பக்கங்கள்

16 பிப்ரவரி 2011

சில்க் எதையுமே என்னிடம் மறைச்சதில்லை!

சில்க் ஸ்மிதாவுக்கு பெயர் வெச்சதே நான்தான்; சினிமா, துன்பம், காதல், செக்ஸ் என எல்லாத்தையும் என்கிட்ட அந்த பொண்ணு சொல்லியிருக்கு என்று நடிகர் விணு சக்கரவர்த்தி கூறியுள்ளார். சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை இந்தியில் தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார்கள்.
அந்த‌ படத்தில் சில்க் வேடத்தில் நடிகை வித்யாபாலன் நடித்து வருகிறார். இதுபற்றி நடிகர் விணுசக்கரவர்த்தி அளித்துள்ள பேட்டியில், சில்க் வேடத்தில் நடிக்க வித்யாபாலன் பொருத்தமானவர் இல்லை; தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய், நமீதா ஆகியோர்தான் அந்த வேடத்தில் நடித்த தகுதியானவர்கள் என்று கூறியுள்ளார்.
விணுசக்கரவர்த்தி ஏன் தேவையில்லாமல் சில்க் படத்தில் மூக்கை நுழைக்கிறார்?, என்ற கேள்விக்கு அவரே தனது பேட்டியில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
பதினெட்டு வயசுல சில்க்கை ஓரிடத்தில் பார்த்து சினிமாவில் நடிக்க அழைச்சிட்டு வந்தவன் நான். அவருக்கு சில்க் ஸ்மிதான்னு பேரு வச்சதும் நான்தான். ஒரு வருஷம் எப்படி இருக்கணும், எப்படி பழகணும்னு சொல்லிக் கொடுத்து 19 வயசுல நடிக்க வச்சேன். வண்டிச்சக்கரம் படத்தில் வடிவுங்கிற அந்த கேரக்டரை உருவாக்கி நடிக்க வச்சதோட முடிஞ்சு போகல எனக்கும் சில்க்குக்குமான சம்பந்தம். முப்பது வயசுல அந்த பொண்ணு சாகிற வரைக்கும் ஒண்ணா இருந்திருக்கோம். தான் யாரு? அப்பா அம்மா யாரு? ஆறு வயசுலேர்ந்து பட்ட துன்பம் என்ன? காதல்னா என்ன? செக்சுன்னா என்ன?ன்னு எங்கிட்ட அந்த பொண்ணு சொல்லாத விஷயமே இல்ல. சில்க்குங்கறது தனி மனுஷி இல்ல.
அதே நேரத்தில் காந்தி, நேருவோட கதையை எடுக்கிற மாதிரி அவரை பொதுவானவரா கருதி யாரு வேணும்னாலும் சில்க் பற்றி படம் எடுத்திட முடியாது. அவரோட 24 வருஷ வாழ்க்கையை என்னைவிட நல்லா தெரிஞ்சவன் யாருமே இல்ல. அப்படியிருக்கும் போது அவரை இந்த சினிமாவுக்கு அறிமுகப்படுத்தின எங்கிட்ட பர்மிஷன் வாங்கணுமா வேணாமா? இப்படி ஒரு படம் எடுக்கப் போறோம்னு என் காலில் விழுந்து கேட்டிருந்தா ஆசிர்வாதம் பண்ணியிருப்பேன். நானே சில்க் வாழ்க்கையில் நடந்த உலகத்திற்கு தெரியாத பல விஷயங்களை சொல்லியிருப்பேனே? என்னிடம் கேட்கலையேங்கிற வருத்தம்தான் கோபமா மாறியிருக்கு.
நான் உடல்நிலை சரியில்லாம மூணு வருஷம் லண்டன்ல இருக்கிற மகள் வீட்டுக்கு போயிட்டேன். திரும்பி வந்தபின்புதான் இப்படி ஒரு விஷயம் நடந்திருக்குன்னே தெரிஞ்சுது. ரொம்ப அதிர்ச்சியாகிட்டேன். சில்க்கோட ஸ்பெஷலே அவரோட கண்ணுதான். ஆனால் இந்த வித்யா பாலன் கண்ணை சில்க் கண்ணோட ஒப்பிட்டு பார்க்க முடியுமா? சில்க் வேடத்தில் நடிக்கிற தகுதி தீபிகா படுகோனேவுக்கும், ஐஸ்வர்யா ராயுக்கும்தான் இருக்கு. தமிழ்ல எடுத்தா நமீதாவை வச்சு எடுக்கலாம். நான் கூட நமீதாவை பார்க்கும்போது இந்த விஷயத்தை சொல்லியிருக்கேன். இந்த படத்தை வெளிவர விடமாட்டேன். படத்தை எடுக்குற வரைக்கும் சும்மா இருப்பேன். படத்தை என்கிட்ட போட்டுக் ‌காட்டணும். அதுக்கு சம்மதிக்கலைன்னா படத்தை வெளியிட தடை கோரி வழக்கு போடுவேன், என்று கூறியுள்ளார்.
நடிகர் விணுசக்கரவர்த்தி, பல வருடங்களுக்கு முன்பே சில்க் கதையை எழுதி பிலிம் ரைட்டர்ஸ் யூனியன்ல பதிவு ‌செய்து வைத்திருக்கிறாராம். அதற்கான ஆதாரங்களை வைத்திருப்பதாக கூறும் விணு, சில்க்கைப் பற்றி வெளிவராத பல தகவல்களுடன் ஒரு படத்தை தமிழில் நமீதாவை வைத்து எடுக்கப் போகிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக