பக்கங்கள்

25 ஜூன் 2011

நானா அப்படிச்சொன்னேன்?ஐயோ!ஐயோ!

ஆர்வக் கோளாறில் அல்லது தங்களின் இயல்பான குணாதிசயம் காரணமாக திமிராகப் பேசிவிடுவதும், நிலைமை விபரீதமான பிறகு, 'நானா... எப்போ அப்படிச் சொன்னேன்' என்றை பிளேட்டைத் திருப்பிப் போடுவதும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நடிகைகளுக்கும் சாலப் பொருந்தும்!
சில தினங்களுக்கு முன் மும்பையில் ஒரு படவிழாவில், என்னை தென்னிந்திய நடிகை என்று சொல்லி கேவலப்படுத்த வேண்டாம். நான் பாலிவுட் நடிகை. அப்படிச் சொல்வதைத்தான் விரும்புகிறேன் என்று கூறியவர் காஜல் அகர்வால்.
இதனால் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா புள்ளிகளின் கடும் கண்டனத்துக்குள்ளானார். இனி அவரை வைத்து சினிமா எடுக்க வேண்டாம் என முன்னணி இயக்குநர்கள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலைமை கைமீறியுள்ளது. காஜல் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சக நடிகைகள் சிலரே கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், படப்பிடிப்புக்காக ஜெர்மனி போய் திரும்பி வந்துள்ள காஜலிடம் அதுகுறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த காஜல், "இதெல்லாம் சுத்தப் பொய். நான் அப்படிச் சொல்லவே இல்லை. நான் ஒரு மும்பைப் பெண். அதுதான் எனக்கு பெருமை. நான் ஒருபோதும் தென்னிந்திய நடிகையாகிவிட முடியாது, என்றுதான் சொல்லியிருந்தேன். அதை திரித்து எழுதிவிட்டார்கள்.
தென்னிந்திய படங்கள் மீது எனக்குப் பெரிய மதிப்பு உண்டு. கடந்த சில தினங்களாக நான் வெளிநாட்டில் இருந்தேன். அதற்குள் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் பரப்பி எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கி வைத்துள்ளனர்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக