பக்கங்கள்

02 ஜூன் 2011

ஜெய் ஆகாஷின் ஆயுதப் போராட்டம்.

சியான் விக்ரம் அளவுக்கு பெரிய போராட்டம் இல்லாவிட்டாலும், லண்டனின் புலம்பெயர்ந்து வாழும் ஜெய்ஆகாஷ் எப்படியாவது தமிழ்சினிமாவில் எனக்கான ஆங்கீகாரத்தை அடைந்தே தீருவேன் என்று போராடிக்கொண்டிருகிறார்.
அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘ஆயுதப்போராட்டம்’ படத்தின் இசையை நேற்று சென்னையில் வெளியிட்டார்கள். ஜெய் ஆகாஷின் நெருங்கிய நண்பர்களான விஜய் ஆண்டனி, சமுத்திரகணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.ஜெய் ஆகாஷின் ஆயுதபோராட்டம். கொஞ்சம் சர்ச்சை, விவாதம், இன உணர்வு, தமிழ்தேசியம் என்று எல்லாம் பேசுகிற கமர்ஷில் படமாம். மொத்த படக்குழுவும் தாய்லாந்தில் மூன்று மாதம் தங்கியிருந்து முழு படத்தையும் முடித்துவிட்டு சென்னை திரும்பியிருகிக்கிறார்கள். இந்தப்படத்தில் தாய்லாந்தின் ராணுவ உதவி பெற்று காடுகளில் படமாக்கியிருகிறார்கள். இதற்குமுன் காதலன் காதலி என்ற படத்தை ஜெய் ஆகாஷ் இயக்கி நடித்தார்.
அந்த படத்தை தயாரித்த அதே ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தான் இந்த படத்தையும் தயாரித்திருகிறது. காதலன் காதலி படத்தை, நாங்கள் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட குறைவாக, அதே நேரத்தில் படத்தை சிறப்பாகவும் எடுத்துக்கொடுத்தார். அந்த நன்றிக்காக இந்தப்படம். இதிலும் கலக்கி விட்டார் ஜெய் ஆகாஷ் என்று பாராட்டுகிறார்கள். இந்தகாலத்தில் தயாரிப்பாளர்கள் பாராட்டுவது அபூர்வம்.
போகட்டும்! இந்தமுறையாவது பெரிய வெற்றி ஜெய் ஆகாஷுக்கு கிடைக்கட்டும் என்று வாழ்த்தி விட்டு படத்தின் கதையைச் சொல்லுங்கள் என்றோம். ஒரு இலங்கை தமிழ் இளைஞனுக்கும் ஒரு இந்திய தமிழ் இளைஞனுக்கும் நடக்கும் உணர்வு போராட்டம்தான் கதை.
இந்த இரண்டு தமிழ் இளைஞர்களாகவும் நடித்திருப்பது ஆகாஷேதானாம். இன்னும் கொஞ்சம் துருவியதில் வாழ்ந்து மறைந்த ஒரு விடுதலைபுலி போராளியின் கடிதங்களில் இருந்து கதைக்கான பல திருபங்களை எடுத்துக்கொண்டாராம் இயக்குனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக