
இதற்கிடையில் காதல் மனைவி ரமலத்துக்கும் - பிரபுதேவாவுக்கும் இடையே விவாகரத்து தொடர்பாக மோதல் உருவானது. எப்படியும் நயன்தாராவை விட்டு விட்டு பிரபுதேவா தன்னிடம் வரமாட்டார் என்பதை புரிந்து கொண்ட காதல் மனைவி ரமலத், பிரபுதேவாவிடம் இருந்து பெரிய தொகையையும், கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களையும் கேட்டுப் பெற்றார். பேரம் படிந்ததையடுத்து பிரபுதேவாவை விவாகரத்து செய்ய சம்மதித்தார். அடுத்த மாதம் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
இது ஒருபுறம் போய்க் கொண்டிருக்க... இன்னொருபுறம் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜூலையில் நயன்தாராவை முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்துள்ள பிரபுதேவா, திருமணத்துக்கு பிறகு நயன்தாராவை சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று கூறி விட்டாராம். அதனால்தான் அமமணி புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார். தற்போது ஸ்ரீராம் ஜெயம் படத்தில் நடித்து வரும் நயன்தாராவுக்கு இதுதான் கடைசி படமாக இருக்கும் என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். திரையுலக வாழ்க்கையில் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நயன்தாரா, சமீபத்தில் பெங்களூருவில் நடந்த சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்டார். விழா மேடையில் பேச பலர் வற்புறுத்தியும் பேச மறுத்த நயன், சமீப காலமாகவே பொது விழாக்களையும், மீடியாக்களையும் தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக