இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. தமன்னாவும் நடிக்க ஓ.கே., சொல்லிவிட்டாராம்.
இப்போது பிரச்சனை என்னவென்றால் கமல் படம் என்றால் முத்தக்காட்சி இல்லாமல் இருக்காது. இந்தபடத்தில் அதுபோன்ற காட்சிகள் ஏதும் உள்ளதா என்று தமன்னா கேட்க, அது இல்லாமலா என்று பதில் வர, முதலில் சற்று தயங்கிய தமன்னா பிறகு ஓ.கே., சொன்னாராம். கூடவே ஒரு கண்டிஷனும் போட்டாராம். படத்தில் முத்தக்காட்சி இருப்பதால் தன்னுடைய சம்பளத்தை ரூ.1.25கோடியாக கேட்டாராம். தமன்னாவின் இந்த கண்டிசனை கேட்டதும் அதிர்ந்து போய் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பும், இயக்குநர் தரப்பும்.

28 ஏப்ரல் 2011

விவசாயக் குடும்பத்தில் பெண் எடுக்கிறார் கார்த்தி.

சென்னையில் பி.இ., இன்ஜினியரிங் முடித்து அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்., பட்டம் பெற்றவர் நடிகர் கார்த்தி. எம்.எஸ்., பட்டம் பெற்றாலும் கார்த்தியின் ஆர்வமோ நடிப்பில் தான் இருந்தது. டைரக்டர் அமீரின், பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் கார்த்தி, முதல் படத்திலேயே வித்யாசமான கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பருத்திவீரன் படத்தின் வெற்றி, தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை போன்ற படங்களிலும் தொடர்ந்தது. மிககுறுகிய காலத்தில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார் கார்த்தி. இடையில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர்களுடன் காதல் கிசு கிசுவில் சிக்கினார்.
இந்நிலையில் கார்த்திக்கு தீவிர பெண் வேட்டையில் ஈடுபட்ட அவரது பெற்றோர், ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதிகளின் மகளாகிய ரஞ்சனி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் எம்.ஏ., ஆங்கிலத்தில் தங்க மெடல் பெற்றவர். இவர்களது திருமணம் வரும் ஜூலை மாதம் 3ம்தேதி நடைபெற இருக்கிறது.
வருங்கால மனைவி குறித்து கார்த்தி கூறுகையில், ரஞ்சனியை முதல்முறை பார்த்தபோது ஒரு மணி நேரத்துக்கு மேல் மனம்விட்டு பேசினேன். நான் நடித்த படங்களில் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் பார்த்து ரசித்ததாக சொன்னார். கிராமத்து கலாசாரமும் நகரத்து நாகரிகமும் கலந்த ஒரு பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்பது அப்பா அம்மாவின் ஆசை. அதே மாதிரி ஈரோடு மாவட்ட கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ரஞ்சனி கிடைத்திருக்கிறார், என்றார்.
திருமணம் முடிந்த கையோடு கார்த்தியும் - ரஞ்சனியும் அட்லான்டிக் கடலும் பசிபிக் கடலும் சந்திக்கும் பகுதியிலுள்ள தஹிட்டி தீவுக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டுள்ளார்களாம்.