பக்கங்கள்

19 பிப்ரவரி 2011

சினிமாதான் கவர்ச்சிக்கு மாற்றியது!

சினிமாவில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே காரணம்தான் என்னைப் போன்ற நாயகிகளையும் கவர்ச்சிக்கு மாற்றுகிறது என்றார் நடிகை ஸ்ரேயா.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சினிமாவில் நடிகைகளுக்கு நிர்ப்பந்தங்கள் உள்ளன. கட்டப்பாடுகளும் இருக்கிறது. பெரிய முதலீடுகள் செய்து படங்கள் எடுக்கின்றனர். அவர்களுக்கு லாபம் வர வேண்டும். எனவே இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் விருப்பப்படி நடக்க வேண்டியுள்ளது.
நடிகைகளின் கொள்கை, லட்சியங்களையெல்லாம் மூட்டை கட்டி ஒதுக்கி வைத்து இயக்குநர், தயாரிப்பாளர் விருப்பப்படி நடித்தால்தான் இங்கே நிலைக்க முடியும். அதனால்தான் கதாநாயகிகள் எல்லை தாண்டுகின்றனர். படு கவர்ச்சியாக நடிக்கிறார்கள் என்று விமர்சிக்கின்றனர். கண்ணீர் விட்டு மூக்கு சீந்தி நடித்தால் விருதுகள் வரலாம். தொடர்ந்து படங்கள் வராது எங்களுக்கு.
அது மாதிரி படங்களை ரசிகர்களே பார்க்க மறுக்கிறார்கள். நானே பார்க்க மாட்டேன். கவர்ச்சியாக நடித்தால்தான் நிலைக்க முடிகிறது. எனவே அதை தப்பாக பார்க்காதீர்கள்.
நான் முதலில் நடித்த படத்தில் பாவாடை தாவணி அணிந்து குடும்பப் பாங்காகத்தான் வந்தேன். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. அடுத்து வந்த படத்துக்கும் அதே நிலைதான். ரசிகர்கள் கவர்ச்சியைத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் மனநிலையில் மாற்றம் வந்தால் கவர்ச்சி விலகும். நான் கவர்ச்சிக்கு மாறக் காரணமும் அதுதான்..", என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக