பக்கங்கள்

17 ஜூன் 2011

நிலாவை குழப்பிய குறுஞ்செய்தி.

என்னைப் பின் தொடர்ந்து, என்னைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து ஆபாசமாக மெயில் அனுப்பி என்னை டார்ச்சர் செய்தவனை சும்மா விடக் கூடாது. தண்டித்தே ஆக வேண்டும். இவனால் என்னால் வெளியில் கூட போக முடியவில்லை என்று கொதித்துக் கூறுகிறார் நடிகை நிலா.
மீரா சோப்ரா என்ற இயற்பெயரைக் கொண்ட நிலாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அமாவாசை ஆகி விட்டதால் டெல்லியிலேயே செட்டில் ஆகி விட்டார். இந்த நிலையில் அவருக்கு ஆபாச இமெயில்கள் தொடர்ந்து வரவே டெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நிலா கூறுகையில்,
இந்த ஆபாச இமெயில்களால் நான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். எனக்குத் தெரிந்தவர்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
என்னால் வெளியில் போகவே முடியவில்லை. வீட்டோடு முடங்கிப் போய் அழுதபடி இருந்தேன்.
அனுப்பியது யார் என்பது எனக்குத் தெரியும். என் மீது பற்று கொண்டிருப்பதால் இவ்வாறு அனுப்பி விட்டதாக நான் கருதி அமைதியாக இருந்தேன். ஆனால் தொடர்ந்து இந்த ஆபாச மெயில்கள் வந்ததால்தான் போலீஸாரை அணுகினேன்.
இந்த நபரை சும்மா விடக் கூடாது. பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார் நிலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக