
இதனிடையே அனுவுக்கு இணையத்தளம் மூலம் லண்டனைச் சேர்ந்த கிரகாம் என்பவரது அறிமுகம் ஏற்பட்டது. முதலில் நட்பாக ஆரம்பித்தது, பின்னர் காதலாக வளர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்தாண்டு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கமல்ஹாசன், கெளதமி, ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன், மணிரத்தினம், சுஹாசினி மற்றும் இருவீட்டராது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்திற்கு பின்னர் சென்னையில் இருப்பாரா? அல்லது லண்டனில் இருப்பாரா? என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லையாம் அனுஹாசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக