பக்கங்கள்

04 மார்ச் 2011

நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்!

நிறைய படவாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிருது, ஆனால் நல்ல வலுவான கேரக்டர் ஏதும் அமையாததால் வரும் படங்கள் அனைத்தையும் புறக்கணிக்கிறேன் என்கிறார் நடிகை பத்ம ப்ரியா.
பட்டியல், மிருகம், பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பத்மப்ரியா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென் இந்தியா சினிமாவை ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். ஆனால் எந்த மொழியிலும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆரம்பத்தில் ஹோம்லி பெண்ணாக வந்த பத்மப்ரியா, பின்னர் கவர்ச்சியாகவும் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நாயகியாக ஜொலிக்க முடியவில்லை. தற்போது தமிழில் எந்த படவாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் ஒரு நல்ல வலுவான கேரக்டருக்காக காத்திருப்பதாக கூறுகிறார் பத்மப்ரியா.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழில் நிறைய படவாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நான் தான் அவற்றை தவிர்த்து வருகிறேன். இதற்கு காரணம் நல்ல வலுவான கேரக்டர் அமையாதது தான். நல்ல வலுவான கேரக்டர் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார்.

03 மார்ச் 2011

இந்தியில் மாதவனுக்கு ஜோடியாகிறார் அனன்யா!

ஜெனிலியா, அனுஷ்கா வரிசையில் இப்போது இந்தியி்ல அடியெடுத்து வைக்கிறார் நடிகை அனன்யா.
மலையாள நடிகையான இவர், சசிக்குமாரின் நாடோடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். சமீபத்தில் தனுஷூடன் இவர் நடித்த சீடன் வெளியாகியுள்ளது.
மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் கைநிறையப் படங்கள் வைத்துள்ள அனன்யா, இப்போது இந்தி திரையுலகிலும் கால்பதிக்கிறார். இந்தியில் மாதவனுடன் சேர்ந்து ஒரு படம் நடிக்கிறார். இதற்காக அவர் இந்தியும் கற்று வருகிறார்.
பாலிவுட்டுக்குப் போவது குறித்து அனன்யா கூறுகையில், "இந்தியில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. அதுவும் மாதவனுடன் இணைந்து நடிப்பது கூடுதல் சந்தோஷத்தை கொடுக்கிறது. இந்தியில் நடிப்பதற்காக அந்த மொழியைக் கற்று வருகிறேன்.
ஏற்கனவே இந்தி கொஞ்சம், கொஞ்சம் தெரியும், இப்போது அதனை முழுமையாக கற்று வருகிறேன். இந்தியில் நடித்தாலும் தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நடிப்பேன்", என்றார்.

01 மார்ச் 2011

கமலுடன் ஜோடி சேரவிரும்பும் ரீமா!

உலக நாயகன் கமலஹாசன் ஜோடியாக நடிக்க ஆசையாக இருக்கிறது. இந்நாள் வரை அது நிறைவேறவில்லை என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரீமாசென்.
இது குறித்து அவர் கூறியதாவது,
எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், விரைவில் திருமணம் என்றும் செய்திகள் வந்துள்ளன. அவை எல்லாம் வெறும் வதந்தி தான். நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கவில்லை. நான் உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டேன்.
என்னைப் பற்றி இதுபோன்ற வதந்திகள் பரவுவது இது இரண்டாவது முறையாகும். ஷிவ்கரன் சிங்குடன் என்னை இணைத்துப் பேசுகின்றனர். அவர் என் நண்பர்களுக்கும் மேலானவர். அவர் என் வாழ்க்கையில் வந்ததை நான் மறுக்கவில்லை.
எனக்கு யாருடன் நிச்சயதார்த்தம் நடந்தாலும் கண்டிப்பாக கூறுவேன். பத்மஸ்ரீ கமலஹாசனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறது. ஆனால் அந்த ஆசை இந்நாள் வரை நிறைவேறவே இல்லை என்றார்.

27 பிப்ரவரி 2011

அமலா நாகரீகப் பெண்ணாகிறார்!

இதுவரை கிராமத்து பைங்கிளியாக பவனி வந்த அமலா பால் முதல் முறையாக மாடர்ன் டிரஸ் மங்கையாக ரசிகர்களின் மனம் கவரப் போகிறாராம்.
கேரளத்திலிருந்து வந்த இந்த அழகிய மைனா, சிந்து சமவெளி மூலம் ரசிகர்களின் கவனிப்புக்குரியவராக மாறினாலும், மைனாதான் ஏற்றம் தந்து நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.
மைனா படத்தி்ல் அவருடைய நடிப்புக்கும், எளிமையான அந்த அழகுக்கும், இன்று முன்னணி ஹீரோக்கள் ரசிகர்களாகி விட்டார்கள். முக்கிய நடிகர்களின் படங்களில் ஜோடி சேரத் தொடங்கியுள்ள அமலா பால் இதுவரை மாடர்ன் டிரஸ் போட்டு எந்தப் படத்திலும் நடித்ததில்லை.
ஆனால் முதல் முறையாக முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தில் மாடர்ன் கேர்ள் ஆக, அதாவது நகரத்து நாயகியாக வரப் போகிறாராம்.
மறைந்த முரளியின் மகன் அதர்வாதான் இப்படத்தின் நாயகன். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அமலா பால்.
இப்படத்தில் தனக்குக் கிடைத்துள்ள வேடம் அழகானது, அனைவரையும் கவரக் கூடியது என்று கூறும் அமலா, முதல் முறையாக மாடர்ன் டிரஸ் போட்டு இப்படத்தில் நடித்துள்ளேன். என்னை கிராமத்துப் பெண்ணாகவே பார்த்துப் பழகிய தமிழக ரசிகக் கண்களுக்கு இது நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என்கிறார் சிரிப்புடன்.
அதையும்தான் பார்த்துருவோமே...!

25 பிப்ரவரி 2011

அம்மாவுக்கும் வாய்ப்புக் கேட்கிறார் இலியானா!

தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக உலா வந்து கொண்டிருக்கும் நடிகை இலியானா, தனது தாய்க்கு சினிமாவில் வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். இலியானாவின் தாய்க்குலம் ஒரு காஸ்ட்யூம் டிசைனர். ஐதராபாத்தில் அவர் காஸ்ட்யூம் ஷோரூம் நடத்தி வருகிறார்.
இலியானாவின் தங்கையும் அந்த ஷோரூமை கவனித்துக் கொள்கிறார். தெலுங்கு திரையுலகில் இலியானாவின் புகழ் பறக்கத் தொடங்கிய நாள் முதல், இவர்களது ஷோரூமும் பிரபலமடைந்து வருகிறது. ஷோரூமை மேலும் பிரபலப்படுத்தும் நோக்குடன் இலியானா ஒரு திட்டத்தை வகுத்து, தனது தாய்க்குலத்திற்கு வாய்ப்பு கேட்க ஆரம்பித்திருக்கிறார். அதாவது அம்மணி நடிக்கும் படங்களில் காஸ்ட்யூம் டிசைனிங் பொறுப்பை தனது தாய்க்குலத்தின் நிறுவனத்திற்கு வழங்கும்படி நிபந்தனை விதித்து வருகிறாராம் இலியானா.
அதேநேரம் இதனை மறுத்திருக்கும் இலியானா, நான் ஹீரோயினாக நடிக்கும் ஷக்தி படத்திற்கு எனது அம்மாவை காஸ்ட்யூம் டிசைனராக நியமிக்குமாறு நிபந்தனை விதித்தாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் துளியும் உண்மை இல்லை. என் அம்மாவின் திறமை ஷக்தி படக்குழுவினருக்கு தெரியும். அதனால்தான் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் முதல்நாள் அம்மா வடிவமைத்த உடையை அணிந்து கொண்டுதான் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன்.
பலரும் டிரஸ் சூப்பர் என்று பாராட்டியதோடு, அம்மாவை டிசைனராக்கியிருக்கிறார்கள். படத்தில் அவர் எனக்கு மட்டும்தான் டிசைனர். அதில் தவறு ஒன்றும் இல்லையே, என்று கூறியுள்ளார்.

23 பிப்ரவரி 2011

கட்டாயப்படுத்தி நடிக்க வைத்து விட்டார்கள்!

எனது விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக படுக்கையறை காட்சியில் நடிக்க வைத்து விட்டார்கள், என்று புதுப்படக் குழுவினர் மீது இளம் நடிகை ஒருவர் பரபரப்பு குற்றம் சாட்டியிருக்கிறார். சாந்தி என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி இருக்கிறது. கவர்ச்சியையும், கிளுகிளுப்பையும் நம்பி வெளியாகி வரும் சமீபத்திய படங்களைப் போலவே இந்த படமும் ஒரு படுக்கையறைக் காட்சியையும், நாயகியின் கவர்ச்சியான நடிப்பையும் நம்பியே உருவாகியிருக்கிறதாம். சாந்தியின் நாயகியாக அர்ச்சனா நடித்திருக்கிறார். இவர் இதற்கு முன்பு புழல், ராமநாதபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் சாந்தி படம் பற்றி பேசுவதற்கே தயங்குகிறார். ஏனாம்? படத்தில் அவர் நடித்திருக்கும் காட்சிகள் அப்படியாம்!
இதுபற்றி அம்மணி அளித்துள்ள பேட்டியில், நல்ல கதையா இருக்கேன்னுதான் நடிக்க சம்மதிச்சேன். ஆனால் மோசமான படுக்கையறை காட்சி ஒன்றை எடுத்திட்டாங்க. நான் மறுத்தபோதும் வற்புறுத்தி வலுக்கட்டாயமாக நடிக்க வச்சிட்டாங்க. இந்த படத்தின் மூலமா நான் சரியான பாடம் கத்துக்கிட்டேன். சினிமாவில் சாதிக்கணும் என்ற எண்ணத்தோடு வர்ற என்னை மாதிரி பெண்களை இப்படிதான் ஏமாத்துறாங்க. அவங்களை நான் கேட்டுக்கறது ஒண்ணே ஒண்ணுதான். முடிஞ்சா நல்ல நல்ல கேரக்டர் கொடுங்க. இல்லைன்னா இப்படி வற்புறுத்தி நடிக்க வச்சு ஏமாற்றாதீங்க, என்று கூறியுள்ளார். இதன் காணொளிக் காட்சி ஏற்கனவே கதையளப்போம்.கொம்மில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

21 பிப்ரவரி 2011

சமீரா ரெட்டியை நடுங்க வைத்த ராத்திரி!

கௌதம் மேனன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் நடுநிசி நாய்கள். இதில் சமீரா ரெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் பாடல்கள் இல்லை. நள்ளிரவில் நடக்கும் திரில்லர் கதையாக இந்தப் படம் இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடு ராத்தியில் சமீரா அலறியடித்து பயந்து போனது எதற்காக தெரியுமா? துப்பாக்கிகளும் கத்திகளும் தன்னை சூழ்ந்ததற்கும் வீரா என்ற கதாபாத்திரம் துரத்தி வந்ததற்கும் அவர் பயப்படவே இல்லை.
ஏன், தண்ணி தொட்டியில் மூழ்க வைத்து சுற்றி பெரிய நான்கு நாய்களை நிறுத்தியபோது கூட அவர் பயப்படவே இல்லை. ஆனால் படத்தில் வீரா கதாபாத்திரம் அவர் தலை முடியை வெட்டுவது போல் ஒரு காட்சி இருக்கிறது. அந்த காட்சியில் தன் உண்மையான முடியை வெட்டி விடுவார்களோ என்று நினைத்துக் கொண்ட சமீரா அலறியடித்து கொண்டு கதறிக் கதறி அழுதிருக்கிறார்.
ஷூட்டிங் சமயம் யூனிட்டே வேடிக்கையாக சிரித்ததாம். அவ்வளவு நாள் வளர்த்த முடியை வெட்டுனா எந்தப் பொண்ணுக்குதான் கண்ணிர் வராது. அந்த ராத்திரி தான் சமீராவுக்கு மறக்க முடியாத ராத்திரியாம்!

19 பிப்ரவரி 2011

சினிமாதான் கவர்ச்சிக்கு மாற்றியது!

சினிமாவில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே காரணம்தான் என்னைப் போன்ற நாயகிகளையும் கவர்ச்சிக்கு மாற்றுகிறது என்றார் நடிகை ஸ்ரேயா.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சினிமாவில் நடிகைகளுக்கு நிர்ப்பந்தங்கள் உள்ளன. கட்டப்பாடுகளும் இருக்கிறது. பெரிய முதலீடுகள் செய்து படங்கள் எடுக்கின்றனர். அவர்களுக்கு லாபம் வர வேண்டும். எனவே இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் விருப்பப்படி நடக்க வேண்டியுள்ளது.
நடிகைகளின் கொள்கை, லட்சியங்களையெல்லாம் மூட்டை கட்டி ஒதுக்கி வைத்து இயக்குநர், தயாரிப்பாளர் விருப்பப்படி நடித்தால்தான் இங்கே நிலைக்க முடியும். அதனால்தான் கதாநாயகிகள் எல்லை தாண்டுகின்றனர். படு கவர்ச்சியாக நடிக்கிறார்கள் என்று விமர்சிக்கின்றனர். கண்ணீர் விட்டு மூக்கு சீந்தி நடித்தால் விருதுகள் வரலாம். தொடர்ந்து படங்கள் வராது எங்களுக்கு.
அது மாதிரி படங்களை ரசிகர்களே பார்க்க மறுக்கிறார்கள். நானே பார்க்க மாட்டேன். கவர்ச்சியாக நடித்தால்தான் நிலைக்க முடிகிறது. எனவே அதை தப்பாக பார்க்காதீர்கள்.
நான் முதலில் நடித்த படத்தில் பாவாடை தாவணி அணிந்து குடும்பப் பாங்காகத்தான் வந்தேன். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. அடுத்து வந்த படத்துக்கும் அதே நிலைதான். ரசிகர்கள் கவர்ச்சியைத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் மனநிலையில் மாற்றம் வந்தால் கவர்ச்சி விலகும். நான் கவர்ச்சிக்கு மாறக் காரணமும் அதுதான்..", என்றார்.

18 பிப்ரவரி 2011

ரஜனி ஜோடி அசின் என்றால் குழப்பம் ஏற்படும்!

ஒரு நடிகருடன் யார் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற அளவுக்கு ரசிகர்களும் அரசியல்வாதிகளும் தீர்மானிப்பது அநேகமாக தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்காவது நடக்குமா... தெரியவில்லை!
ரஜினி நடிக்கும் ராணா படத்தில் அவருக்கு ஒரு ஜோடியாக தீபிகாவும், மற்றொரு ஜோடியாக அசினும் நடிக்கக் கூடும் என்று தெரிகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆனால் பத்திரிகைகளில் இந்தச் செய்தி வெளியானதிலிருந்து, அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
ரஜினி ஜோடியாக அசின் நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லக்கூடாது என்று திரைப்பட கூட்டுக்குழு தடை விதித்தது.
ஆனால் அதை மீறி அசின் இலங்கை சென்று தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டார். இதற்காக 'காவலன்' படத்தில் அவர் நடித்த போதே எதிர்த்தோம். அந்த படம் 40 சதவீதம் முடிந்ததால் நீக்க இயலாது என்றும் அடுத்த படத்தில் அசினை ஒப்பந்தம் செய்ய மாட்டோம், என்றும் தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது.
இதனால் போராட்டத்தைக் கைவிட்டோம். தற்போது ரஜினி ஜோடியாக அசின் நடிக்கப் போவதாக வெளியாகும் செய்திகள் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அவரை ஜோடியாக்க ரஜினி சம்மதிக்க கூடாது. எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டல் பட பூஜையில் புகுந்து போராட்டம் நடத்துவோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

16 பிப்ரவரி 2011

சில்க் எதையுமே என்னிடம் மறைச்சதில்லை!

சில்க் ஸ்மிதாவுக்கு பெயர் வெச்சதே நான்தான்; சினிமா, துன்பம், காதல், செக்ஸ் என எல்லாத்தையும் என்கிட்ட அந்த பொண்ணு சொல்லியிருக்கு என்று நடிகர் விணு சக்கரவர்த்தி கூறியுள்ளார். சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை இந்தியில் தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார்கள்.
அந்த‌ படத்தில் சில்க் வேடத்தில் நடிகை வித்யாபாலன் நடித்து வருகிறார். இதுபற்றி நடிகர் விணுசக்கரவர்த்தி அளித்துள்ள பேட்டியில், சில்க் வேடத்தில் நடிக்க வித்யாபாலன் பொருத்தமானவர் இல்லை; தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய், நமீதா ஆகியோர்தான் அந்த வேடத்தில் நடித்த தகுதியானவர்கள் என்று கூறியுள்ளார்.
விணுசக்கரவர்த்தி ஏன் தேவையில்லாமல் சில்க் படத்தில் மூக்கை நுழைக்கிறார்?, என்ற கேள்விக்கு அவரே தனது பேட்டியில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
பதினெட்டு வயசுல சில்க்கை ஓரிடத்தில் பார்த்து சினிமாவில் நடிக்க அழைச்சிட்டு வந்தவன் நான். அவருக்கு சில்க் ஸ்மிதான்னு பேரு வச்சதும் நான்தான். ஒரு வருஷம் எப்படி இருக்கணும், எப்படி பழகணும்னு சொல்லிக் கொடுத்து 19 வயசுல நடிக்க வச்சேன். வண்டிச்சக்கரம் படத்தில் வடிவுங்கிற அந்த கேரக்டரை உருவாக்கி நடிக்க வச்சதோட முடிஞ்சு போகல எனக்கும் சில்க்குக்குமான சம்பந்தம். முப்பது வயசுல அந்த பொண்ணு சாகிற வரைக்கும் ஒண்ணா இருந்திருக்கோம். தான் யாரு? அப்பா அம்மா யாரு? ஆறு வயசுலேர்ந்து பட்ட துன்பம் என்ன? காதல்னா என்ன? செக்சுன்னா என்ன?ன்னு எங்கிட்ட அந்த பொண்ணு சொல்லாத விஷயமே இல்ல. சில்க்குங்கறது தனி மனுஷி இல்ல.
அதே நேரத்தில் காந்தி, நேருவோட கதையை எடுக்கிற மாதிரி அவரை பொதுவானவரா கருதி யாரு வேணும்னாலும் சில்க் பற்றி படம் எடுத்திட முடியாது. அவரோட 24 வருஷ வாழ்க்கையை என்னைவிட நல்லா தெரிஞ்சவன் யாருமே இல்ல. அப்படியிருக்கும் போது அவரை இந்த சினிமாவுக்கு அறிமுகப்படுத்தின எங்கிட்ட பர்மிஷன் வாங்கணுமா வேணாமா? இப்படி ஒரு படம் எடுக்கப் போறோம்னு என் காலில் விழுந்து கேட்டிருந்தா ஆசிர்வாதம் பண்ணியிருப்பேன். நானே சில்க் வாழ்க்கையில் நடந்த உலகத்திற்கு தெரியாத பல விஷயங்களை சொல்லியிருப்பேனே? என்னிடம் கேட்கலையேங்கிற வருத்தம்தான் கோபமா மாறியிருக்கு.
நான் உடல்நிலை சரியில்லாம மூணு வருஷம் லண்டன்ல இருக்கிற மகள் வீட்டுக்கு போயிட்டேன். திரும்பி வந்தபின்புதான் இப்படி ஒரு விஷயம் நடந்திருக்குன்னே தெரிஞ்சுது. ரொம்ப அதிர்ச்சியாகிட்டேன். சில்க்கோட ஸ்பெஷலே அவரோட கண்ணுதான். ஆனால் இந்த வித்யா பாலன் கண்ணை சில்க் கண்ணோட ஒப்பிட்டு பார்க்க முடியுமா? சில்க் வேடத்தில் நடிக்கிற தகுதி தீபிகா படுகோனேவுக்கும், ஐஸ்வர்யா ராயுக்கும்தான் இருக்கு. தமிழ்ல எடுத்தா நமீதாவை வச்சு எடுக்கலாம். நான் கூட நமீதாவை பார்க்கும்போது இந்த விஷயத்தை சொல்லியிருக்கேன். இந்த படத்தை வெளிவர விடமாட்டேன். படத்தை எடுக்குற வரைக்கும் சும்மா இருப்பேன். படத்தை என்கிட்ட போட்டுக் ‌காட்டணும். அதுக்கு சம்மதிக்கலைன்னா படத்தை வெளியிட தடை கோரி வழக்கு போடுவேன், என்று கூறியுள்ளார்.
நடிகர் விணுசக்கரவர்த்தி, பல வருடங்களுக்கு முன்பே சில்க் கதையை எழுதி பிலிம் ரைட்டர்ஸ் யூனியன்ல பதிவு ‌செய்து வைத்திருக்கிறாராம். அதற்கான ஆதாரங்களை வைத்திருப்பதாக கூறும் விணு, சில்க்கைப் பற்றி வெளிவராத பல தகவல்களுடன் ஒரு படத்தை தமிழில் நமீதாவை வைத்து எடுக்கப் போகிறாராம்.

14 பிப்ரவரி 2011

காதலர் தினத்தில் ஜெனிலியாவின் காதலுக்கு பச்சைக்கொடி!

காதலர் தினத்தில் ஜெனிலியாவின் காதலும் கைகூடியுள்ளது. தனது காதலரும் நடிகருமான ரிதேஷ் தேக்முக்கை திருமணம் செய்து கொள்ள இருதரப்பிலும் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
இவருக்கும் மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் ரிதேஷ் தேஷ்முக்கும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலை மணமகன் வீட்டார் எதிர்த்தனர். ஒரு நடிகை தனக்கு மருமகளாக வருவதா என்று வெளிப்படையாக கண்டித்தார் விலாஸ்ராவ் தேஷ்முக் மனைவி. மேலும் ஜெனிலியாவுக்கும் மிரட்டல்கள் வந்தன. ஆனால் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர் இருவரும்.
இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இவ்வருடத்திலேயே இந்த திருமணம் நடைபெற உள்ளது, ஒரு நிபந்தனையுடன். 'திருமணத்துக்கு பின் நடிக்கக் கூடாது' என்பதுதான் அந்த நிபந்தனை. இதற்கு ஜெனிலியாவும் ஒப்புக் கொண்டுள்ளார். இப்போது கைவசம் உள்ள படங்களை விரைவாக ஜெனிலியா முடிக்கிறார்.
படங்கள் ரிலீசான கையோடு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு திருமணம் செய்கிறார்.
இப்போது காதலுக்கு பெற்றோர் சம்மதித்ததைத் தொடர்ந்து ஜெனிலியாவும் ரிதேஷும் இன்று காதலர் தினத்தை பார்ட்டி வைத்துக் கொண்டாடுகிறார்களாம்!

11 பிப்ரவரி 2011

கவர்ச்சியை மட்டுமே நம்பி வெளிவரும் படங்கள்!

கதை மற்றும் நடிப்பின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ… கவர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்து ரீலிஸ் ஆகும் சில படங்களை தமிழ் ரசிகர்கள் வெற்றிபெறச் செய்ததாலோ என்னவோ தமிழ் திரையுலகிற்கு டப்பிங் கவர்ச்சி படங்களுக்கு என்றுமே பஞ்சம் வந்ததில்லை. அந்த வரிசையில் காரசாரமான ஆந்திர மசாலா படங்கள் இரண்டு கவர்ச்சியை மட்டுமே நம்பி திரையிடப்படவிருக்கின்றன. நம்மூரில் காட்டாத கவர்ச்சியை‌யெல்லாம் தெலுங்கு‌ தேசத்திற்கு சென்று காட்டும் நம்மூர் நாயகிகள் நடித்த படங்கள்தான் அவை.
நடிகர் நாகார்ஜுனா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரியாமணியும், அனுஷ்காவும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டி நடித்திருக்கும் படம் வம்பு என்ற பெயரில் ரீலிஸ் ஆகிறது. இதேபோல நடிகர் மகேஷ்பாபுவும்- அனுஷ்காவும் நடித்த படம் ஒன்றும் ரீலிஸ் ஆகவிருக்கிறது. இந்த 2 படங்களுமே செய்தியின் ஆரம்பத்தி்ல் சொன்னபடி நாயகியரின் கவர்ச்சியை மட்டுமே நம்பி தமிழக தியேட்டர்களை அலங்கரிக்கவுள்ளன. தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் பிரத்யேக கவர்ச்சி போஸ்டர்களும் தயாராகி விட்டன. அனுஷ்கா – ப்ரியாமணியின் கவர்ச்சியை தமிழ் ரசிகர்கள் ரசிக்காமல் விட்டுவிடுவார்களா என்ன?

09 பிப்ரவரி 2011

இயக்குனராகும் சாயாசிங்.

நடிகை சாயாசிங் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். திருடா திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சாயாசிங், அந்த படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார். ஆனால் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை; அப்படி அமைந்த வாய்ப்புகளும் எதிர்பார்த்தபடி பெயரைப் பெற்றுத்தரவில்லை.
அதேநேரம் திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டதால் அடுத்தடுத்து ஒத்தப்பாட்டு வாய்ப்புகளே வந்தன. இதனால் பல படங்களை மறுத்த சாயாசிங், கடைசியாக அனந்தபுரத்து வீடு படத்தில் நாயகியாக நடித்தார். ஆனால் அந்த படமும் ஓடவில்லை. இ‌தனால் அம்மணி இயக்குனர் அவதாரம் எடுக்க முடிவு செய்து பெங்காலி சினிமா பக்கம் போய் விட்டார்.
இதுபற்றி சாயாசிங் கூறுகையில், சினிமாவில் நடிகையாக, வழக்கமான காதலையும், டான்சையும் மட்டுமே செய்து வந்தேன். அதனால், தேடி வந்த சில வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். சினிமாவில், நடிப்பின் அடுத்த கட்டமாக டைரக்ஷனை பார்க்கிறேன். இதில் எனது திறமையை நிரூபிக்க வேண்டும். படம் இயக்குவது சிறப்பாக இருக்கிறது. இது என் கனவு என்று கூட சொல்லலாம்.
என் கனவு நிறைவேற இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது. இதில் நானே ஹீரோயினாக நடிக்கிறேன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தொடர்ந்து படம் இயக்குவேனா என்பது தெரியாது. கன்னடத்தில் சில வாய்ப்புகள் வந்துள்ளது. அங்கு நடிப்பேன், என்றார்.

07 பிப்ரவரி 2011

ஏன்தான் என்னைப்பத்தி இவ்ளோ செய்திகள் வருதோ!

எப்படித்தான் இந்த செய்தியெல்லாம் வருதோ... நாளும் ஒரு விதமான செய்தி என்னைப் பற்றி வருகிறது என்று கூறியுள்ளார் த்ரிஷா.
சில தினங்களாக இணையதளங்களில் த்ரிஷா பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.
த்ரிஷாவுக்கு திருமணம் என்று அவருக்கு நெருக்கமான சிலரே வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். அவரது தாயார் உமா கிருஷ்ணன் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் மும்முரமாக உள்ளாராம்.
இன்னொரு பக்கம் எப்படியாவது ரஜினியின் ஜோடியாக ராணாவில் நடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளாராம் த்ரிஷா.
இந்த நிலையில் அவரது மார்பில் உள்ள (நீண்ட காலமாக) டாட்டூவுக்கு புதிய விளக்கம் கற்பித்து இணையங்களில் செய்திகள் வரத்துவங்கியுள்ளன. தொடர்ந்து தன்னைப் பற்றி வரும் செய்திகள் குறித்து இப்படிக் கூறியுள்ளார் த்ரிஷா:
"அது ஏன் என்னைப் பத்தி மட்டும் இவ்ளோ செய்திகள் வருதுன்னே தெரியல. கல்யாண மேட்டர்ல நிறைய கற்பனை செய்திதான் வருது. நானே சொல்றேன். எதுக்கு அவசரம். மத்த செய்திகள் எதுவும் இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது" என்றார்.

04 பிப்ரவரி 2011

லண்டன் நண்பரை மணந்தார் அனுஹாசன்!

'காபி வித் அனு' புகழ் அனுஹாசன் தனது நீண்டகால லண்டன் பாய்பிரண்ட்டை திருமணம் செய்துள்ளார். இந்திரா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனின் மகள் ஆவார். அனுஹாசனுக்கும், விகாஷ் என்பவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்துப் பெற்றனர். பின்னர் சிலகாலம் தனிமையில் வாழ்ந்து வந்த அனுஹாசன், ‌பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்தார். அதன்பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அனுஹாசன், விஜய் டி.வி.யின் 'காபி வித் அனு' மூலம் பிரபலமானார்.
இதனிடையே அனுவுக்கு இணையத்தளம் மூலம் லண்டனைச் சேர்ந்த கிரகாம் என்பவரது அறிமுகம் ஏற்பட்டது. முதலில் நட்பாக ஆரம்பித்தது, பின்னர் காதலாக வளர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்தாண்டு ‌திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கமல்ஹாசன், கெளதமி, ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன், மணிரத்தினம், சுஹாசினி மற்றும் இருவீட்டராது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்திற்கு பின்னர் ‌சென்னையில் இருப்பாரா? அல்லது லண்டனில் இருப்பாரா? என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லையாம் அனுஹாசன்.

01 பிப்ரவரி 2011

பூஜா நடிப்புக்கு முழுக்கு!

ஜே.ஜே" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா, அஜீத்துடன் "அட்டகாசம்", மாதவனுடன் "தம்பி", ஜீவாவுடன் "பொறி" என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். நடிப்பு திறமை இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்‌லை. கடைசியாக டைரக்டர் பாலா இயக்கத்தில் வெளிவந்த "நான் கடவுள்" படத்தில் கண்பார்வையற்ற பெண்ணாக நடித்தார். வித்யாசமான கேரக்டர் என்பதால் நிச்சயம் தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் விருதும் கிடைக்கவில்லை, மேற்கொண்டு படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் மனம் நொந்துபோன பூஜா, சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
தற்போது பூஜாவை பற்றி விசாரித்தபோது அவர் பெங்களூரில் செட்டிலாகிவிட்டதாக கூறப்படுகிறது. பூஜா ஒரு நடிகை மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த மேலாளாரும் கூட. பெங்களூரில் உள்ள முன்னணி ஐ.டி.கம்பெனி ஒன்றில் மேனஜராக பணியாற்றி வருவதாகவும், கம்யூட்டர் இன்ஜினீயர் ஒருவரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வருங்கால கணவரின் கோரிக்கையை ஏற்று சினிமாவிற்கு முழுக்கு போட்டதாகவும் தெரிகிறது.

31 ஜனவரி 2011

கவர்ச்சிக்கு ஆசைப்படும் அஞ்சலி!

குடும்பப் பாங்கான நடிகை என்று எழுதுவதைப் படிக்கும் போது இனித்தாலும், பைசா மேட்டர் என்று வந்தால், கவர்ச்சி நடிகைகளுக்கு மட்டும்தான் ஏகத்துக்கும் 'மீட்டர்'!
சினேகா போல ஓரிரு நடிகைகள்தான் கடைசி வரை முழு கவர்ச்சிக்கு நோ சொல்லிவிட்டு நடிப்பைத் தொடர்கிறார்கள். மற்றவர்கள் முதல் படத்தில் முத்தழகியாக வந்து, அடுத்தடுத்த படங்களில் முற்றும் துறந்தவர்களாக மாறிவிடுகிறார்கள். சினிமா அப்படி!
இந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக இடம்பெற்றுள்ளவர் நடிகை அஞ்சலி. கற்றது தமிழில் அறிமுகமானாலும், அங்காடி தெருதான் இவருக்கு விலாசம் கொடுத்தது. இடையில் ஆயுதம் செய்வோம் படத்தில் கவர்ச்சி காட்ட முயன்றார். படம் பப்படமாகிவிட்டது.
இப்போது வரிசையாக பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எதிர்ப்பார்த்த 'ரேட்' கிடைத்தபாடில்லை. எனவே மீண்டும் கவர்ச்சி அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் அஞ்சலி.
"இப்போதுதான் பெரிய வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. மகிழ்ச்சியாக உள்ளது. அழுது வடிகிற பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று சிலர் நம்பிக்கொண்டுள்ளனர். இதை மாற்றத்தான் கவர்ச்சியான வேடங்களாக இருந்தாலும் உடனே ஒப்புக் கொள்கிறேன்.
அஜீத்துடன் மங்காத்தா படத்திலும் நடிக்கிறேன். ஏ.ஆர். முருகதாஸ், படமொன்றிலும் நடிக்கிறேன்...", என்றார்.

28 ஜனவரி 2011

கண் பார்வையற்றோருக்கு உதவுங்கள்-ஸ்ரேயா.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்து, பின் இந்தி, ஆங்கிலம் என வெவ்வேறு மொழிகளில் ஒரு ரவுண்ட் வந்த ஸ்ரேயாவிற்கு தமிழில் இப்போது கைவசம் உள்ள படம் ரவுத்திரம். ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்திப் பட உலகில் அதிகம் இருப்பதுபோல தன்னைக் காட்டிக் கொள்கிறார் ஸ்ரேயா. அப்படியும் வாய்ப்பு மட்டும் எட்டாக் கனியாகவே உள்ளது. எனவே ஓய்வு நேரத்தில் யோகா, பொது நலப் பணிகள் என உபயோகமாகக் கழிக்க முடிவு செய்துள்ளார்.
இப்போது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து உதவுமாறு பேட்டிகள் கொடுத்து வருகிறார் ஸ்ரேயா.
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "பார்வையற்றோருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்திட வேண்டும். அவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் மூலம் புதிய வழிகளைத் திறக்கலாம்.
போதிய கல்வி மற்றும் பயிற்சிகள் அளித்து வேலைவாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும். வருத்தமான விஷயம் என்னவென்றால் யாருமே பார்வையற்றோருக்கு வேலை கொடுப்பதில்லை. சமூகம் அவர்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏற்றத்தாழ்வு நீங்கும். என்னால் முடிந்த அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் முயற்சிகளையும் மேற்கொள்வேன்," என்றார்.
ஏற்கெனவே சில ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவி அளித்து வருகிறார் ஸ்ரேயா என்பது குறிப்பிடத்தக்கது.
படங்களில் அதிகம் தலை காட்டுவதில்லையே என்று கேட்டதற்கு, "நானாகத்தான் குறைத்துக் கொண்டேன். நல்ல கதை, பேசப்படும் அளவுக்குப் பாத்திரம்... இதுதான் முக்கியம். பணம் பெரிதல்ல...", என்றார்.

25 ஜனவரி 2011

அமலாவின் வாயால் வந்த வினை!

முளைச்சு ஒன்றரை இலை விடுவதற்குள் அலப்பறையை ஆரம்பித்தவர் அமலா பால். அதற்கான அறுவடை வேகவேகமாக கிடைத்து வருகிறது.
அமலாவுக்கு மைனா படம் திருப்புமுனையாக அமைந்த போது பலரும் அவருக்கு அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தனர். ஆனால் விக்ரம் படத்தில் கமிட்டானதும் இவர்களை துச்சமாக நினைக்க‌த் தொடங்கினார் அமலா. விளைவு?
களவாணி படத்தின் இயக்குனர் சற்குணம் தனது அடுத்தப் படத்தில் அமலாவை ஒப்பந்தம் செய்திருந்தார். ஓவர் அலட்டல் காரணமாக அவரை தற்போது படத்திலிருந்தே நீக்கியிருக்கிறார்.
அதேபோல் முருகதாஸ், ஹாலிவுட் நிறுவன கூட்டுத் தயா‌ரிப்பில் சரவணன் இயக்கும் படத்திலிருந்தும் அமலாவுக்கு கல்தா கொடுத்திருக்கிறார்கள். அந்த வேடத்தில் அனன்யா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

23 ஜனவரி 2011

வயிற்றுக்கு பிரச்சனையின்றி சாப்பிடும் முறை!

சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சனை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சனை நீளும்.
எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.
அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த ‌சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.
சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.
நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.
சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.
சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.
சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.
சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.
பரங்கிக்காய், பெரிய காராமணி, காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.
ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.

19 ஜனவரி 2011

மன அழுத்தத்தில் இருந்து விடுபடவேண்டுமானால் கட்டிப்பிடியுங்கள்!

வா‌ழ்‌க்கை‌யி‌ல் எ‌ப்போது‌ம் டெ‌ன்ஷனா? மன அழு‌த்‌த‌‌த்தா‌ல் அ‌வ‌தி‌ப்படு‌கி‌றீ‌ர்களா? ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்று‌கிறதா? கை‌யி‌ல் வெ‌‌ண்ணையை வை‌த்து‌க் கொ‌ண்டு நெ‌ய்‌க்கு அலைவானே‌ன்?
ஆ‌ம்.. உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌த் துணை‌யிடமே உ‌ள்ளது மரு‌ந்து. வா‌ழ்‌க்கை‌த் துணையை அடி‌க்கடி க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பதா‌ல் மன அழு‌த்த‌ம் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வு ஒ‌ன்று கூறு‌கிறது.
சு‌வி‌ட்ச‌‌ர்லா‌ந்து நா‌‌ட்டி‌ல் உ‌ள்ள ஜூ‌ரி‌ச் ப‌ல்கலை‌க் கழக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த டா‌க்ட‌ர் ‌பீ‌ட் டி‌ட்ச‌ன் தலைமை‌யிலான குழு‌வின‌ர் சுமா‌ர் 51 த‌ம்ப‌திக‌ளிட‌ம் இது கு‌றி‌த்த ஆ‌ய்வை நட‌த்‌தின‌ர்.
எ‌ப்படி‌ப்ப‌ட்ட ப‌ணி அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், அ‌திக மன உளை‌ச்சலு‌க்கு ஆளானவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், வார‌த்‌தி‌ல் பல முறை து‌ணையை‌க் க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பது, மு‌த்த‌மிடுவது, உடலுறவு‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ஈடுபடு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு மனு அழு‌த்த‌ம் குறை‌ந்‌திரு‌ந்தது.
இது வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு ‌ஆ‌‌ய்வு ம‌ட்டும‌ல்ல. அதாவது அ‌றி‌விய‌ல் ‌ரீ‌தியாகவு‌ம் இதனை ஆ‌ய்வு செ‌ய்தவ‌ர்க‌ள் ‌விள‌க்கு‌கிறா‌ர்க‌ள்.
அதாவது, அலுவலக ‌பிர‌ச்‌சினைக‌ள், ‌வீ‌ட்டு ‌பிர‌ச்‌சினைக‌ள் என எதையு‌ம் த‌ங்களது படு‌க்கை அறை‌க்கு‌ள் நுழைய ‌விடாம‌ல், வா‌ழ்‌க்கை‌த் துணையை அ‌‌ன்பாக நட‌த்து‌ம், ஒருவரு‌க்கொருவ‌ர் த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு, மன அழு‌த்த‌த்து‌க்கு காரணமான கா‌ர்டிசா‌ல் எ‌ன்ற ஹா‌ர்மோ‌ன் குறைவான அள‌விலேயே சுர‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலு‌ம் மன அழு‌த்த‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌சில த‌ம்ப‌திகளு‌க்கு இடையே, நெரு‌க்க‌த்தை உருவா‌‌க்‌கிய‌ப் ‌பிறகு அவ‌ர்களது மன அழு‌த்த‌ம் பெருமளவு குறை‌ந்ததாகவு‌ம் கூ‌றியு‌ள்ளன‌ர். வெறு‌ம் மன அழு‌த்த‌த்தை‌க் குறை‌ப்பத‌‌ற்காக ம‌ட்‌டு‌ம் நமது வா‌‌ழ்‌க்கை‌த் துணையை‌க் க‌ட்டி‌பிடி‌ப்பதா‌ல் ‌எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. இருவருமே மன‌ம் ஒரு‌மி‌த்து, த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌க்கா‌ட்டு‌ம் ‌விதமாக நெரு‌க்கமாக இரு‌ப்பதா‌ல்தா‌ன் உ‌ண்மையான பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.
இதையு‌ம் பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்ட ‌பீ‌ட் டி‌ட்ச‌ன்.

17 ஜனவரி 2011

சீமான்,சத்தியராஜ் இணையும் சட்டப்படி குற்றம்!

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த படம் சட்டம் ஒரு இருட்டறை. 1981 இல் வெளிவந்த இந்தப் படம் அந்த நேரத்தில் பெரிய ஹிட். இதை இப்போது 'சட்டப்படி குற்றம்' என்ற தலைப்பில் அவரே ரீமேக் செய்ய இருக்கிறார். இதில் சீமான், சத்யராஜ் இணைந்து நடிக்கிறார்கள். ஏற்கெனவே இவர் இயக்கத்தில் அமீர் நடிப்பதாக இருந்தது. ஆனால், நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டு அதன் பிறகு எஸ்கேப் ஆகிவிட்டார் அமீர்.
நீண்ட நாள் கழித்து எஸ்.ஏ.சி நடிப்பில் நடிப்பதில் சத்யராஜுக்கு சந்தோஷமாம். சீமானும் தன் கோபத்தை காட்ட நல்ல வாய்ப்பாக இது இருக்கும் என்று நினைக்கிறாராம். படத்தை இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி இயக்க இருக்கிறாராம் எஸ்.ஏ.சி. சென்னையிலும் ஈரோடு காட்டு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். தன் மகன் விஜய்யின் மக்கள் இயக்க மாநாடு வேலைகளில் இப்போது பிசியாக இருக்கிறார் எஸ்.ஏ.சி. பொங்கலுக்கு பிறகு மாநாடு. அதன் பிறகு சட்டப்படி குற்றம்...

14 ஜனவரி 2011

கருத்தரித்த பெண்கள் கைபேசி பாவித்தால் பிள்ளைகள் முரடர்கள் ஆவார்களாம்.

கர்ப்பமடைந்த பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தினால், அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது' என, அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மொபைல் போனுக்கும், குழந்தைகள் நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியதாவது:
மொபைல்போன் மற்றும் குழந்தைகள் நலன் பற்றிய இந்த ஆய்வில், 7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர். உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர்.
இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது தான் காரணம் என தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெற்றோரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு லீகா கூறினார்.

12 ஜனவரி 2011

கமலின் மகள் என்பதால் எனக்கு பொறுப்பு அதிகம்!

கலையை என் தந்தையிடமும் ஒழுக்கத்தை தாயிடமும் கற்றேன். அதே நேரம் தப்பு செய்தால் தண்டனை அனுபவித்தே தீரணும் என்பார் என் தந்தை கமல்ஹாஸன். இதை மனதில் வைத்துள்ளேன், என்றார் நடிகை ஸ்ருதி.
கமல் மகள் ஸ்ருதி 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் சித்தார்த் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நடிகையானது என் சிறு வயது கனவு இசையமைத்தல், பாடுதல், நடிப்பு இவற்றில் நடிக்கவே ரொம்ப பிடிக்கிறது. இசையமைப்பது கடினமான வேலை.
கமல் மகள் என்ற முத்திரையால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது. கமல் மகளாக என்னை பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கலையை என் தந்தையிடமும், ஒழுக்கம், கட்டுப்பாடுகளை தாயிடமும் கற்றேன். நான் அழகாக இருப்பதாக கூறுகிறார்கள்.
என் அழகு ரகசியம் என்பது நிம்மதியான தூக்கம். நிறைவாக தூங்கினால் முகத்தில் பொலிவு ஏற்படும் முகத்தை அடிக்கடி சுத்தம் செய் வேன், அரிசி உணவுகளை சாப்பிட மாட்டேன்.
சர்க்கரையும் சேர்த்துக் கொள்ள மாட்டேன். தெலுங்கு இயக்குனர் கே.விஸ்வநாத், என்னை வைத்து ஒரு படம் இயக்க விரும்பினார். கால்ஷீட் இல்லாததால் அவர் படத்தில் நடிக்க முடியவில்லை. என் தந்தை நிறைய அறிவுரைகள் சொல்லி இருக்கிறார்.
தப்பு செய்தால் அதற்கான பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் என்பார். அதேநேரம் என் நடிப்பு சம்பந்தமாக ஆலோசனைகள் எதுவும் அவர் சொல்வதில்லை,"என்றார்.

09 ஜனவரி 2011

காதல் தெரிவில் எச்சரிக்கையாக இருங்கள்!

நீங்கள் மணமாகாத இளம் பெண் என்றால் உங்களை பல இளைஞர்கள் காதலிக்க கூடும். காதல் என்பது திருமணம் என்ற புனிதமான ஒரு நிலையை நோக்கி உங்களை கொண்டு செலுத்தும் ஒரு சக்தி, அதனால் காதல் விஷயத்தில் எச்சரிக்கை மனப்பான்மை வேண்டும்.
உங்களை காதலிப்பதாகக் கூறும் இளைஞன் உங்கள் அழகை மட்டுமே வர்ணிப்பவனாக இருந்தால் அவனை நம்பாதீர்கள். ஏனென்றால் உங்கள் அழகு எந்தச் சமயத்திலும் பின்னாளில் குறையக்கூடும். திருமணமான பிறகு அழகு குறைந்தபோது உங்களிடம் கவர்ச்சியை எதிர்பார்த்த இளைஞன் ஏமாற்றமுற்று தடம் மாறக்கூடும்.
அழகாக கவர்ச்சியாக இருக்கிறான் என்பதற்காக எந்த ஓர் இளைஞனையும் பெண்கள் காதலிக்கக் கூடாது. அழகு என்பது இனிப்பு பலகாரங்களுக்கு போடப்படும் வண்ணம் போன்றது. வண்ணம்தான் பண்டத்திற்குக் கவர்ச்சியை கொடுக்கக்கூடும். ஆனால் வண்ணம் இல்லாததினாலேயே தின்பண்டத்தின் சுவை கெட்டுவிடப் போவதில்லை.தின்பண்டத்தில் கலந்துள்ள இனிப்பு போன்றது ஓர் இளைஞனின் குண நலன்கள். இனிப்பு இல்லாவிட்டால் தின்பண்டமே இல்லை என்பது போல, வாழ்க்கைக்கு எழில் சேர்ப்பது கணவராக வருபவரின் குணநலன்தான்.
ஆகவே தங்கள் காதல் ஜோடியை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.